- Advertisement -

கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னேறி ஒரு நிலைக்கு வருவதற்கு எவ்வளவு போராட்டங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அவ்வளவு போராட்டங்களையும் சந்தித்து முன்னேறி விட்டால் உடன் இருப்பவர்களே பார்த்து பொறாமை பட்டு நம்முடைய முன்னேற்றத்தை தடை செய்வதற்காக ஏதாவது ஒரு பிரச்சினையை கொண்டு வருவார்கள். அப்படிப்பட்ட எதிரிகள் நம்மை விட்டு விலகி செல்வதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

நம் உடனே இருந்து கொண்டு நாம் படும் கஷ்டங்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருப்பவர்களே நம்முடைய முன்னேற்றத்தை தடை செய்யும் அளவிற்கு ஏதாவது ஒன்றை செய்வார்கள். இவர்கள்தான் அதை செய்தார்கள் என்பது நமக்கு நன்றாக தெரிந்திருந்தும் அவர்களை விட்டு விலக முடியாத சூழ்நிலையில் நாம் இருப்போம். அப்படிப்பட்ட தர்ம சங்கடமான சூழ்நிலையில் அவர்களே நம்மை விட்டு விலகிச் சென்றால் நன்றாக இருக்குமே என்று நினைப்போம். அப்படி அவர்களே விலகிச் செல்வதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் செய்வதால் நம்முடைய எதிரிகள் நம்மை விட்டு விலகிச் செல்வார்கள். அவர்களால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து நாம் வெளிவருவோமே தவிர்த்து எதிரிகள் ஒழியவோ, அழியவோ மாட்டார்கள். உங்களுடைய வேண்டுதலையும் நீங்கள் அப்படித்தான் செய்ய வேண்டும். பிறருக்கு தீங்கு விளைவிக்க இந்த பரிகாரத்தை செய்யக் கூடாது.

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டும். இரவு 9 மணிக்கு மேல் செய்ய வேண்டும். ஒரு கருப்பு நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த துணி சதுரமாக இருக்க வேண்டும். இதில் நம்முடைய முன்னேற்றத்தை யார் தடை செய்கிறார்களோ யாரால் நமக்கு பிரச்சனை ஏற்படுகிறதோ அவர்களின் பெயரை மஞ்சளில் எழுத வேண்டும்.

- Advertisement -

பிறகு இதில் ஒன்பது மிளகை வைக்க வேண்டும். அடுத்ததாக இதனுடன் ஐந்து காய்ந்த மிளகாய் வைத்து மூட்டையாக கட்டி வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்திற்கு முன்பாக வைத்து இந்த நபரால் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நீங்க வேண்டும், என்னை விட்டு இவர் விலக வேண்டும், இவரால் ஏற்பட்ட பாதிப்புகள் ஒன்றுமில்லாமல் போய்விட வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த மூட்டையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே சென்று அக்னி மூலையில் அதாவது தென்கிழக்கு மூலையில் ஒரு அகல் விளக்கை வைத்து இந்த மூட்டையை அதில் வைக்க வேண்டும். பிறகு இதில் வேப்ப எண்ணையை ஊற்றி அதை எரிய விட வேண்டும். அது முழுவதும் அப்படியே எரிந்து முடியட்டும். இப்படி நாம் செவ்வாய்க்கிழமை தோறும் செய்து வர நமக்கு யாரால் பாதிப்பு ஏற்படுகிறதோ அவர்கள் நம்மை விட்டு விலகி செல்வார்கள். அவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகளும் நம்மை விட்டு விலகும்.

இதையும் படிக்கலாமே:கணவன் மனைவி ஒற்றுமை பெற மஞ்சள் பரிகாரம்

இந்த தாந்திரீக பரிகாரத்தில் விருப்பம் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து எதிரிகளை தங்களுடைய வாழ்க்கையில் இருந்து விலகச் செய்ய முடியும்.

- Advertisement -