கணவன் மனைவி ஒற்றுமை பெற மஞ்சள் பரிகாரம்

fight turmeric
- Advertisement -

ஒரு குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய கணவனும் மனைவியும் சந்தோஷமாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்ல வேண்டும். அப்படி இல்லாத குடும்பம் நரகத்திற்கு சமமாக கருதப்படுகிறது. இன்றைய காலத்தில் பலரும் இந்த நரக வாழ்க்கையே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவு, வீட்டை விட்டு வெளியே செல்வது என்று பல பிரச்சினைகளில் கணவனும் மனைவியும் இருக்கிறார்கள். அவர்களின் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமையுடன் வாழ்வதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான மஞ்சள் பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்க போகிறோம்.

இதை பண்ண போதும் கணவன் மனைவி ஒற்றுமையை இருக்க

கணவனும் மனைவியும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் முதலில் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ வேண்டும். ஒருவர் கோபமாக இருந்தாலும் மற்றொருவர் அமைதியாக செல்ல வேண்டும் அதை விட்டுவிட்டு நீ பெரியவரா நான் பெரியவரா என்று பேசும் பொழுது தான் சண்டை சச்சரவுகள் வருகிறது. இதை சரி செய்வதற்கு மனரீதியான பயிற்சிகள் வேண்டும் என்றாலும் மற்றொரு பக்கம் சில பரிகாரங்களும் இருக்கிறது. அதை செய்தால் கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்வார்கள். அந்த பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு கொம்புள்ள விரலி மஞ்சள் தேவைப்படும். அதாவது விரலி மஞ்சளில் கிளைகள் இருப்பது போல் இருக்க வேண்டும். அந்த விரலி மஞ்சளாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். இந்த விரலி மஞ்சளை செவ்வாய்க்கிழமை அன்று வாங்கி வரவேண்டும். அதில் இருந்து இரண்டு விரலி மஞ்சள் எடுத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவி இவர்களின் உடைகளில் இருந்து நூலையோ அல்லது துணியையோ எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு விரலி மஞ்சளில் ஆணின் துணியை சுற்ற வேண்டும். மற்றொரு விரலி மஞ்சளில் பெண்ணின் துணியை சுற்ற வேண்டும். பாதி அளவு சுற்றிய பிறகு இந்த இரண்டு விரலி மஞ்சள்களையும் ஒன்றாக சேர்த்து இருவரின் துணிகளையும் ஒன்றாக சேர்த்து வைத்து சுற்ற வேண்டும். இப்படி சுற்றி முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இந்த விரலி மஞ்சள் வைத்து அதற்கு முன் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து கணவன் மனைவிக்கு இடையே இருக்கக்கூடிய சண்டை சச்சரவுகள் நீங்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். அன்றைய நாள் முழுவதும் இந்த விரலி மஞ்சள் உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கட்டும்.

- Advertisement -

மறுநாள் காலையில் இதை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய புற்று உள்ள கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய புற்றில் இந்த விரலி மஞ்சள் போட்டு விட்டு புற்றை சுற்றி மஞ்சள் தூளை தூவ வேண்டும். இதோடு குங்குமத்தையும் தூவ வேண்டும். பிறகு உங்களுடைய வேண்டுதலை மனதார கூறிவிட்டு நீங்கள் கொட்டிய மஞ்சளிலிருந்து ஒரு கைப்பிடி அளவு மட்டும் மஞ்சளை எடுத்து வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

மறுநாள் காலையில் கணவனும் மனைவியும் எடுத்து வந்த மஞ்சளை தாங்கள் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்க வேண்டும். இந்த முறையில் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்து வர எப்பேர்ப்பட்ட மன கருத்து வேறுபாடாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கி இருவரும் இணைபிரியாத தம்பதிகளாக மணம் ஒத்து வாழ்வார்கள்.

இதையும் படிக்கலாமே: கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாற

இந்த எளிமையான பரிகாரத்தை நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செய்து ஒற்றுமையுடன் வாழலாம்

- Advertisement -