
பலருக்கும் மாலை நேரத்தில் டீ குடிக்கும் பொழுது ஏதாவது ஒருவித சிற்றுண்டியை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இது பலருக்கும் வாடிக்கையாகவே இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் இப்பொழுதெல்லாம் விடுமுறை தினம் என்பதால் குழந்தைகள் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி அதன் மூலம் அடிக்கடி பசிக்கிறது என்று ஏதாவது ஒன்றை சாப்பிட ஆசைப்படுவார்கள்.
அப்படி அவர்கள் ஆசைப்படும்போது கடைகளில் விற்கக்கூடிய பொருட்களை கொடுப்பதற்கு பதிலாக இந்த முறையில் வீட்டில் இருக்கக்கூடிய எளிமையான அதேசமயம் ஆரோக்கியம் மிகுந்த உணவுகளை பயன்படுத்தி ஸ்நாக்ஸ் செய்து தருவதன் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தை நம்மால் பாதுகாத்துக் கொள்ள முடியும். இதில் நாம் சேர்க்கக்கூடிய அனைத்து பொருட்களும் வீட்டிலேயே இருக்கக்கூடிய பொருட்கள்தான் என்பதால் இந்த ஸ்நாக்ஸ் செய்வதற்காக கடைக்கு சென்று எதையும் வாங்க வேண்டும் என்ற அவசியமும் இருக்காது. இப்படிப்பட்ட ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஐ எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
முதலில் 2 குழி கரண்டி அளவு இட்லி மாவை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த இட்லி மாவு புளிக்காத மாவாக இருக்க வேண்டும். இதனுடன் கோதுமை மாவையும், ரவையையும் சேர்த்து கோதுமை மாவு மற்றும் ரவைக்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கட்டியில்லாமல் கலந்து கொள்ளுங்கள். இந்த மாவு தண்ணீராகவும் இருக்க கூடாது. கெட்டியாகவும் இருக்கக்கூடாது.
இப்பொழுது இதை ஒரு தட்டை போட்டு ஐந்து நிமிடம் மூடி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி நெய் உருகியதும் அதில் துருவி வைத்திருக்கும் தேங்காயை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும். பொன்னிறமாக ஆன பிறகு வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வாழைப்பழமும் தேங்காயும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்த பிறகு இதில் வெல்லத்தை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
வெள்ளம் உருக ஆரம்பித்ததும் ஒரு பின்ச் உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கெட்டியாகும் வரை நன்றாக கலந்து விட வேண்டும். இவை அனைத்தும் கெட்டியான உடன் அடுப்பை அணைத்துவிட்டு ஆற வைக்க வேண்டும். இந்த கலவை ஆரிய பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நாம் ஊற வைத்திருக்கும் மாவை எடுத்து அதில் ஆப்ப சோடா சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இந்த மாவில் நாம் பிடித்து வைத்திருக்கும் உருண்டையை சேர்த்து உருண்டையின் அனைத்து பக்கங்களிலும் மாவு படும்படி பிரட்டி விட வேண்டும். அடுப்பில் பணியார சட்டியை வைத்து அதில் ஒவ்வொரு குழியிலும் கால் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி நாம் உருண்டை போட்டு வைத்திருக்கிறோம் அல்லவா? அதை எடுத்து அப்படியே ஒவ்வொரு குழியிலும் போட வேண்டும். ஒரு நிமிடம் நன்றாகவே எந்த பிறகு இதை அப்படியே திருப்பி போட்டு மறுபுறமும் வேக வைத்து எடுக்க வேண்டும்.
இதை நாம் எண்ணையில் போட்டும் சுவியம் போல பொறித்து எடுக்கலாம். அதிக அளவு எண்ணெய் உடலுக்கு ஆரோக்கியம் இல்லை என்பதால் இப்படி பணியார கல்லில் போட்டு எடுக்கிறோம். ஆரோக்கியமான ஈவினிங் ஸ்நாக்ஸ் தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: மாங்காய் தொக்கு செய்முறை
இந்த முறையில் ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் சுட்டு வைப்பதற்குள் அனைத்து பணியாரமும் காலியாகி விடும்.