
இன்றிலிருந்து பெருமாளை வழிபட வேண்டும் என்று உங்களுடைய ஆழ்மனதில் நினைத்தாலே போதும். நீங்கள் செல்வந்தர்கள் ஆவதற்கு உண்டான யோகம் உங்களைத் தேடி வந்துவிட்டது என்று தான் அர்த்தம். இன்றைய தினம் பெருமாளுக்கு உரிய சனிக்கிழமை, வளர்பிறை ஏகாதேசி, இந்த நாளில் பெருமாள் வழிபாடு சிறப்பான பலனை கொடுக்கும். அது மட்டுமல்லாமல் சனிபகவானால் பிரச்சனை உள்ளவர்கள் இன்று, பெருமாளையும் அனுமனையும் வழிபாடு செய்ய, கஷ்டங்கள் விலகும் என்பதும் நம்பிக்கை.
இன்று மாலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி 7 முறை பெருமாளின் இந்த நாமத்தை சொல்பவர் வாழ்வில் இருக்கும் ஏழ்மையானது உடனடியாக விலகும். அந்த மந்திர வார்த்தை என்ன, இந்த மந்திர வார்த்தையை சொல்லும்போது கையில் வைத்துக் கொள்ள வேண்டிய அந்த 1 பொருள் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.
பூஜை அறையில் இருக்கும் பெருமாளுக்கு துளசி இலைகளை போடுங்கள். பஞ்சபாத்திரத்தில் இரண்டு துளசி இலை, ஒரு சொட்டு பச்சை கற்பூரத்தை போட்டு, தீர்த்தமாக வைத்து விடுங்கள். மகாலட்சுமிக்கு வாசம் நிறைந்த ஒரு பூவை சூட்ட வேண்டும். பெருமாள் வழிபாட்டில் மகாலட்சுமி இருக்க வேண்டும். மகாலட்சுமி வழிபாட்டில் பெருமாள் இருக்க வேண்டும்.
அதுதான் சரியான முறையும் கூட. இப்போது பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு வாசமான தூபம் போட்டுவிட்டு, பிரார்த்தனையை துவங்குங்கள். உங்களுடைய கையில் ஒரே ஒரு பச்சை நிறத்தில் இருக்கும் ஏலக்காயை வைத்துக் கொள்ளுங்கள்.
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா!!! ஏழு முறை பெருமாளை கோவிந்தா என்று அழைத்து, கையில் இருக்கும் ஏலக்காயை பெருமாள் பாதத்தில் சிறிது நேரம் வைத்து, மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பர்ஸிலோ பணம் வைக்கும் பெட்டியிலோ இந்த ஏலக்காயை வைத்து விடுங்கள்.
நிச்சயமாக இன்றிலிருந்து உங்கள் ஏழ்மை உங்களை விட்டு விலகி விட்டது என்று தான் அர்த்தம். இந்த பூஜையின் பலனை எவ்வாறு அறியலாம். ஏதோ ஒரு பணம் கைக்கு வராமல் தடையாகவே இருக்கிறது. ஆனால் அது உங்களுடைய பணம். கோர்ட் கேஸ் வழக்குகளில் சிக்கி இருக்கலாம். அடுத்தவர்களிடம் கடனாக கொடுத்து பணம் சிக்கி இருக்கலாம். சொத்து விற்காமல், பணம் கைக்கு வராத சூழ்நிலை இருக்கலாம்.
நல்ல வேலை கிடைக்காமல் கைக்கு வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவீங்க. தொழிலில் நஷ்டம் அடைந்திருப்பீர்கள். இப்படி ஏதோ வகையில் பணத்தடை உங்களுக்கு இருந்திருக்கும். ஏழ்மை உங்களுக்கு இருந்திருக்கும். அந்த ஏழ்மையானது விலகி அந்த பணத்தலையானது விலகி, உங்களுக்கு உண்டான செல்வ செழிப்பானது கொட்டத் தொடங்கக்கூடிய காலம்தான் இந்த வளர்பிறை ஏகாதசி என்று நினைத்து, இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் தை ஏகாதசி வழிபாடு
பெருமாள் உங்களுடனே பயணம் செய்வார். பெருமாள் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்தில் மகாலட்சுமியும் வந்து குடியேறுவால், நீங்கள் கேட்ட வரங்களை எல்லாம் வாரி வாரி கொடுப்பாங்க. நல்லது மட்டுமே நடக்கும். வறுமை நீங்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.