பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயார் இவர்கள் இருவரையும் நாம் வழிபாடு செய்யும்பொழுது நாம் வாழ்வதற்கு தேவையான அனைத்தும் நமக்கு கிடைக்கும். அதிலும் குறிப்பாக பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்று கூறப்படுகிறது. அனைத்து விதமான செல்வ வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும் என்ற ஆசைப்படுபவர்கள் பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி இவர்களை வழிபாடு செய்வதற்கு உரிய திதியாக திகழக்கூடியது ஏகாதசி திதி .அதிலும் குறிப்பாக பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை அன்று வரக்கூடிய இந்த தை ஏகாதசி நாளன்று எந்த முறையில் பெருமாளை வழிபாடு செய்தால் கடன் பிரச்சினை முற்றிலும் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் தீர்க்கும் தை ஏகாதசி வழிபாடு
இன்றைய காலத்தில் பலரும் வங்கியிலிருந்து கடன் வாங்கியோ அல்லது வேறு ஏதாவது நபரிடம் இருந்து கடன் வாங்கியோ அதற்காக மாத மாதம் வட்டி கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் அவர்களுடைய சம்பள பனம் வீடு வந்து சேர்வது மிகவும் கடினமாக இருக்கிறது. அப்படி இந்த கடன் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க வேண்டும் என்றால் அவர்களுக்கு இப்பொழுது இருப்பதை விட அதிகமான அளவு பண வரவு என்பது உண்டாக வேண்டும். இப்படி நமக்கு வரக்கூடிய பணவரவை விட அதிகமான பண வரவு ஏற்பட வேண்டும் என்னும் பட்சத்தில் நாம் கண்டிப்பான முறையில் பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் வழிபாடு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் அதிகப்படியான பணவரவு வருவதற்குரிய வழியை நமக்கு காட்டுவார்கள்.
பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி சனிக்கிழமை அன்று தை மாதத்தின் ஏகாதசி நாள் வருகிறது. அன்றைய தினம் இரவு 9:55 வரை இந்த ஏகாதசி திதி என்பது இருக்கிறது. அன்றைய தினத்தில் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது 7:30 மணியிலிருந்து 8:30 மணிக்குள்ளோ அல்லது 10:30 மணியிலிருந்து 11:30 மணிக்குள்ளோ அல்லது மாலை 5 30 மணியிலிருந்து இரவு 9.50 மணி வரை இருக்கக்கூடிய நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து இந்த வழிபாட்டை செய்யலாம்.
இந்த வழிபாட்டை வீட்டு பூஜை அறையில் தான் செய்ய வேண்டும். ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று அகல் விளக்குகளை வைத்து அதில் நெய் ஊற்றி தாமரைத் தண்டு திரி போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு இனிப்பு பொருளை செய்து வைத்துக் கொள்ளுங்கள். தரையில் ஒரு விரிப்பை விரித்து அதற்கு மேல் வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு பின்வரும் இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரித்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விடுங்கள். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு நெய்வேத்தியமாக வைத்த பிரசாதத்தை வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் பகிர்ந்து உண்ண வேண்டும்.
இந்த முறையில் நாம் சனிக்கிழமை வரக்கூடிய ஏகாதசி நாளன்று பெருமாளை வழிபாடு செய்வதன் மூலம் பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயாரின் அருளால் பணவரவு அதிகரிக்கும் அதன் மூலம் கடன் பிரச்சனையும் தீரும். பண வரவு அதிகரிப்பதற்காக நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும்.
மந்திரம்
“ஓம் நமோ ஸ்ரீ வெங்கடேசாய நமஹ”
இதையும் படிக்கலாமே:கோடி செல்வம் தேடி வரும் பெருமாள் வழிபாடு
எளிமையான இந்த வழிபாட்டு முறையை முழு நம்பிக்கையுடன் யார் ஒருவர் ஏகாதசி நாளன்று பெருமாளை நினைத்து செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் கடன் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் நல்ல சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.