- Advertisement -
வீட்டு குறிப்புகள்

ஃப்ரிட்ஜில் பழங்கள், காய்கறிகள் அழுகாமல் இருக்க

- Advertisement -

பொதுவாக ஃப்ரிட்ஜ் பயன்பாடு என்பது அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே இருக்க வேண்டும். பழங்கள் வைக்க வேண்டிய இடத்தில் பழைய ரசம் வைப்போர் தான் நம்மில் ஏராளம். காய்கறிகள், பழங்கள் வைக்கும் பொழுது அழுகாமல் இருக்க என்ன செய்வது? ஃப்ரிட்ஜ் பயன்பாடு குறித்து அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்களின் தொகுப்பினை தான் இந்த வீட்டு குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஃப்ரிட்ஜ் வைத்திருப்பவர்கள் முதலில் அந்தந்த சீதோசன நிலைக்கு ஏற்ப டெம்பரேச்சரை கவனமாக பார்த்து வைக்க வேண்டும். இன்பில்ட் என்றாலும் ஸ்டெபிலைசர் வைத்துக் கொள்வது நல்லது. ஃப்ரீசரில் அதிகம் ஐஸ் கட்டி கொள்ளும் பொழுது நடுவில் இருக்கும் பொத்தானை அழுத்தி விட வேண்டும், இதனால் ஃப்ரீசர் டோர் உடையாமல் பாதுகாக்கலாம்.

- Advertisement -

காய்கறிகள் மற்றும் பழங்கள் ஸ்டோர் செய்து வைக்கும் பொழுது பிளாஸ்டிக் பை பயன்படுத்தாதீர்கள். பிளாஸ்டிக் பாலித்தீன் கவர் பயன்படுத்துவதால் அதனால் ஈர பதத்தை உறிஞ்சிக் கொள்ள முடியாமல் சீக்கிரம் பொருட்கள் அழுகிப் போகின்றன. காட்டன் பைகள் அல்லது மெல்லிய காட்டன் துணிகளில் சுற்றி காய்கறிகள் மற்றும் பழங்களை தனித்தனியே வைக்கும் பொழுது அவ்வளவு சீக்கிரம் பழங்கள் மற்றும் காய்கறிகள் அழுகுவது கிடையாது. ஈரப்பதத்தை காட்டன் உறிஞ்சு கொள்ளும். எவ்வளவு நாட்கள் ஆனாலும் காய்ந்து போகுமே ஒழிய, அழுகிப்போக வாய்ப்பில்லை.

பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா இலைகள் போன்றவற்றை கூட காம்புகளை நீக்கிவிட்டு ஒரு மெல்லிய காட்டன் துணியில் வைத்து பாருங்கள், அப்படியே பிரஷ்ஷாக பச்சை பசேல் என நீண்ட நாட்களுக்கு இருக்கும். ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளுக்கு பாக்டீரியாக்கள் எல்லா இடங்களிலும் பரவக் கூடும் என்பதால் தனித்தனியாக பொருட்களை பாதுகாப்பாக மூடி வையுங்கள். திறந்த நிலையில் உணவினை வைக்க கூடாது. தேங்காயை அரைமூடியாக உடைத்து அப்படியே காட்டன் துணியில் சுற்றி வைக்கலாம். உரித்த வெங்காயம், உருளைக்கிழங்கு, பூண்டு போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது.

- Advertisement -

ஃப்ரிட்ஜில் எவர்சில்வர் பாத்திரங்களில் பொருட்களை அதிகம் வைப்பதை தவிர்க்க வேண்டும். அது போல பிளாஸ்டிக் டப்பாக்களையும் வரிசையாக அடுக்கி வைப்பதை காட்டிலும், காட்டன் பைகள் பயன்படுத்துவது சிறந்தது. சில பேர் ஐஸ் கியூப்கள் வைக்கும் பொழுது நீண்ட நாட்களுக்கு அப்படியே விட்டுவிடுவார்கள். தேவைப்படும் பொழுது எடுத்து பயன்படுத்துவார்கள், இப்படி செய்வதையும் தவிர்க்க வேண்டும். ஐஸ் கியூப் ரெண்டு நாட்களுக்கு பிறகு புதிதாக தண்ணீர் ஊற்றி மாற்றிக் கொள்ளுங்கள், இல்லையேல் தேவைப்படும் போது மட்டும் ஐஸ் கியூப்களை புதிதாக தயாரித்துக் கொள்ளுங்கள். ஃப்ரிட்ஜின் பின்புறத்தில் இருக்கக்கூடிய டப்பாவில் தண்ணீரை தேங்க விடாதீர்கள். இது கொசு பெருக்கத்தை உருவாக்கும். இதனால் நோய்கள் பரவும் அபாயம் உண்டு.

இதையும் படிக்கலாமே:
இட்லி மாவுக்கு பதிலாக உடுப்பி தக்காளி தோசை மாவு இதோ

இடம் காலியாக இருக்கிறது என்று எல்லாவற்றையும் வாங்கி நிரப்பி கொள்ளாதீர்கள். தேவையான பொருட்களை மட்டும் தேவையான நேரத்தில் பயன்படுத்துவது நல்லது. பிரிட்ஜ் மீது கவர் அல்லது துணி போடுபவர்கள் மேற்பகுதியில் மட்டும் போடுங்கள். பிரிட்ஜின் சைடு பகுதிகளில் மறையும் படி இருக்கக் கூடாது. இது அதிக வெப்பம் உண்டாகும், இதனால் பிரிட்ஜ் வெடிப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு. பிரிட்ஜ் வைத்திருப்பவர்கள் அதை சுற்றிலும் போதிய இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். காற்றோட்டமான பகுதிகளில் பிரிட்ஜ் இருப்பது பாதுகாப்பானது. தூக்கி எறியக்கூடிய எலுமிச்சை மூடிகளை ஒரு டப்பாவில் போட்டு மூலையில் ஃப்ரிட்ஜில் வையுங்கள், ஃபிரிட்ஜ் வாசனையாக இருக்கும்.

- Advertisement -