காலம் கண் போன்றது. இந்த காலத்தை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த வெற்றிகளை பெற வேண்டும் என்றால் காலம் தாழ்த்தாமல் நாம் செய்யக்கூடிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு செயலில் எந்தவித தடைகளும் ஏற்படாமல் இருக்கவும் அதே சமயம் தாமதம் ஏற்படாமல் இருக்கவும் நம்முடைய முயற்சி எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவிற்கு தெய்வ வழிபாடும் முக்கியம். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நமக்கு ஏற்படக்கூடிய தடை மற்றும் தாமதத்தை நீக்குவதற்கு விநாயகப் பெருமானை வழிபடும் முறையைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
தடை நீங்க விநாயகர் வழிபாடு
முழு முதல் கடவுள் ஆன விநாயகர் என்பவர் அனைத்து துன்பத்தையும் நீக்கி நல்லதை மட்டுமே தருவார் என்று பலரால் நம்பப்படுகிறது. நமது துன்பங்கள் அனைத்தும் நீங்கி மனம் புத்துணர்ச்சியுடன் நல்ல வகையில் யோசிக்கும் திறன்களை தூண்டச் செய்பவர் தான் விநாயகப் பெருமான். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை நாம் எந்த முறையில் வழிபட்டால் நம்முடைய காரியத்தில் இருக்கக்கூடிய தடைகளும் தாமதங்களும் நீங்கும் என்று பார்ப்போம்.
இந்த வழிபாட்டை சங்கடஹர சதுர்த்தி அன்று தான் செய்ய வேண்டும். சங்கடஹர சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து வாசலில் கோலமிட்டு எமகண்டம், ராகு காலம் இவை அனைத்தும் இல்லாமல் ஒரு நல்ல நேரத்தில் மஞ்சளில் பன்னீர் ஊற்றி இருபத்து ஏழு மஞ்சள் பிள்ளையார் பிடிக்க வேண்டும். இந்த மஞ்சள் பிள்ளையாருக்கு சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.
ஒவ்வொரு பிள்ளையாருக்கும் தனித்தனியாக மலர்கள் வைத்து வாழைப்பழம், வெற்றிலை பாக்கு அனைத்தையும் வைத்து ஊதுபத்தி, கற்பூரம் காண்பித்து விநாயகரின் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து நம் வேண்டுதலை நிறைவேற்றும் மாறு முழு மனதுடன் அவரை நம்பி வழிபட வேண்டும்.
தொடர்ந்து மூன்று நாட்கள் அந்த பிள்ளையாரை வீட்டில் வைத்து தினமும் ஊதுபத்தி, சூடம் காண்பித்து வழிபட வேண்டும். நான்காவது நாளில் அருகில் இருக்கும் ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் எடுத்து சென்று கரைக்க வேண்டும். இவ்வாறு கரைக்கும் பொழுது நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களும் துன்பங்களும் தீர வேண்டும் என்று முழு மனதுடன் வேண்டிக் கொண்டு கரைக்க வேண்டும்.
இவ்வாறு குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக செய்ய வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலம் கேதுவால் ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கும். விநாயகப் பெருமானின் அருளை பரிபூரணமாக பெற முடியும். அதோடு மட்டுமல்லாமல் நாம் செய்யும் காரியத்தில் இருக்கக்கூடிய தடைகளும் தாமதங்களும் நீங்கி காரிய வெற்றி உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர புதாஷ்டமி வழிபாடு
இந்த வழிபாட்டில் முழு நம்பிக்கை வைத்து விநாயகப் பெருமானை மனதார வழிபட்டு நம் வாழ்வில் இருக்கக்கூடிய தடை மற்றும் தாமதங்களை நீக்கி வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வோம்.