- Advertisement -
மற்றவை

உப்பு தண்ணீரால் படிந்த கறையை நீக்குவதற்கு இதை விட சுலபமான டிப்ஸ் இருக்கவே முடியாது. ஒருவாட்டி உங்க வீட்டில ட்ரை பண்ணி பாருங்க! குறிப்பா சமையலறை சிங்குக்கு பக்கத்துல.

நம்முடைய வீட்டு சமையலறையில் குறிப்பாக சிங்கிற்கு பக்கத்தில் உப்பு தண்ணீர் கறை படிந்து, அசுத்தமாக இருக்கும். எவ்வளவு தான் நம்முடைய மேடையை சுத்தமாக வைத்திருந்தாலும் அந்த வெள்ளைத் திட்டுக்கள், நம் சுத்தத்தை முழுமை பெற செய்யவே செய்யாது. உப்புத் தண்ணீரால் படிந்த கறைகளை முழுமையாக நீக்குவதற்கு, கடைகளில் நிறைய ஆசிட் இருக்கின்றது. ஆனால், இதையெல்லாம் பயன்படுத்தினால் நம்முடைய டைல்ஸ் கல்லாக இருந்தாலும் சரி, மார்பல் கல்லாக இருந்தாலும் சரி, சீக்கிரமே உடைந்து போவதற்கு வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆசிடில் இருந்து கிளம்பும் புகை எல்லோருக்கும் ஒத்து வராது. மூக்கில் போய் விட்டால் பின்பு பிரச்சனை தான்.

உங்கள் வீட்டு சிங்கிள் அல்லது பாத்ரூமில் படிந்திருக்கும் உப்புக் கறைகளை, இந்த முறைப்படி ஒரு முறை சுத்தம் செய்து பாருங்கள். இந்த பதிவில் உங்களுக்காக இரண்டு வகையான டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்று மார்பல் கல், டைல்ஸில் படிந்திருக்கும் உப்புத்தண்ணி கரைகளை எப்படி நீக்குவது? சிலபேர் வீடுகளில் மெட்டல் அதாவது எவர்சில்வர் போன்று சிங்க் போட்டு வைத்திருப்பார்கள். அதை எப்படி சுத்தம் செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் கருப்பு நிற கல்லினால் மேடை அமைத்து இருந்தால், வெள்ளை நிறத்தில் கரையானது நிறையவே தெரியுமல்லவா? இதை நீக்க பல் துலக்கும் பேஸ்ட் போதுமானது. பிளைன் பேஸ்ட் ஒன்றை வாங்கிக்கொள்ளுங்கள். ஆக்டிவ் ஸால்ட், கிராம்பு கலந்து பேஸ்ட் இதெல்லாம் தேவைப்படாது. வெள்ளை நிறத்தில் இருக்கும் எந்த பேஸ்டாக இருந்தாலும், அதை கொஞ்சம் அதிகமான அளவு உங்கள் வீட்டில் படிந்திருக்கும் உப்புத்தண்ணீர் கரையின் மேல் நன்றாக பரவலாக தடவி விட்டு விடுங்கள்.

அந்த பேஸ்ட் 1/2 மணி நேரம் வரை அப்படியே ஊறட்டும். அதன் பின்பாக மணல் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆத்து மணல், செம்மண் எந்த மணலாக இருந்தாலும் கொஞ்சம் கொறகொறப்பாக இருக்கும் பட்சத்தில் அதை சிறிதளவு எடுத்து எங்கெல்லாம் அடர்த்தியாக உப்புத் தண்ணீர் கறை இருக்கின்றதோ அதன் மீது தூவி, பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ஸ்டீல் நாரை, போட்டு கறகறவென தேய்த்து எடுத்தீர்கள் என்றால், ஒருமுறை சுத்தம் செய்யும் போதே 90% உப்பு தண்ணீரில் படிந்த கறை நீங்கிவிடும்.

- Advertisement -

அடுத்தபடியாக பாத்ரூமில் இருக்கும் ஸ்டீல் டேப் அல்லது ஸ்டீல் சிங்க், இதை எப்படி சுலபமாக சுத்தம் செய்வது? முதலில் ஒரு எலுமிச்சைப் பழச்சாறை முழுமையாக ஒரு கிண்ணத்தில் பிழிந்து கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவு பேக்கிங் சோடாவை போட்டு, நன்றாக கலந்து விட்டு ஒரு ஸ்க்ரப்பரில் தொட்டு, டேப் முழுவதும் தடவி நன்றாக ஊற வைக்க வேண்டும். (எலுமிச்சை பழ சாறுடன் மட்டும் தான் பேக்கிங் சோடா கலைக்கப்பட வேண்டும். தண்ணீர் சேர்க்கவே கூடாது.)

15 நிமிடங்கள் கழித்து மீண்டும் எலுமிச்சை பழ சாறு, சோடா உப்பு சேர்ந்த கலவையை தொட்டு,  டேப்பை நன்றாகத் தேய்த்து விட்டு சுத்தம் செய்யும்போது, பாதி கறை காணாமல் போயிருக்கும். அதன் பின்பாக சாதாரண வினிகரை எடுத்து நாரில் நனைத்து, டாப் முழுவதிலும் தடவி, ஸ்கரப்பரால் வைத்து தேய்த்து எடுத்தால், மீதமுள்ள அனைத்து கறைகளும் காணாமல் போய்விடும். உங்களது ஸ்டீல் சிங்காக இருந்தாலும், டேப்பாக இருந்தாலும், இப்படி செய்யும் பட்சத்தில் உடனடியாக பளபளப்பாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த இரண்டு டிப்ஸ் பிடித்திருந்தால் உங்களுடைய வீட்டில் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. கிச்சனும் பாத்ரூமும் சுத்தமா இருந்தா மனசுக்கு சந்தோஷமா இருக்கும்.

இதையும் படிக்கலாமே
எறும்பு போல எப்போவுமே, சுறுசுறுப்பா அலுப்பு தெரியாமல், வேலை செஞ்சுகிட்டே இருக்கணும்னா தினமும் இதை செய்தால் போதும்! வெற்றி உங்கள் கையில்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -