- Advertisement -
- Advertisement -

பெருமாளின் அவதாரம் தான் இந்த ஹயக்ரீவர். மனித உடல் கொண்டு, குதிரை முகம் கொண்டு அவதாரம் எடுத்து அசுரர்களை வதம் செய்த போது, ஹயக்ரீவர் ரொம்பவும் உக்கிரமாக கோபமாக இருந்தார். அந்த சமயம் லட்சுமி தேவி ஹயக்ரீவர் மடியில் அமர்ந்து அவரை சார்ந்த படுத்தியதாக புராணங்கள் சொல்கிறது.

ஹயக்ரீவர், தேவியோடு சேர்ந்து இருப்பதால் நாளைய தினம் நீங்கள் ஹயக்ரீவரை வழிபாடு செய்யும்போது, அந்த மகாலட்சுமி தேவியின் அருள் ஆசியும் உங்களுக்கு கிடைக்கும். சரஸ்வதிக்கு ஞானம் கற்பித்தவரே ஹயக்ரீவர் என்று நம்முடைய சாஸ்திரங்கள் சொல்கிறது. இப்படிப்பட்ட ஹயக்ரீவர் அவதரித்த நாளில், படிப்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், தங்களுடைய அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாம் ஹயக்ரீவர் வழிபாட்டை மேற்கொள்வது ரொம்ப ரொம்ப சிறப்பு.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் நாளை தினம் ஆவணி மாத பௌர்ணமி திதியும், ஆவணி ஆவிட்டமும் சேர்ந்து இருக்கிறது. இத்தனை நேர்மறை ஆற்றலும் நிறைந்து இருக்கக்கூடிய இந்த நாளில் ஹயக்ரீவரை நினைத்து சொல்ல வேண்டிய ஒரு எளிமையான மந்திரத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

படிக்கின்ற பிள்ளைகள் இருக்கும் வீட்டில் சின்னதாக ஒரு ஹயக்ரீவர் படத்தை பூஜையறையில் வைப்பது ரொம்ப ரொம்ப நல்லது. அப்படி உங்களுடைய வீட்டில் இந்த ஹயக்ரீவர் படம் இல்லை என்றாலும் பரவாயில்லை. பெருமாளை ஹயக்ரீவர் ஆக நினைத்துக் கொள்ளுங்கள். பெருமாளுக்கு முன்பாக ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை மூன்று முறை சொன்னாலும் போதும். அதுவும் படிக்கின்ற பிள்ளைகள் அவர்கள் வாயால் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் மற்றவர்களும் தங்களுடைய அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள ஹயக்ரீவர் மந்திர வழிபாடு சொல்லலாம். இருந்தாலும் கல்வி செல்லத்தில் சிறந்து விளங்க இந்த மந்திரம் ரொம்ப ரொம்ப அற்புதமான பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை சொல்ல வேண்டிய ஹயக்ரீவர் மந்திரம்.

ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே

இதையும் படிக்கலாமே: மனக்குழப்பம் நீங்க பௌர்ணமி பரிகாரம்.

வெறும் இரண்டே வரி மந்திரம் தான். சுலபமான இந்த மந்திரத்தை நாளைய தினம் திருமால் படத்திற்கு முன்பாக நின்று சொல்லி ஹயக்ரீவர் ஆசீர்வாதத்தை நிறைவாக பெற்றுக் கொள்ளுங்கள். கூடவே மகாலட்சுமியின் ஆசீர்வாதமும் சேர்ந்து கிடைக்கும். படிப்பில் ஆர்வம் இல்லாத பிள்ளைகள் அதிகம் மதிப்பெண் பெற இயலாமல் கஷ்டப்படும் பிள்ளைகளுக்கு இந்த பதிவு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -