- Advertisement -
- Advertisement -

முக அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலமாக இந்த காலம் திகழ்வதால் தான் அழகு சாதனங்களுக்கு அதிகமான அளவு இன்றைய தலைமுறை செலவு செய்து வருகிறார்கள். மேலும் எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும் பிரகாசமாக தெரிய வேண்டும் என்பதற்காக மேக்கப் உபயோகப்படுத்தும் வழக்கமும் இன்று பரவலாக பரவி வருகிறது. இந்த அழகு குறிப்பு குறித்த பதிவில் எந்தவித அழகு சாதனமும் மேய்க்கப்பும் இல்லாமல் முகத்தை ஜொலிக்க வைக்க கூடிய கேரட் கிரீமை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்பவர்கள் என்றும் இளமையாக திகழ்வார்கள். அப்படிப்பட்ட ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு நல்ல காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் முக்கியமான காய்கறிகளில் ஒன்று தான் கேரட். இந்த கேரட்டை நாம் தினமும் உட்கொள்வதன் மூலம் நம் உடல் தங்கம் போல் மின்னும் என்று கூறப்படுகிறது. அப்படி உண்ணுவதோடு மட்டும் அல்லாமல் இந்த கேரட்டை க்ரீமாக தயார் செய்து வெளிப்பூச்சாக பூசுவதன் மூலம் இன்னும் அதிக பலனை நம்மால் பெற முடியும்.

- Advertisement -

இந்த க்ரீமை செய்வதற்கு நமக்கு மூன்று பொருட்கள் இருந்தால் போதும். சிரமப்படாமல் எளிதாக கிடைக்கக்கூடிய பொருட்களாகவே தான் இந்த பொருட்கள் இருக்கிறது. முதலில் இரண்டு கேரட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு கேரட்டை துருவி கொள்ள வேண்டும். துருவிய இந்த கேரட்டை வெயிலில் நன்றாக உலர்த்த வேண்டும். அதில் இருக்கும் ஈரப்பதம் அனைத்தும் நீங்கும் அளவிற்கு உலர்த்தி எடுத்துக் கொள்ளுங்கள். வெயிலின் தன்மைக்கேற்றவாறு இரண்டிலிருந்து மூன்று நாட்கள் ஆகும்.

பிறகு இந்த கேரட்டை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு அந்த கேரட் மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் என்று ஏதாவது ஒரு எண்ணையை ஊற்ற வேண்டும். பிறகு அந்த பாட்டிலை மூடி போட்டு மூடி 24 மணி நேரம் அப்படியே வைத்துவிட வேண்டும். 24 மணி நேரம் கழித்து அந்த பாட்டிலில் இருக்கும் எண்ணையை மட்டும் தனியாக பிரித்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணையை நாம் தினமும் நம் முகம் கை கால் உடம்பு என்று அனைத்து இடங்களிலும் தடவுவதன் மூலம் நம் உடல் முழுவதும் வெண்மை அடைவதை நம்மால் உணர முடியும்.

- Advertisement -

இதோடு நிறுத்தாமல் நான்கு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு இந்த எண்ணெயை ஊற்றி நன்றாக கலந்து க்ரீம் பதத்திற்கு தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த க்ரீமையும் நாம் முகத்தில் உபயோகப்படுத்துவதன் மூலம் முகம் என்றுமே இளமையாகவும் பிரகாசமாகவும் தங்கம் போலவும் ஜொலிக்கும். தேவைப்படும் நேரங்களில் இந்த எண்ணையை நாம் கிரீமாக தயார் செய்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: முகம் பிரகாசமாக ஜொலிக்க ஃபேஸ் பேக்

இந்த எண்ணெயிலிருந்து தயார் செய்யும் க்ரீமை நம் முகம் மட்டுமல்லாமல் உடல் முழுவதுமே தேய்த்துக் கொள்வதன் மூலம் உடல் முழுவதும் பிரகாசிக்கும்.

- Advertisement -