முகம் பிரகாசமாக ஜொலிக்க ஃபேஸ் பேக்

face paste
- Advertisement -

முகம் எப்பொழுதும் பிரகாசமாக பார்க்க பளிச்சென்று இருந்தால் தான் பார்ப்பவருக்கு நம் மீது ஒருவித மரியாதை இருக்கும். அது நமக்கு ஒரு தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியும் கொடுக்கும். இதற்காகவே பலரும் அழகு விஷயத்தில் மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டு தங்களை பராமரித்துக் கொள்கிறார்கள். இதன் காரணமாக தான் இன்று பெருகி வரும் அழகு நிலையங்களும் கெமிக்கல் கலந்த அழகு சாதனங்களும் அதிக அளவு மக்களை கவர்ந்து கொண்டிருக்கிறது.

இப்படி செலவு செய்து தங்களை அழகுப்படுத்திக் கொண்டாலும் எல்லோருக்கும் இது ஒரே மாதிரியான பலனை தருவது கிடையாது. ஒரு சிலருக்கு என்ன தான் செலவு செய்து முகத்தை அழகுப்படுத்திக் கொண்டாலும் ஓரிரு நாட்களிலே மறுபடியும் பழையபடி டல்லாக மாறி விடும். இதனால் அவர்கள் முகம் எப்போதும் பொலிவிழந்தே காணப்படும். இதை சரி செய்ய அருமையான ஒரு ஃபேஸ் பேக்கை நாம் வீட்டில் எப்படி தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பொலிவிழந்த முகத்தை பிரகாசமாக மாற்ற

இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க நாம் முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் கடலை பருப்பை இரண்டு மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைத்து பின்னர் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் இதற்கு பாதாம் பிசின் ஒரு டேபிள் ஸ்பூன் தேவை. அதையும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக கொஞ்சமாக தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த கடலைப்பருப்பு பாதாம் பிசின் இரண்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு டீஸ்பூன் சந்தன பவுடர் ஒரு டீஸ்பூன் முல்தானிமெட்டி ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் கொஞ்சம் ரோஜா இதழ்கள் இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நல்ல கெட்டியான பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதை ஒரு சுத்தமான காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். ஒரு வாரம் வரை இந்த கிரீமை பயன்படுத்தலாம் அடுத்த முறை பயன்படுத்தும் போது மறுபடியும் அரைத்து பயன்படுத்துங்கள். இந்த பேக்கை பயன்படுத்தும் போது தண்ணீருக்கு பதிலாக ரோஸ் வாட்டர் பயன்படுத்தி குழைத்துக் கொள்ளுங்கள்.

இந்த ஃபேஸ் பேக்கை உங்கள் முகத்தில் பயன்படுத்துவதற்கு முன்பாக சுத்தமான தண்ணீர் கொண்டு முதலில் முகத்தை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த பேக்கை முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் வரை அப்படியே விடுங்கள். அதன் பிறகு தண்ணீர் வைத்து லேசாக மசாஜ் செய்வது போல முகத்தை அலம்பி விடுங்கள். இந்த பேக்கை நாம் தினமும் தொடர்ந்து பயன்படுத்தினாலும் நம்முடைய சருமத்திற்கு எந்த கேடும் இல்லை.

- Advertisement -

இதில் சேர்த்திருக்கும் பொருட்கள் அனைத்துமே நிறத்தை அதிகரித்து கொடுப்பதுடன் முகத்தை பொலிவாக மாற்றக் கூடியது. பாதாம் பிசின் முகத்திற்கு நல்ல ஒரு வழுவழுப்பைத் தன்மையை ஏற்படுத்தி முகத்தை மிருதுவாக்கும். இந்த பேக்கை ஒரு ஃபேஸ் வாஷ் போலவும் நம் தினமும் பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே: கருமையான முடிக்கு கரிசலாங்கண்ணி

இதை எந்த முறையில் பயன்படுத்தினாலும் முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் அழுக்கு கருந்திட்டுக்கள் போன்றவற்றை நீக்கி முகத்தை எப்போதும் பளிச்சென்று வைத்திருக்கும். முகத்தை எப்பொழுதும் பிரகாசமாக வைத்திருக்கும் இந்த எளிய பேஸ் பேக் முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் பயன்படுத்தி பலன் அடையுங்கள்.

- Advertisement -