- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

செல்வ செழிப்பை அதிகரிக்கும் வில்வ பழம்

- Advertisement -

ஒருவர் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமியின் அருள் என்பது கண்டிப்பான முறையில் வேண்டும். அப்படிப்பட்ட மகாலட்சுமி என்பவள் நிரந்தரமாக எந்த இடத்திலும் தங்க மாட்டார் என்று கூறப்படுகிறது. அதனால் நம்மால் இயலும் பட்சத்தில் மகாலட்சுமியை அடிக்கடி பூஜை செய்வதன் மூலம் தான் நம்முடைய வீட்டில் மகாலட்சுமியை தங்க வைக்க முடியும். அப்பொழுதுதான் செல்வ செழிப்புடன் நம்மால் வாழ முடியும். அந்த வகையில் மகாலட்சுமியை வீட்டிற்கு வர வைக்கவும் செல்வ செழிப்புடன் வாழ்வதற்கும் செய்ய வேண்டிய வில்வப் பழ பூஜையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மகாலட்சுமியை வழிபாடு செய்பவர்கள் மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய பொருட்களை வைத்து வழிபாடு செய்வார்கள். கல் உப்பு, தாமரைப்பூ, முத்து, ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம் போன்ற பொருட்களை எல்லாம் வைத்து வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். அந்த பொருட்களுள் மிகவும் முக்கியமான குறிப்பிடத்தக்க ஒரு பொருளாக திகழ்வதுதான் வில்வ பழம். ஏனென்றால் மகாலட்சுமி தாயார் வில்வ மரமாக இருந்து சிவபெருமானை வழிபட்டு தான் இழந்த அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெற்றார் என்றும் கூறப்படுகிறது. அதனால் வில்வம் மரமே மகாலட்சுமியின் அம்சம் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வில்வம் மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய வில்வ பழத்தை வைத்து மகாலட்சுமியின் ஒரு மந்திரத்தை கூறி வழிபாடு செய்தோம் என்றால் மகாலட்சுமி நம் வீட்டிற்கு வந்து செல்வ செழிப்பை வாரி வழங்குவார்.

- Advertisement -

இந்த வழிபாட்டை வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பிப்பது என்பது மிகவும் சிறப்பு. அதிலும் குறிப்பாக சுக்கிர ஹோரையில் இந்த பூஜையை நாம் செய்ய வேண்டும். தொடர்ச்சியாக 16 நாட்கள் இந்த பூஜையை செய்ய வேண்டும் என்பதால் பெண்கள் அவர்களுடைய வசதிக்கேற்ப தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதற்கு நமக்கு வில்வப் பழங்கள் 2 வேண்டும். வில்வ பழத்தை சுத்தம் செய்து மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். மகாலட்சுமி தாயாரின் படத்தையும் சுத்தம் செய்து மஞ்சள், சந்தனம், குங்குமம் போன்றவற்றை வைத்து வாசனை மிகுந்த மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் சுத்தமான பசுநெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். முதல் நாள் அன்று மகாலட்சுமி தாயாருக்கு நெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கலை வைப்பது மிகவும் சிறப்பு. பிறகு ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் அமர்ந்து கொண்டு இரண்டு கைகளிலும் இரண்டு வில்வப் பழங்களை வைத்து மகாலட்சுமி தாயாரின் பின்வரும் இந்த மந்திரத்தை 16 முறை கூற வேண்டும். 16 முறை கூறி முடித்த பிறகு அந்த வில்வ பழங்களை அப்படியே மகாலட்சுமியின் படத்திற்கு முன்பாக வைத்துவிட்டு கற்பூர தீப தூப ஆராதனை காட்டிக் கொள்ளுங்கள். இப்படி தொடர்ச்சியாக 16 நாட்களும் நம் பூஜை செய்ய வேண்டும்.

- Advertisement -

முதல் நாளும் கடைசி நாளும் மட்டும் நெய்வேத்தியமாக சக்கரை பொங்கலை வைத்துக் கொள்ளலாம். மற்ற நாட்களில் டைமண்ட் கற்கண்டைக்கு கூட வைத்து இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். 16 நாட்கள் வழிபாடு செய்த பிறகு இரண்டு வில்வ பழங்களில் ஒன்றையும் மகாலட்சுமிக்கு முன்பாக வைத்துவிட்டு மற்றொன்றை நாம் பணம் நகை வைக்கக் கூடிய இடத்தில் வைத்து விட வேண்டும். இப்படி இரண்டு மாதத்திற்கு ஒருமுறை இதே வில்வ பழத்தை வைத்து பதினாறு நாட்கள் நாம் பூஜை செய்தோம் என்றால் நம்மை விட்டு சென்ற மகாலட்சுமி நம்மை தேடி வருவாள். நம் வீட்டில் அனைத்து விதமான செல்வ செழிப்பும் உண்டாகும். ஒருவேளை வில்வப்பழம் கிடைக்கவில்லை என்பவர்கள் வில்வப் பலத்திற்கு பதிலாக முழு நெல்லிக்கனியை பயன்படுத்தலாம்.

மந்திரம்

- Advertisement -

ஆதித்யவர்ணே தபஸோதிஜாதோ வனஸ்பதிஸ்தவ வ்றுக்ஷோத பில்வ

இதையும் படிக்கலாமே: வாஸ்து நாள் பரிகாரம்

சக்தி வாய்ந்த இந்த மகாலட்சுமி பூஜையை முழுமனதோடு யார் ஒருவர் தொடர்ச்சியாக செய்கிறார்களோ அவர்களுக்கு வறுமை என்ற ஒரு நிலையே ஏற்படாது. எப்பேற்பட்ட வறுமையில் இருந்தாலும் படிப்படியாக நல்ல முன்னேற்றம் உண்டாகி செல்வ செழிப்புடன் வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -