- Advertisement -

வாஸ்து நாள் பரிகாரம்

- Advertisement -

நாம் வாழுகின்ற வீடு எந்த அளவிற்கு சிறப்பாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நாம் இருக்கக்கூடிய வீடானது அதன் சரியான அமைப்பில் இல்லாத பட்சத்தில் நம் வீட்டில் எந்த விதமான முன்னேற்றமும் இருக்காது. எவ்வளவுதான் முயற்சிகள் செய்தாலும் அந்த முயற்சியில் வெற்றி அடைய முடியாது. ஒரு சிலர் வீட்டை சரியான முறையில் வாஸ்து பார்த்து கட்டி இருப்பார்கள் இருப்பினும் அந்த வீட்டில் தடைகளும் தடங்கல்களும் வந்து கொண்டே இருக்கும். இதற்கு மனை சாஸ்திரம் ஒரு காரணமாக திகழ்கிறது. வீடு அமைந்திருக்கக் கூடிய மனை வாஸ்து சாஸ்திரப்படி இருந்தால்தான் அந்த வீட்டிற்குரிய பலனையும் நம்மால் பெற முடியும் என்பதால் நம்முடைய சிறப்பான வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான பங்கு வகிக்கக்கூடிய ஒன்றாக தான் வாஸ்து அமைகிறது. அப்படிப்பட்ட வாஸ்துவால் ஏற்பட்ட தோஷத்தை நீக்குவதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வாஸ்து நாள் பரிகாரம்

பலரும் வீட்டிற்கு வெளியே மிகவும் நன்றாகவும் சந்தோஷமாகவும் புத்துணர்ச்சியுடனும் சிறப்பாகவும் இருப்பார்கள். ஆனால் அவர்களே வீட்டிற்குள் வந்தவுடன் அவர்களுடைய பழக்க வழக்கங்களும், நடவடிக்கைகளும் மாறி எப்பொழுதும் எரிந்து விழுந்து வீட்டில் இருப்பவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டும் இருப்பார்கள். இதற்கு வீட்டின் அமைப்பே முக்கியமான காரணமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட வீட்டின் அமைப்பால் ஏற்பட்ட தோஷத்தை தான் வாஸ்து தோஷம் என்கிறோம். அந்த தோஷத்தை நீக்குவதற்கு உதவக்கூடிய ஒரு அற்புதமான நாளாக தான் வாஸ்து நாள் திகழ்கிறது. வாஸ்து நாளில் பலரும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதற்காகவும் வாஸ்து தோஷம் நீங்குவதற்காகவும் பலவிதமான பரிகாரங்களை செய்வார்கள். அப்படிப்பட்ட பரிகாரங்களில் ஒரு பரிகாரத்தை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை வாஸ்து நேரத்தில் தான் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டு பூஜை அறையில் வாஸ்து பகவானை நினைத்து தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். பிறகு அந்த தீபத்திற்கு முன்பாக ஒரு கிண்ணத்திலோ அல்லது அகல் விளக்கிலோ ஒரு துண்டு பச்சை கற்பூரம், ஒரு ஏலக்காய், ஒரு கிராம்பு மற்றும் ஒரு ரூபாய் நாணயம் இதை வைக்க வேண்டும். பிறகு வாஸ்து பகவானின் மூல மந்திரம் தெரியும் பட்சத்தில் அந்த மந்திரத்தை முழுமனதோடு கூற வேண்டும்.

அப்படி கூறி முடித்த பிறகு சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற வேண்டுதலோ அல்லது சொந்தமாக இடம் வாங்க வேண்டும் என்ற வேண்டுதலோ இருக்கும் பட்சத்தில் அந்த வேண்டுதலை கூறலாம். சொந்த வீட்டில் தான் இருக்கிறோம் ஆனால் வீட்டில் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வருகிறது என்பவர்கள் சொந்த வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தோஷங்களும் நீங்க வேண்டும் என்று முழு மனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு வேண்டி முடித்த பிறகு அந்த கிண்ணத்தை எடுத்து வீட்டு நிலை வாசலுக்கு வெளியே வைத்து விட வேண்டும். அன்றைய நாள் முழுவதும் அது அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலையில் அதை எடுத்து ஓடுகின்ற நீரில் போட்டு விட வேண்டும். இப்படி வாஸ்து நேரத்தில் நாம் செய்யக்கூடிய இந்த பரிகாரம் நம் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கி சிறப்பான மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைக்க உதவும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:சொந்த வீடு யோகம் தரும் வாஸ்து தீபம்

எளிமையான பொருட்களை வைத்து இந்த ஒரு பரிகாரத்தை முழுமனதோடு வாஸ்து பகவானை நினைத்து யார் ஒருவர் செய்கிறார்களோ அவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட பிரச்சனையும் தீர்ந்து சிறப்பான மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்