
நாம் எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் நம்முடைய குழந்தைகள் சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக குழந்தைகள் பிறந்ததிலிருந்து பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயமாக செய்து கொண்டு இருப்போம். என்னதான் பார்த்து பார்த்து செய்தாலும் ஒரு சில குழந்தைகள் தங்களுடைய படிப்புத்திறனில் மிகவும் மந்த நிலையில் பின்தங்கியே இருப்பார்கள். எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களால் நல்ல ஒரு அறிவுத்திறனோடு செயலாற்ற இயலாத ஒரு நிலை இருக்கும். அப்படி இருக்கும் சூழ்நிலையில் பெற்றோர்கள் மனம் வருந்து கஷ்டப்படுவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகள் தெளிவாகவும் புத்திசாலித்தனமாகவும் நடப்பதற்கு திருச்செந்தூர் முருகனை எந்த நாளில் சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அறுபடை வீடுகளின் இரண்டாம் படை வீடாக திகழக்கூடியது தான் திருச்செந்தூர். இது குருஸ்தலமாக கருதப்படுகிறது. அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையன் என்று முருகப்பெருமானுக்கு ஒரு பெயர் இருக்கிறது. அப்படிப்பட்ட முருகப் பெருமானின் குரு ஸ்தலமாக திகழக்கூடிய திருச்செந்தூருக்கு சென்று நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய படிப்பு, ஞானம், அறிவு போன்ற அனைத்துமே மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் யார் ஒருவர் வீட்டில் மந்த புத்தியுடன் பிள்ளைகள் இருக்கிறார்களோ அவர்களை குறிப்பிட்ட நாளில் திருச்செந்தூர் அழைத்து செல்ல அவர்களின் மந்த புத்தி தெளிவான அறிவாக மாறும்.
திருச்செந்தூர் முருகன் ஆலயத்திற்கு பௌர்ணமி தினத்தன்று செல்ல வேண்டும். அவ்வாறு செல்வதற்கு முன்பாக முருகப்பெருமானை நினைத்து ஒரு உண்டியலை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் தங்கள் பிள்ளைகளின் கையில் ஏதாவது ஒரு தொகையை கொடுத்து அந்த உண்டியலில் போடச் சொல்ல வேண்டும். திருச்செந்தூரில் பௌர்ணமி அன்று இரவு தங்கும் படி பார்த்துக் கொண்ட அதற்கேற்றார் போல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு பயணத்தை மேற்கொள்ளும் பொழுதும், முருகன் ஆலயத்தில் செய்யக்கூடிய செலவுகளிலும் தங்கள் பிள்ளைகள் உண்டியலில் சேர்த்து வைத்த தொகையை சேர்த்து செலவு செய்ய வேண்டும்.
பௌர்ணமி அன்று இரவு திருச்செந்தூரில் தங்கி மறுநாள் காலையில் எழுந்து கடலில் தீர்த்தம் ஆடிவிட்டு விஸ்வரூப தரிசனத்தை மேற்கொள்ள வேண்டும். விஸ்வரூப தரிசனத்தை செய்த பிறகு கோவிலுக்கு வெளியே வந்து 36 என்ற எண்ணிக்கையில் மஞ்சள் நிற லட்டுவை வாங்கி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கள் பிள்ளைகளின் கைப்பட தானம் தர வேண்டும். இப்படி தொடர்ச்சியாக ஒன்பது பௌர்ணமிகள் செய்யும் பொழுது முருகப்பெருமானின் அருளால் பிள்ளைகளின் மந்த புத்தி மாறும். ஒன்பது பௌர்ணமிகள் செல்ல இயலாது என்பவர்கள் குறைந்தபட்சம் மூன்று பௌர்ணமிகளாவது சென்று முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்களையும் தடைகளையும் நீக்கும் வழிபாடு
குரு ஸ்தலமாக திகழக்கூடிய திருச்செந்தூருக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்வதன் மூலம் முருகப்பெருமானே குருவாக இருந்து அவர்களை நல்வழிப்படுத்துவார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.