முக்காலங்களையும் உணர்ந்தவர் காலபைரவர் என்றும் கால பைரவரை வழிபாடு செய்பவர்களுக்கு நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறி கேள்விப்பட்டு இருப்போம். கால பைரவர் தான் அனைத்து காலங்களுக்கும் தேவராக திகழக்கூடியவர். அப்படிப்பட்ட காலபைரவரை நாம் முழுமனதோடு வழிபாடு செய்யும்பொழுது அவரின் அருளால் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு இதுவரை ஏற்பட்ட எப்பேர்பட்ட பிரச்சினைகளாக இருந்தாலும், தோஷங்களாக இருந்தாலும், கஷ்டங்களாக இருந்தாலும் அவை படிப்படியாக நீங்கி நல்வாழ்க்கை அமையும். அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கஷ்டங்களையும் தடைகளையும் நீக்கும் வழிபாடு
நவகிரகங்களில் நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் அதிகப்படியான கஷ்டத்தை தரக்கூடியவர் சனீஸ்வர பகவான். அப்படிப்பட்ட சனீஸ்வர பகவானுக்கு குருவாக திகழக்கூடியவர்தான் காலபைரவர். காலபைரவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் பாவ கிரகங்கள் என்று கூறக்கூடிய ராகு, கேது போன்ற கிரகங்களின் பாதிப்பில் இருந்தும் விடுபடுவதற்கு காலபைரவரின் வழிபாடு என்பது மிகவும் சிறப்பு மிகுந்ததாக இருக்கும். அப்படிப்பட்ட கால பைரவரை ஞாயிற்றுக்கிழமையில் நாம் மிகவும் எளிமையான முறையில் வழிபாடு செய்யலாம்.
கால பைரவரை வழிபாடு செய்வதற்கு உகந்த நேரமாக திகழ்வது ராகு காலம்தான். அதிலும் காலபைரவ வழிபாடு செய்வதற்கு உகந்த கிழமையாக திகழ்வது ஞாயிற்றுக்கிழமை. ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய ராகு காலம் என்பது மாலை 4.30 மணியிலிருந்து 6:00 மணி வரை இருக்கும். இந்த நேரத்தில் எந்த ஆலயத்தில் காலபைரவரின் சன்னதி இருக்கிறதோ அந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது இரண்டு அகல் விளக்கில் சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய், செவ்வரளி பூக்கள் இவற்றை வாங்கிக் கொடுத்து தங்களுடைய பெயரில் காலபைரவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
இவ்வாறு தொடர்ச்சியாக ஒன்பது வாரங்கள் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய ராகு காலத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு நவகிரகங்களால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான தோஷங்களும் நீங்குவதோடு அவர்கள் வாழ்வில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகளும் தடைகளும் நீங்கும் என்று கூறப்படுகிறது. ஒன்பது வாரங்கள் நிறைவடைந்த பிறகு 10வது வாரம் நம்மால் இயன்ற அளவு காலபைரவருக்கு அபிஷேகத்திற்காக பொருட்களை வாங்கித் தர வேண்டும். அதேபோல் வஸ்திரத்தையும் வாங்கி தர வேண்டும். நம்மால் இயன்ற அளவு தயிர் சாதத்தை செய்து நெய்வேத்தியமாக படைத்து அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு பிரசாதமாக தரவேண்டும். இப்படி தயிர்சாதம் செய்யும்பொழுது அதில் மாதுளம் பழ முத்துக்களை சேர்த்து செய்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: பணக்கார யோகம் பெற
அனைவராலும் எந்தவித கஷ்டமும் இல்லாமல் எளிமையாக செய்யக்கூடிய இந்த ஒரு வழிபாட்டை யார் ஒருவர் முழு மனதோடு செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகளும் தடைகளும் கஷ்டங்களும் தவிடு பொடி ஆகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.