- Advertisement -
மற்றவை

மருதாணி, கோன் எதுவும் தேவையில்லை, 2 நிமிசத்துல உங்க கை சிவக்க வீட்ல இருக்குற இந்த 2 பொருள் மட்டும் போதும்!

எல்லாருக்கும் மருதாணி என்றாலே தனி பிரியம் தான். முந்தைய காலத்தில் எல்லாம் நிறைய பேர் தங்களது வீட்டிலேயே மருதாணி செடி வளர்த்து வந்தார்கள். எனவே அடிக்கடி மருதாணி அரைத்து வீட்டில் இருக்கும் அனைத்து பெண்களும் தங்கள் கைகளில் வைத்து அழகு பார்ப்பார்கள். அதிலும் குறிப்பாக யாருடைய கை செக்கச் செவேலென சிவந்து போகிறதோ! அவர்கள் தங்களுடைய கணவர் மீது அதிக பிரியம் கொண்டவர் என்பதை குறிப்பதாக கூறுவார்கள். கன்னிப் பெண்களாக இருந்தால் வரப்போகும் கணவர் மீது அதிக பாசம் வைப்பார்கள் என்றும் கூறக் கேட்டிருப்போம். அத்தகைய மருதாணியை இந்த காலத்தில் கோன் வடிவில் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இவ்வகை மருதாணி கெட்டுப் போகாமல் இருக்க அதில் சேர்க்கப்படும் சில வேதி பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். பக்க விளைவுகள் இல்லாமல் நாம் வீட்டிலேயே எளிதாக இரண்டே இரண்டு பொருட்களை வைத்து இன்ஸ்டன்ட் மருதாணியை எப்படி செய்யலாம் என்று இப்பதிவில் காணலாம் வாருங்கள்.

இந்த மருதாணியின் மூலம் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாத, உடலுக்கு கேடு விளைவிக்காத மருதாணி உங்களுக்கு கிடைக்கும். இரண்டே நிமிடத்தில் நன்றாக சிவந்து அழகான மருதாணி போல் உங்களது கைகள் காட்சித் தரும். எங்கேனும் திடீரென்று வெளியே செல்கிறீர்கள் என்றால், அந்த நேரத்தில் கோன் வைத்துக் கொள்ள நேரம் இருக்காது. அது போன்ற சமயங்களில் இந்த மருதாணி பெருமளவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் சீரகம் மற்றும் வெள்ளை சர்க்கரை இதற்கு தேவையான பொருட்கள் ஆகும். இந்த இரண்டு பொருட்களை வைத்து மருதாணி சுலபமாக தயாரித்து விடலாம். ஜீரகம் இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சர்க்கரையும் இரண்டு ஸ்பூன் சேர்த்து கொள்ளுங்கள். இதனை அடி கனமான ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். கண்டிப்பாக பாத்திரம் அடி கனமாக இருப்பது அவசியமான ஒன்று. இரண்டையும் கலந்து விட்டு நடுவில் இருக்கும் சீராக கலவையை சிறிது நீக்கி இடைவெளி விட்டுக் கொள்ளுங்கள். அந்த இடைவெளியில் சிறிய காலியான கிண்ணம் ஒன்றை வைத்து விடுங்கள்.

பின்னர் பாத்திரத்தின் மேல் காற்று வெளியே போகாதவாறு வேறு ஒரு பாத்திரத்தை தண்ணீர் நிரப்பி வைத்து விடுங்கள். இதில் அவ்வளவு தான் வேலை. வேறு எதுவும் சேர்க்க அவசியமில்லை. உள்ளே இருக்கும் சீரகமும் சர்க்கரையும் கலந்து ஆவியாகி காற்று வெளியே வராத படி மூடி வைத்ததால் அந்தக் கிண்ணத்தில் சீரக நீர் சேர்ந்து கொண்டிருக்கும். அந்த நீர் தான் நமக்கு இப்போது தேவை. ஒரு ஐந்து நிமிடம் கழித்து மேலே இருக்கும் நீர் சூடாகியதும் திறந்து பார்க்கலாம். உள்ளே சீரக நீர் நீங்கள் காலியாக வைத்த அந்த கிண்ணத்தில் நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

இந்த சீரக நீருடன் தேவையான அளவு குங்குமம் சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளுங்கள் உடனடி மருதாணி நமக்கு ஐந்தே நிமிடத்தில் தயாராகிவிட்டது. இந்த மருதாணியை காது குடையும் பட்ஸை வைத்து அழகாக உங்கள் கையில் உங்களுக்குப் பிடித்த மருதாணி டிசைனை வரைந்து கொள்ளுங்கள். மருதாணி சீக்கிரமே காய்ந்துவிடும். நன்றாக பசை போல் ஒட்டிக் கொள்ளும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் இருக்கும் அனைவரும் வைத்து மகிழலாம்.

ரெண்டு நிமிடத்தில் காய்ந்தவுடன் கைகளை கழுவி விட்டால் போதும்! நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு செக்கச் செவேலென இன்ஸ்டன்ட் மருதாணி கிடைத்துவிடும். நாம் மருதாணி செடியிலிருந்து இலையாக பறித்து அரைத்து வைத்தாலும் இந்த அளவிற்கு சிவக்காது என்றே கூறலாம். மேலும் மருதாணியில் குளிர்ச்சி தன்மை அதிகம் இருப்பதால் சிலருக்கு சளி பிடித்துக் கொள்ளும். ஆனால் இந்த மருதாணியினால் எந்த உபாதைகளும் உங்களுக்கு வராது. இரண்டு நாட்களில் அதுவாகவே மறைந்துவிடும். பின்னர் மீண்டும் வேறொரு டிசைனை விரும்பியபடி நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
பெண்கள், சமையலறையில் இந்த சின்ன சின்ன தவறுகளை செய்தால் கூட, வீட்டிற்கு பணக் கஷ்டமும், மன கஷ்டமும் ஏற்படும்.

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Instant maruthani in Tamil. Maruthani tips in Tamil. Jeera maruthani. Instant henna for hands. Instant mehndi ingredients.

- Advertisement -