
உங்கள் கையை மீறி, விதியின் வசத்தால் ஏமாந்து, நீங்கள் சம்பாதித்த சொத்து, செல்வம், பணம் பெயர் புகழ், எல்லாவற்றையும் இழந்து விட்டீர்களா. இழந்த அனைத்தையும் மீட்டு தருவதற்கான ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவில் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். விதியின் பயனால் பணத்தை கொடுத்து ஏமாந்து இருப்போம். நகையை கொடுத்து ஏமாந்து இருப்போம். சொத்து ஏமாந்து இருப்போம்.
நம்முடைய பெயர் புகழ் அந்தஸ்தை கூட சில நேரங்களில் ஏதாவது இடத்தில் ஏமாந்து அடமானம் வைத்திருப்போம். இதுபோல நீங்கள் எந்த விஷயத்தை இழந்திருந்தாலும் சரி. இழந்ததை திரும்பவும் மீட்டு தரக்கூடிய ஒரு அற்புதம் வாய்ந்த விளக்கு தான் இது. இந்த விளக்கை சனிக்கிழமை மாலை ஏற்றும் பொழுது அபரிவிதமான பலன் கிடைக்கும். நீங்கள் இருந்ததை எல்லாம் திரும்பவும் மீட்டெடுப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். இழந்ததை மீட்டு தரும் அதிசக்தி வாய்ந்த விளக்கை எப்படி ஏற்றுவது, வழிபாட்டை எப்படி மேற்கொள்வது ஆன்மீகம் சார்ந்த தகவல் இந்த பதிவில் உங்களுக்காக.
சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு மேலாக சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு, இருள் சூழும் நேரத்தில் உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இந்த விளக்கை ஏற்றி வைக்கலாம். ஒரு மண் அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் ஊற்றி, அந்த எண்ணெயில் 2 சிட்டிகை வசம்பு பொடி, ஆவாரம் பூ 2, மஞ்சள் பொடி 2 சிட்டிகை, போட்டு பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இவ்வளவுதான்.
வசம்பு பொடி, ஆவாரம் பூ காய்ந்ததாக இருந்தாலும் பரவாயில்லை. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இந்த இரண்டு பொருட்களை வாங்கி விளக்கு போட பயன்படுத்திக் கொள்ளலாம். மஞ்சள் பொடி நம் வீட்டிலேயே இருக்கும். இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு இந்த விளக்கு முன்பாக அமர்ந்து, நீங்கள் என்ன விஷயத்தை இழந்தீர்களோ, அந்த விஷயம் உங்களுக்கு மீண்டும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஒரு கோரிக்கைக்காக இந்த விளக்கை ஏற்ற துவங்குகள். வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமை அன்று இதே போல தீபம் ஏற்றி ஒரே ஒரு கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். கடனாக கொடுத்த பணம் நீண்ட நாட்களாக திரும்பவும் வரவில்லை. அந்த பணம் மீண்டும் வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்யலாம். நியாயமாக உண்மையாக பிரார்த்தனை வைக்க வேண்டும்.
விளக்கு 1 மணி நேரம் போல வீட்டில் எரிந்தால் போதும். உங்களுடைய சங்கல்பத்தை நீங்கள் கடவுளிடம் 10 நிமிடம், 20 நிமிடம் இவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் பிரார்த்தனை செய்யலாம். ஆனால் நம்பிக்கை உண்மையாக இருக்க வேண்டும். இந்த விளக்கிற்கு முன்பு உங்கள் கஷ்டத்தை நீங்கள் சொல்கிறீர்கள். அந்த கஷ்டம் உடனடியாக விலகப் போகிறது, உங்கள் பிரச்சனை உடனடியாக தீரப் போகிறது.
இதையும் படிக்கலாமே: சனிக்கிழமை ஆயில்ய நட்சத்திரம் வழிபாடு
உங்கள் கையை விட்டு சென்ற பணம் உடனடியாக உங்கள் கைக்கு மீண்டும் வரப்போகிறது என்ற முழு நம்பிக்கையோடு இந்த விளக்கத்திற்கு முன்பு நீங்கள் வைக்கும் வேண்டுதல் உடனடியாக பலிக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. குறைந்தபட்சம் 3 வாரம் சனிக்கிழமை அதிகபட்சம் 5 வாரம் சனிக்கிழமை இந்த விளக்கை ஏற்றி பாருங்கள். நிச்சயம் எதிர்பாராத நல்லது நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.