நாளைய தினம் சனிக்கிழமை 28-6 2025 ஆம் தேதி காலை 10:03 மணிக்கு பிறகு ஆயில்ய நட்சத்திரம் பிறக்கவிருக்கிறது. ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாட்களில், நாகர் வழிபாடு செய்தால் நாக தோஷத்தாலோ, ராகு கேது தோஷத்தாலோ, ராகு கேது திசை வரும்போது நமக்கு பெரிய பாதிப்புகள் வராது என்று சொல்லப்பட்டுள்ளது. சர்ப தோஷங்கள் எல்லாம் விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது.
உங்களுடைய ஜாதக கட்டத்தில் ராகு கேது தோஷம், நாக தோஷம் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி. இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம். கெட்ட நேரம் வரும் சமயத்தில் நீங்கள் செய்த இந்த வழிபாடு உங்களுக்கு உதவியாக இருக்கும். நாளைய தினம் நாம் ஆயில்ய நட்சத்திரத்தன்று செய்ய வேண்டிய நாகர் வழிபாடு பற்றிய சில தகவலைத்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
ஆயில்ய நட்சத்திரத்தன்று செய்ய வேண்டிய வழிபாடு
நாளைய தினம் 10 மணிக்கு மேலாக வீட்டு பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த கோவிலில் நாகர் சிலைகள் இருக்க வேண்டும். அரச மரத்தடியில் இதுபோல நாகர் சிலைகள் வைத்திருப்பார்கள் அல்லது ஏதாவது குளத்தங்கரையில் நாகர் சிலைகள் வைத்திருப்பார்கள். நாகர் சிலைக்கு உங்கள் கையால் முதலில் தண்ணீரில் அபிஷேகம் செய்ய வேண்டும். முடிந்தால் கொஞ்சம் பசும்பால் கொண்டு போய் அபிஷேகம் செய்யலாம்.
பிறகு மஞ்சள் கலந்த தண்ணீரை கொண்டு அந்த சிலைகளுக்கு அபிஷேகம் செய்து சிலை முழுவதும் மஞ்சள் பூசி, குங்குமப்பொட்டு வைத்து, பூ வைத்து வெற்றிலை பாக்கு, பூ பழம் படைத்து ஊதுவத்தி ஏற்றி, இரண்டு மண் அகல் விளக்குகள் ஏற்றி வைத்து, அந்த நாகர் சிலையை 27 முறை வலம் வர வேண்டும். வெற்றிலை பாக்கு மேல் ஒரு மஞ்சள் கயிறை வைத்து வழிபாடு செய்து விட்டு வழிபாடு முடிந்து உடன் அந்த கையை எடுத்து கையில் கட்டிக் கொண்டால் மிக மிக நல்லது. மிக மிக எளிமையான வழிபாடுதான். இந்த வழிபாட்டை நாளைய தினம் செய்யும்போது அதி அற்புதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.
சில பேருக்கு பாம்புகளை அடித்ததன் மூலம் தோஷம் வந்திருக்கும். சில பேருக்கு அடிக்கடி பாம்பு கனவில் வரும். பாம்பு துரத்துவது போல கனவு வரும். சில பேர் வீடுகளுக்கு அடிக்கடி பாம்பு வரும். சில பேருக்கு ஜாதக கட்டத்திலேயே சர்ப தோஷம் இருக்கும். போன ஜென்மத்திலிருந்து கர்ம வினை உங்களை தொடர்ந்து வந்து பிரச்சனைகளை கொடுக்கும்.
இதுபோல பிரச்சனைகளிலிருந்து விடுபட இந்த பரிகாரம் நிச்சயம் உதவியாக இருக்கும். நீங்கள் இதற்கு முன்பு பாம்புகளை அடித்திருந்தால் கூட கட்டாயம் நாளைய தினம் இந்த வழிபாட்டை செய்து விடுங்கள். கண்ணுக்கு தெரியாத தோஷங்களும் விலகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் விக்னேஸ்வரர் வழிபாடு
இதுபோல நாகர் சிலை உங்கள் வீட்டு பக்கத்தில் எதுவும் இல்லை என்றால், நாகாத்தம்மன் கோவில், அங்காள ஈஸ்வரி, பிரத்தியங்கரா இதுபோல அம்மன்களுடைய தலையில் பாம்பு கிரீடமாக இருக்கும். அதுபோல கோவில்களில் சென்று கூட நீங்கள் வழிபாட்டை மேற்கொள்ளலாம். நல்ல பலன் கிடைக்கும், நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டில் நம்பிக்கை இருந்தால் இவைகளை பின்பற்றி பலன் பெறலாம்.