
ஒவ்வொரு வருடப்பிறப்பும் மிகவும் சிறப்பு மிகுந்ததாக திகழ்கிறது. வருடப்பிறப்பான முதல் நாள் அன்று நாம் என்ன செய்கிறோமோ அதை அந்த வருடம் முழுவதும் செய்வோம் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் பலரும் புத்தாடை உடுத்திய அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை செய்வார்கள். முடிந்த அளவிற்கு நல்ல செயல்களில் ஈடுபடுவார்கள். இப்படி செய்வதோடு மட்டுமல்லாமல் குலதெய்வத்தின் அருளை முதல் நாளே நாம் பெற்றோம் என்றால் அந்த ஆண்டு முழுவதும் நமக்கு குலதெய்வத்தின் அருள் கிடைக்கும் அல்லவா? அதற்கு செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும், எந்த ஒரு நல்லது நடக்க வேண்டும் என்றாலும் அதற்கு குலதெய்வத்தின் அருள் என்பது கண்டிப்பாக வேண்டும். குலதெய்வத்தின் அருள் இருந்தால்தான் மற்ற தெய்வ வழிபாட்டில் கிடைக்கக்கூடிய பலன் கூட முழுமையாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குலதெய்வத்தின் அருள் வருடம் முழுவதும் கிடைப்பதற்கு ஜனவரி ஒன்றாம் தேதி ஏற்ற வேண்டிய தீபம் மற்றும் கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.
புதன்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய ஜனவரி ஒன்றாம் தேதி அன்று காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்களுக்கு மலர்களை சாற்றிக் கொள்ளுங்கள். பிறகு எப்பொழுதும் ஏற்றுவது போல் தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். அதோடு சேர்த்து ஒரு சிறிய தாம்பாள தட்டில் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை பரப்பி அதற்கு மேல் ஒரு விளக்கை வைத்து அந்த விளக்கில் சுத்தமான பசு நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபத்தை ஏற்றும்பொழுது குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு ஏற்ற வேண்டும். குலதெய்வத்தின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்திற்கு முன்பாகவும் இந்த தீபத்தை ஏற்றலாம். இதோடு மட்டுமல்லாமல் அந்த நேரத்தில் தங்களால் எந்த நெய்வேத்தியத்தை செய்ய முடியுமோ அதை செய்து வைக்க வேண்டும். அப்படி எதுவுமே செய்ய முடியாது என்னும் பட்சத்தில் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், பால், ஒரு டம்ளரில் தண்ணீர், கற்கண்டு, உலர் திராட்சைகள் இப்படி எதை வேண்டுமானாலும் நெய்வேத்தியமாக வைக்கலாம்.
இப்படி வைத்து முடித்துவிட்டு ஓம் குலதெய்வமே வசி வசி என்னும் மந்திரத்தை 27 முறை குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு கூற வேண்டும். இந்த மந்திரத்தை கூறி முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்ட வேண்டும். இந்த நேரத்தில் குலதெய்வமே நம்மை தேடி நம் வீட்டிற்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது. அப்படி வருடத்தின் முதல் நாளே நம் வீட்டை தேடி வரக்கூடிய குலதெய்வம் அந்த வருடம் முழுவதும் நம் வீட்டில் இருப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:கஷ்டங்கள் தீர்ந்து சிறப்பான வாழ்க்கை அமைய
முழு மனதோடு குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு ஜனவரி ஒன்றாம் தேதி இந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து பாருங்கள். குலதெய்வத்தின் அருளால் அனைத்து விதமான நன்மைகளும் 2025 ஆம் ஆண்டு கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.