- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகஷ்டங்கள் தீர்ந்து சிறப்பான வாழ்க்கை அமைய

கஷ்டங்கள் தீர்ந்து சிறப்பான வாழ்க்கை அமைய

- Advertisement -

நாம் ஒவ்வொருவருமே இதுவரை நாம் பட்ட கஷ்டத்தை இனிமேல் படக்கூடாது என்றுதான் ஆசைப்படுவோம். அதேபோல்தான் இந்த 2024 ஆம் ஆண்டில் நாம் பட்ட கஷ்டங்களும் அவமானங்களும் அசிங்கங்களும் 2025 ஆம் ஆண்டு தொடரக்கூடாது என்றும் சிறப்பான வாழ்க்கை அமைய வேண்டும் என்றும் நினைப்போம். இது அப்படியே நடப்பதற்கு இந்த வருடத்தின் கடைசி நாளான டிசம்பர் 31ஆம் தேதி செய்ய வேண்டிய வழிபாடு மற்றும் பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கஷ்டங்கள் தீர்ந்து சிறப்பான வாழ்க்கை அமைய

ஒவ்வொரு வருடமும் முடிந்து புது வருடம் பிறக்கும் பொழுது அந்த வருடத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்க வேண்டும் புது வருடத்தில் புதிய வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். அதனால்தான் புது வருடம் பிறக்கக்கூடிய நாளன்று ஆலயத்திற்கு சென்று தெய்வ வழிபாட்டில் ஈடுபடவும் செய்வோம். அந்த சமயத்தில் பலரது வேண்டுதலுமே இந்த வருடம் நன்றாக இருக்க வேண்டும், தொழில் சிறப்பாக நடக்க வேண்டும், படிப்பில் சிறந்து விளங்க வேண்டும், குடும்பத்தில் சந்தோஷம் நிலவ வேண்டும் என்று நேர்மறையான எண்ணங்களை கொண்டு வழிபாடும் செய்வார்கள். அவை அனைத்தும் நிறைவேற வேண்டும் என்னும் பட்சத்தில் நம்முடைய கஷ்டங்களை 2024 ஆம் ஆண்டின் கடைசி நாளே முடித்துவிட்டு 2025ஆம் ஆண்டின் முதல் நாள் புதிதாக வாழ்க்கையை தொடங்குவது போல் பாவித்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

2024 ஆம் ஆண்டு கடைசி நாளான டிசம்பர் 31ஆம் தேதி அன்று அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அந்த ஆலயத்தில் முருகப்பெருமானுக்கு மூன்று காலமும் அபிஷேக ஆராதனை நடக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை மூன்று காலமும் நடைபெறவில்லை என்றால் ஒரு காலமாவது நடைபெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அபிஷேக ஆராதனை நடைபெறாத ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதில் எந்தவித பலனும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முருகன் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானிடம் இன்றோடு என்னுடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் நாளை முதல் புதிய வாழ்க்கை முன்னேற்றமான வாழ்க்கை ஏற்பட வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். அதை போல் அன்று இரவு அதாவது டிசம்பர் 31-ஆம் தேதி அன்று இரவு ஒரு பேப்பரில் இந்த வருடம் முழுவதும் என்னென்ன கஷ்டங்களை நாம் அனுபவித்தோம், என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தோம் என்பதை எழுத வேண்டும்.

- Advertisement -

எழுதிய அந்த பேப்பரை சிறிது கற்பூரத்தை வைத்து எரித்து விட வேண்டும். பிறகு ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை ஒரு பக்கெட் தண்ணீரில் போட்டு நன்றாக கலந்து குளித்துவிட்டு படுத்து உறங்க வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் நம்மை பிடித்த தரித்திரம் அனைத்தும் நீங்கும். 2025 ஆம் ஆண்டு புதிதான ஒரு ஆண்டாக பிறப்பது போல் நம்முடைய வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:மூன்று காலப் பாவங்கள் நீக்கும் திருநீறு

2024 ஆம் ஆண்டு கடைசி நாளான டிசம்பர் 31ஆம் தேதி முழு நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டையும் பரிகாரத்தையும் செய்பவர்களுக்கு அவர்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நல்ல ஆண்டாக 2025 ஆம் ஆண்டு பிறக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்