- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

கிரகண சமயத்தில் இந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் தீய கதிர்வீச்சு நீங்கும் தெரியுமா ?

பொதுவாக நாம் வீடுகளில் விளக்கேற்றுகையில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், வேம்பு, இலுப்பை போன்ற எண்ணெய்கள் கொண்டு விளக்கேற்றுவது வழக்கம். ஆனால் கடலை எண்ணெய் கொண்டு யாரும் விளக்கேற்றுவது கிடையாது. நம் முன்னோர்களும் கடலை எண்ணெய் கொண்டு விளக்கேற்ற கூடாது என்றே நமக்கு கற்பித்துள்ளனர்.

கடலை எண்ணெயில் இருந்து வரும் ஒரு வித நெடியாது சில உடல் உபாதைகளை விளைவிக்கு என்பதாலேயே அதில் நாம் விளக்கேற்றுவது கிடையாது. ஆனால் கடலை எண்ணெய் கொண்டு கிரகண சமயங்களில் மட்டும் விளக்கேற்றலாம் என்று நம் முன்னோர்கள் கூறிச்சென்றுள்ளனர்.

- Advertisement -

பொதுவாக கிரகணம் பற்றி அனைவரும் அறிந்திருப்போம். கிரகணத்தால் ஏற்படும் கதிர்வீச்சு மனிதர்களுக்கு சில தீமைகளை ஏற்படுத்தும் என்பது அறிவியல் ரீதியான உண்மை. இதனாலேயே கிரகணம் நடக்கும் சமயங்களில் சாப்பிட கூடாது, கர்ப்பிணி பெண்கள் வெளியில் வரக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

அது போன்ற கிரகண சமயங்களில் கடலை எண்ணெய் கொண்டு வீட்டில் தீபம் ஏற்றுவது சிறப்பு. வழக்கமான விளக்கை பயன்படுத்தாமல் இதற்காகவே ஒரு விளக்கை வைத்து கிரகணத்தன்று மட்டும் கடலை எண்ணெய் கொண்டு அதில் தீபம் ஏற்றுவதன் பயனாக அதில் இருந்து வரும் நெடியானது கிரகணத்தால் உண்டான தீய கதிர்வீச்சை அழிக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
ஆபத்துக்கள் அனைத்தும் விலகியோட உதவும் மந்திரம்

கடலை எண்ணெய் நெடியின் மூலம் வீட்டில் உள்ளவர்களுக்கு கிரகணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். இந்த கடலை எண்ணெய் தீபத்தை கிரகணங்கள் இல்லாத சமயத்தில் நிச்சயம் ஏற்றக்கூடாது என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

- Advertisement -