- Advertisement -
- Advertisement -

கட்டுக்கடங்காத இந்த கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் சீக்கிரமே கடனை அடைக்க இந்த வகையில் வீட்டில் தூபம் போட்டு பாருங்கள், நல்ல பலன் கிடைக்கும். உங்களை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, நேர்மறை ஆற்றல்களை பெருக செய்யக்கூடிய இந்த அற்புத எளிய பரிகாரத்தை வீட்டில் அல்லது உங்களுடைய தொழில் செய்யும் ஸ்தாபனங்களில் செய்து வர விரைவிலேயே கடன் தீர்ந்து, கோடீஸ்வர யோகம் பெறுவீர்கள். கடன் தீர செய்ய வேண்டிய இந்த பரிகாரம் பற்றிய தகவல்களை ஆன்மீகம் சார்ந்த இப்பதிவின் மூலம் பகிர்ந்து கொள்கிறோம்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பொதுவாகவே சாம்பிராணி தூபம் போட்டு வருவது வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை விரட்டி அடிக்கக்கூடிய எளிய ஆன்மீக பரிகாரம் ஆகும். நம் முன்னோர்கள் இதைத் தொடர்ந்து செய்து வந்தனர். சாம்பிராணி வாங்கும் பொழுது, நீங்கள் பால் சாம்பிராணி என்று கேட்டு வாங்குங்கள். இந்த பால் சாம்பிராணி பால் போன்ற வடியும் பிசின் திரவத்திலிருந்து உருவாக்கப்படுவது. பால் வாசம் அடிக்கக் கூடியது.

- Advertisement -

இப்போது கொஞ்சம் மருதாணி இலைகளை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே அளவிற்கு சுத்தமான மஞ்சளை நீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் குண்டு மஞ்சள் அல்லது விரலி மஞ்சள் எதுவாக இருந்தாலும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து ஒன்றாக அரைக்க வேண்டும். நன்கு விழுது போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். கெட்டியான இந்த விழுதை பிள்ளையார் போல பிடித்து வைக்க வேண்டும்.

ஒன்பது பிடிகளை பிடித்து வையுங்கள். பின்னர் இதை நன்கு வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். காய வைத்த இந்த பிடிக்களை பவுடர் போல பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். பின் நீங்கள் ஒவ்வொரு செவ்வாய் அன்றும் சாம்பிராணி தூபம் போடும் பொழுது, இந்த பவுடரையும் சேர்த்து சாம்பிராணியில் போட்டு தூபத்தை வீடு முழுவதும் எல்லா இடங்களிலும் காண்பியுங்கள். மருதாணியும், மஞ்சளும் சேர்ந்த இந்த தூப பொடி எப்பேர்பட்ட கடன்களையும் நீக்கும் மகிமை வாய்ந்தது.

- Advertisement -

செவ்வாய்க் கிழமை முருகனுக்கு உரிய கிழமை, முருகனை நினைத்து கடன் தீர வேண்டி பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். தூபத்தை வீடு முழுவதும் காண்பித்த பிறகு, முருகனுக்கு பூஜை செய்யுங்கள். சஷ்டி கவசம், வேல் மாறல், முருகன் மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள், ஸ்லோகங்கள் எது தெரிந்தாலும் படியுங்கள். உங்களால் படிக்க முடியவில்லை என்றால் ஒலிக்க விடுங்கள். தூபம் போடும் பொழுது இம்மந்திரங்கள் ஒலிக்க, உங்கள் பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே:
11-05-2025 நரசிம்மர் ஜெயந்தி வழிபாடு

மருதாணி மகாலட்சுமியின் அம்சம், அதனுடன் மஞ்சளும் சேரும் பொழுது வீட்டில் இருக்கக்கூடிய, உங்களை சுற்றி இருக்கக்கூடிய எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டிகளும், தீய சக்திகளும், துர் தேவதைகளும், தரித்திரங்களும் விலகும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமல்லாமல் எதிர்மறை ஆற்றல்கள் எது இருந்தாலும், அது உங்களை விட்டு நீங்கும். இதனால் உங்களை ஆட்டிப்படைக்கும் கடன் தொல்லையும் தீரும். முருக கவசங்களை படிக்க படிக்க கடன் தீர்ந்து வாழ்வில் வசந்தம் வீச ஆரம்பிக்கும்.

- Advertisement -