
செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடியவர் மகாலட்சுமி தாயார் என்று நம் அனைவருக்குமே தெரியும். மகாலட்சுமி தாயார் வாசம் செய்யக்கூடிய இடமாக கருதுவது தான் பெருமாளின் நெஞ்சம். காக்கும் தெய்வமான பெருமாளை நாம் வழிபாடு செய்யும்பொழுது பெருமானின் அருளோடு மகாலட்சுமி தாயாரின் அருளையும் நம்மால் பெற முடியும். இந்த வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் கொடுத்து நம்மை சிறப்புடன் வாழ வைக்க உதவக் கூடிய தெய்வமாக திகழக்கூடிய பெருமாளையும் செல்வ வளத்தை அதிகரிக்க கூடிய மகாலட்சுமி தாயாரையும் வழிபாடு செய்யும் பட்சத்தில் நம்முடைய கடன் பிரச்சினை அனைத்தும் தீரும். அந்த வகையில் பெருமாளுக்கு உரிய ஏகாதசி நாள் அன்று செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். கடன் என்ற ஒன்று நம் வாழ்க்கையில் வந்துவிட்டால் நம்மால் நிம்மதியாக இருக்கவே முடியாது. நிம்மதி இழந்து இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் கடனால் பாதிக்கப்பட்ட தான் இருப்பார்கள். அப்படிப்பட்ட கடனை தீர்ப்பதற்காக எவ்வளவு முயற்சிகள் எடுத்தும் அந்த கடன் பிரச்சினை தீரவில்லை என்று புலம்புபவர்கள் முழுமனதோடு பெருமாளை நினைத்து செய்யக்கூடிய ஒரு ஏகாதசி பரிகாரத்தை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.
தை மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை ஏகாதசி என்பது ஜனவரி மாதம் 25ஆம் தேதி தை மாதம் 12ஆம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில் ராகு காலம், எமகண்டம் வேளையை தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து இந்த பரிகாரத்தை நாம் செய்யலாம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு மூன்று பொருட்கள் தேவைப்படும். ஒன்று துளசி இலை, மற்றொன்று ஜாதிக்காய், மூன்றாவதாக பச்சை கற்பூரம். துளசி இலையை செடியில் இருந்து ஏகாதசி அன்று பறிக்கக் கூடாது என்பதால் அருகில் இருக்கக்கூடிய கடைகளில் இருந்து சிறிது அளவு வாங்கிக் கொள்ளுங்கள்.
பெருமாளின் படத்திற்கு முன்பாக ஒரு தட்டை வைத்து அதற்கு மேல் மஞ்சள் நிற துணியை விரித்துக் கொள்ளுங்கள். அந்த துணிக்கு மேல் துளசி இலைகள், ஜாதிக்காய், பச்சைக் கற்பூரம் இவை மூன்றையும் வைக்க வேண்டும். பிறகு அந்த தாம்பாளத்திற்கு முன்பாக ஒற்றைப்படை எண்ணிக்கையில் உங்களால் இயன்ற அளவு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி தாமரைக்கண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பெருமாளுக்கு மஞ்சள் நிறத்திலான பொருளை நெய்வேத்தியமாக வைத்து முழுமனதோடு பெருமாளிடம் உங்களுடைய கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு வேண்டி முடித்த பிறகு பெருமாளின் திருநாமமான “ஓம் நமோ நாராயணா” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி முடித்து விட்டு நாம் வைத்திருந்த அந்த மூன்று பொருட்களையும் அந்த மஞ்சள் துணியில் சிறு மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும். பெருமாளுக்கு முன்பாக ஏற்றிய தீபத்தை அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை எறிய விட்டு பிறகு குளிர வைத்து விடுங்கள்.
தீபத்தை குளிர வைத்த பிறகு நாம் மூட்டையாக கட்டி வைத்திருந்தோம் அல்லவா? அதை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். மூன்று நாட்கள் இந்த மூட்டை அப்படியே அந்த இடத்தில் இருக்கட்டும். நான்காவது நாள் இதை எடுத்து ஓடுகின்ற நீரிலோ அல்லது காய்ப்படாத இடத்திலோ போட்டு விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே:25-01-2025 கடன் தீர தேய்பிறை ஏகாதசி மந்திரம்
இந்த முறையில் நாம் ஏகாதசி நாள் அன்று பரிகாரம் செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய எப்பேர்பட்ட கடன் பிரச்சனையாக இருந்தாலும் அந்த கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு பெருமாளின் அருளால் செல்வ வளம் உயரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.