
கடன் என்னும் நரகத்திலிருந்து நம்மை காப்பாற்றுவதற்காகவே வந்திருக்கக் கூடிய நாள் தான், ஆடி மாத சனிக்கிழமை. எல்லோருக்கும் ஆடி வெள்ளி, ஆடிச் செவ்வாய், ஆடி ஞாயிறு வழிபாட்டை பற்றிய சிறப்புகள் கூட தெரிந்திருக்கும். ஆனால் ஆடி மாத சனிக்கிழமைக்கு ஒரு சிறப்பு இருக்கிறது.
ஆடி மாத சனிக்கிழமை பின் சொல்லக் கூடிய முறைப்படி உங்கள் ஊர் தெய்வமான அம்மனை வழிபாடு செய்தால், உங்கள் கடன் சுமை குறையும். நாளைய தினம் உங்கள் ஊர் மாரியம்மனுக்கு எந்தெந்த பொருட்களை வாங்கி கொடுத்தால் உங்க கடன் சுமை குறையும் ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
எல்லோர் ஊரிலும், கிராம தேவி, அந்த ஊருக்கான அம்மன் கோவில் நிச்சயம் இருக்கும். ஆடி சனிக்கிழமை நீங்கள் அந்த கோவிலுக்கு சென்று, அம்பாளை வழிபட வேண்டும். அம்பாளுக்கு சிவப்பு நிற புடவை, சிவப்பு நிற வளையல், சிவப்பு குங்குமம், சிவப்பு நிறத்தில் இருக்கும் செம்பருத்திப்பூ, அரளிப்பூ எதை வேண்டும் என்றாலும் வாங்கிக் கொள்ளுங்கள், இரண்டு செவ்வாழை வெற்றிலை பாக்கு தேங்காய் இப்படி பூஜைக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிச் செல்லவும்.
இதனுடன் மூன்று எலுமிச்சம் பழமும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆடி சனிக்கிழமை அன்று அம்மனுக்கு சிவப்பு நிறத்தில் அலங்காரம் செய்யக்கூடிய பொருட்களை வாங்கி, உங்கள் கையால் சின்ன வேப்பிலை மாலையை கட்டி கொண்டு போங்க. ஆடி சனிக்கிழமை தான் கட்டாயம் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
வாங்கிய இந்த சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய பொருட்களை எல்லாம் சனிக்கிழமை அம்பாளுக்காக கொடுத்து விடுங்கள். கோவிலில் தீபம் ஏற்றி, அந்த கோவிலில் அமர்ந்து உங்கள் கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி வெள்ளை திரிக்கு பதிலாக சிவப்பு திரி போட்டு விளக்கு ஏற்றுவது ரொம்ப ரொம்ப சிறப்பு.
உங்களால் முடிந்தால் பாகு வெல்லம் வாங்கி, சுவையான சர்க்கரை பொங்கல் செய்து கோவிலில் அம்பாளுக்கு நெய்வேதியம் செய்து அந்த சர்க்கரை பொங்கலை அந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். மிக குறைந்த அளவு பிரசாதத்தை விநியோகம் செய்தாலும் உங்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
பெரிய அளவில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. நம்பிக்கையோடு மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி உங்கள் கடன் சுமை குறைய வேண்டும் என்று அம்பாளை மனம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டாலே கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். வீடு திரும்பும் போது நீங்கள் எடுத்துச் சென்ற மூன்று எலுமிச்சம் பழத்தை, உள்ளங்கைகளில் வைத்து என்னுடைய கடன் என்னை விட்டு விலக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, அம்பாள் சூலத்தில் குத்தி விட்டு வரவும் அவ்வளவுதான்.
இதையும் படிக்கலாமே: ஆடி வெள்ளி வழிபாடு
நாளைய தினம் ஆடி மாதத்தின் முதல் சனிக்கிழமை வருகிறது. வாய்ப்பு உள்ளவர்கள் நாளைய தினம் இதை செய்யலாம். நாளை இந்த வாய்ப்பை தவறவிட்டால் அடுத்தடுத்து வரக்கூடிய ஆடி சனிக்கிழமையில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் உங்கள் குடும்பத்தில் இருக்கும் கடன் பிரச்சனை நீங்கும் என்பதில் ஒரு துளி கூட சந்தேகம் கிடையாது. எளிமையான இந்த வழிபாடு எல்லோருக்கும் கை கொடுக்கும் வகையில் அமையும் என்ற நம்பிக்கையுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.