- Advertisement -

ஆடி வெள்ளி வழிபாடு

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் பணம் என்பது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு நிம்மதியும் மிக மிக முக்கியம். பணம் இருந்தால் மட்டும் ஒருவரால் நிம்மதியாக வாழ முடியாது அந்த நிம்மதியை பெறுவதற்கும் அதே சமயம் அந்த நிம்மதியை இழப்பதற்கு காரணமாக இருக்கக்கூடிய கடன் பிரச்சினை தீரவும் பல வழிப்பாட்டு முறைகள் இருந்தாலும், ஆடி வெள்ளிக்கிழமை செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்க போகிறோம்.

ஆடி வெள்ளி வழிபாடு

வெள்ளிக்கிழமை என்பதே சிறப்பு கூறியதுதான் அதிலும் ஆடி வெள்ளி என்பது மிகவும் சிறப்புக்குரியதாகவே கருதப்படுகிறது. கடன் பிரச்சினை தீர வேண்டும் என்றாலோ கடன் பிரச்சினை மட்டுமல்லாமல் வேறு எந்த பிரச்சினை உங்களுடைய வாழ்க்கையில் இருந்தாலும் அந்த பிரச்சினைகள் தீர வேண்டும் என்று நினைத்தால் ஆடி மாத வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். அதற்காக பெரிதாக எந்தவித செலவு செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

- Advertisement -

துர்க்கை அம்மனுக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து செவ்வரளி மலர்களால் துர்க்கை அம்மனின் போற்றிகளை கூறி அர்ச்சனை செய்து வழிபாடு செய்தாலே நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட பிரச்சினைகளாக இருந்தாலும் அந்த பிரச்சினைகள் அனைத்துமே தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது. இது பிரச்சனைகள் தீர்வதற்குரிய வழிபாடு.

நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். மகாலட்சுமி தாயாருக்கு பாலில் கற்கண்டு போட்டு நெய்வேத்தியமாக வைக்கலாம் அல்லது கற்கண்டு பொங்கல் வைத்தும் வழிபாடு செய்யலாம். பிறகு மகாலட்சுமி தாயாருக்கு நெய் விளக்கு ஏற்றங்கள் இந்த நெய் விளக்கானது வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்த மகாலட்சுமி தாயாரின் 108 போற்றிகளை கூறி தாமரை மலர்களால் மகாலட்சுமி தாயாரை அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நிம்மதியான வாழ்க்கை நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

அதோடு மட்டுமல்லாமல் இந்த முதல் வெள்ளிக்கிழமை என்பது பிரதோஷத்துடன் சேர்ந்து வருகிறது என்பதால் மாலை பிரதோஷ வேளையில் அதாவது 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் வீட்டில் ஒரு குத்துவிளக்கை வைத்து அந்த குத்து விளக்கை அம்மனாக பாவித்து அலங்காரம் அனைத்தும் செய்துவிட்டு அந்த குத்துவிளக்கில் இருக்கக்கூடிய ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்து குங்கும அர்ச்சனையோ அல்லது வாசனையும் மிகுந்த மலர்களை வைத்து குத்து விளக்கு போற்றிகள் என்று இருக்கும் அந்தப் போட்டிகளை கூறி அர்ச்சனை செய்யலாம். அப்படி இல்லை என்றால் மகாலட்சுமி போற்றிகளையோ அல்லது அம்மனின் போற்றிகளையோ கூறி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் நமக்கு நிம்மதியான பிரச்சினைகள் அற்ற வாழ்க்கை அமையும்.

இதையும் படிக்கலாமே:செல்வநிலை உயர துர்க்கை அம்மன் வழிபாடு

இந்த மூன்று வழிபாடுகளில் எந்த வழிபாடு உங்களுக்கு உகந்ததாக திகழ்கிறதோ, அந்த வழிபாட்டை தொடர்ச்சியாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்து வரும் பொழுது அதற்குரிய பலனை முழுமையாக பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்