
இன்றைய தினம் நிறைந்த பௌர்ணமி நாள். ஆவணி அவிட்டமும் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இன்று ப்ளூ மூன் என்று சொல்லப்படும் அதிசக்தி வாய்ந்த பௌர்ணமி நாளாக, அறிவியல் ரீதியாக சொல்லப்பட்டுள்ளது. ப்ளூ மூன் என்றால், நிலவு வழக்கத்தை விட பூமிக்கு அருகில் வருவதாகவும், நிலவின் வெளிச்சம் வழக்கத்தை விட பிரகாசமாக பூமியில் பரவும் என்பதும் அறிவியல் ரீதியான உண்மைகள்.
ஆக மொத்தத்தில் இன்று நம்முடைய பிரபஞ்சத்தில் நிலவொளியின் பேராற்றல் நிறைந்திருக்கும். இந்த நாளில் நாம் வைக்கக்கூடிய வேண்டுதல் அனைத்தும் சீக்கிரம் பலிக்கும். அந்த வகையில் உங்கள் கஷ்டங்கள் தீர இன்று இரவு செய்ய வேண்டிய எளிமையான ஆன்மீகம் சார்ந்த ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
எவ்வளவு நல்ல காரியம் செய்தாலும் சரி, பசியோடு இருக்கும் ஒரு ஜீவனுக்கு பசியார உணவு போடக்கூடிய அன்னதானம் என்பது எதற்குமே ஈடு இணை இல்லாதது. இன்றைய தினம் உங்கள் கைகளால் வாயில்லா ஜீவன்களுக்கு, பசியோடு இருப்பவர்களுக்கு முடிந்த உணவை தானம் செய்யுங்கள். காக்கை குருவிகளுக்கு நெல் தானிய வகைகளை வாங்கி இறையாக மாலை நேரத்தில் போடலாம்.
ஏனென்றால் பறவைகள் மாலை நேரத்தில் இறை தேடி எடுத்துக்கொண்டு தன்னுடைய கூட்டிற்கு செல்லும். அப்போது நீங்கள் போடும் இறை அதற்கு பசியை ஆற்றும். அந்த பறவையின் வாழ்த்து உங்களுடைய குடும்பத்திற்கு கோடான கோடி புண்ணியத்தை சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மதியமோ அல்லது மாலை நேரமோ வீதிகளில் யாசகம் கேட்கும் இரண்டு பேருக்கு வயிறார ஏதாவது ஒரு உணவு வாங்கி தானம் கொடுங்கள். அதிலும் வெள்ளை நிறத்தில் இருக்கும் இட்லி, தயிர் சாதம், வெண்பொங்கல் இப்படிப்பட்ட பொருட்களை இன்று வாங்கி தானம் கொடுத்தால் நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது.
இன்னும் கண்ணுக்குத் தெரியாத ஈ எறும்புகள் எல்லாம் இரவில் இறைதேட வரும். குறிப்பாக நம் வீட்டு நிலை வாசல் படியில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஈ எறும்புகளுக்கு நாம் தானம் செய்தால் ரொம்ப ரொம்ப சிறப்பு. இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பாக உங்கள் வீட்டு நிலை வாசலில் 2 பக்கமும் ஒரு சின்ன துண்டு வெல்ல கட்டிகள் அல்லது நாட்டு சர்க்கரை அல்லது சர்க்கரை ஏதோ ஒரு பொருளை தூவி விட்டு செல்லுங்கள்.
குடும்பத் தலைவிக்கையில் ஒரு சின்ன துண்டு வெல்லத்தை வைத்துக்கொண்டு ‘குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு எங்கள் குடும்பத்தை தொடரும் கஷ்டங்கள் எல்லாம் இன்றோடு ஒரு முடிவுக்கு வர வேண்டும்’ என்று வேண்டி இந்த பரிகாரத்தை செய்யவும். மறுநாள் காலை வந்து நீங்கள் பார்க்கும் போது இந்த இனிப்பு பொருட்களை எறும்புகள் எடுத்துச் சென்று இருந்தால், அன்றோடு உங்களுடைய கர்ம வினைகள் தீர்ந்தது, அன்றோடு உங்கள் கஷ்டம் கடன் சுமை எல்லாம் தீர்ந்தது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
பௌர்ணமி இரவு இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யும் போது 1 எறும்பு நீங்கள் போட்ட உணவை எடுத்தாலும், 100 எறும்புகள் அந்த உணவை சாப்பிட்டதற்கு சமமாகும். அதுதான் இந்த பௌர்ணமி அமாவாசை நாளில் மறைந்து இருக்கக்கூடிய இறையாற்றலும் இறை சக்தியும், நேர்மறை ஆற்றலும் நேர்மறை சக்தியும். வார்த்தையால் சொன்னால் உங்களுக்கு இதெல்லாம் புரியாது.
இதையும் படிக்கலாமே: பௌர்ணமி நாள், ஆவணி அவிட்டம் அன்று சொல்ல வேண்டிய மந்திரம்
இன்று இரவு மேல் சொன்னபடி நிலை வாசலில் இனிப்பு பொருளை தூவி விடுங்கள். மறுநாள் காலை அந்த பொருள் அதே இடத்தில் இருந்தாலும் தவறு கிடையாது. நிலை வாசலை கூட்டும் போது கூட்டிப் பெருக்கி குப்பை தொட்டியில் போட்டு விடலாம். நேர்மறையான எண்ணங்களோடு, அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்யாமல் இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.