இன்று ஆவணி மாத பௌர்ணமி திதி, கூடவே சேர்த்து ஆவணி அவிட்டமும் இருக்கிறது. ஆவணி அவிட்டத்தில் நம் தொடங்கக்கூடிய எந்த ஒரு காரியமும் பல மடங்கு வெற்றியைத் தரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. நீங்கள் புதுசாக தொழில் தொடங்க போகிறீர்கள், புதுசாக ஏதாவது சேமிப்பு தொடங்கப் போகிறீர்கள், புதுசாக ஏதாவது பொருள் வாங்க வேண்டும், இப்படி எந்த புது துவக்கமாக இருந்தாலும் சரி அந்த புது துவக்கத்திற்கு இனறைய நாள் ரொம்ப ரொம்ப சிறந்தது.
புது வேலையில் சேரனும், புதுசாக ஏதாவது தொழில் கத்துக்க பயிற்சி எடுக்கணும் இப்படி எதை தொடங்க வேண்டும் என்றாலும் இன்றைய நாள் தொடங்கலாம். அப்படி இந்த நாளில் நீங்கள் தொடங்கக்கூடிய புதிய முயற்சிகள் வெற்றி அடைய உங்களுக்கு இந்த மந்திரமும் துணையாக இருக்கும். புது முயற்சிகள் வெற்றி பெற குடும்பம் சுபிட்சம் பெற இன்றைய தினம் செய்ய வேண்டிய வழிபாடு என்ன, சொல்ல வேண்டிய மந்திரம் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.
இன்று மாலை 6:30 மணி அளவில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி குலதெய்வத்தையும் சந்திர பகவானையும், மனதாரா பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இன்று கோதுமை மாவால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு பிரசாதத்தை இறைவனுக்கு படைப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு. கோதுமை மாவில் அல்வா அல்லது கோதுமை மாவில் இனிப்பு சேர்த்த அப்பம் ஏதாவது தயார் செய்து பிரசாதமாக வைக்கவும். பிறகு உங்களுடைய பிரார்த்தனையை இறைவனிடம் சொல்லிவிட்டு இந்த மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்க வேண்டும்.
பௌர்ணமி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்
ஓம் பூர்: புவ: ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயத்
மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு தீப தூப கற்பூர ஆரத்தி காண்பித்து உங்களுடைய வேண்டுதலை நிறைவு செய்து கொள்ளுங்கள். பிறகு அந்த பிரசாதத்தை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சாப்பிடலாம். இன்று நீங்கள் புதுசாக ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை தொடங்க வேண்டும் என்றால் அந்த விஷயத்தை தொடங்குவதற்கு முன்பும் 3 முறை இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு புது முயற்சிகளை மேற்கொண்டீர்கள் என்றால் நீங்கள் தொடங்கும் காரியம் வெற்றி மேல் வெற்றி அடையும் என்பது நம்பிக்கை.
பௌர்ணமி நாள் என்றால் குலதெய்வ வழிபாடு, உக்கிர அம்மன் வழிபாடு, சந்திர பகவான் வழிபாடு, மகாலட்சுமி தாயாரின் வழிபாடு, இப்படி எல்லா இறைவனையும் ஒன்றாக சேர்த்து வழிபாடு செய்வது குடும்பத்திற்கு நிறைவான சிகிச்சை தரும். முடிந்தவர்கள் இன்று மாலை வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று அம்பாளை தரிசனம் செய்வது நல்லது.
இதையும் படிக்கலாமே: பௌர்ணமி நாள், ஆவணி அவிட்டம் அன்று சொல்ல வேண்டிய மந்திரம்
நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன எளிமையான வழிபாட்டு முறையை இன்று மாலை உங்கள் வீட்டு பூஜை அறையில் செய்யுங்கள் நல்லதே நடக்கும் இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.