
கடன் என்ற மூன்றெழுத்து நம் வாழ்க்கையில் வந்துவிட்டால் நிம்மதி என்ற நான்கெழுத்து நம்மை விட்டு ஓடியே போய்விடும். பிறரிடம் இருந்து நாம் வாங்கும் ஒரு ரூபாய் கூட கடனாக தான் கருதப்படுகிறது. எப்பேர்பட்ட கடனாக இருந்தாலும் அதை நாம் திருப்பி தந்துவிட்டால் தான் நம்மால் நிம்மதியாக ஒரு வேளை உணவாவது உண்டு வாழ முடியும். கடன் இல்லாமல் நிம்மதியாக வாழ்வதற்கு நாம் பௌர்ணமி அன்று எந்த மரத்தை வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி வணங்க கூடிய தெய்வமாக கருதப்படுபவர் விநாயகப் பெருமான். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானிடம் நாம் எந்த கோரிக்கை வைத்து மனதார நாம் அவரை வேண்டும் பொழுது அந்த வேண்டுதல்களை கண்டிப்பாக அவர் நிறைவேற்றுவார். முழு நிலவு நிறைந்த பௌர்ணமி நாளன்று நாம் செய்யும் எந்த வழிபாட்டிற்கும் பலன்கள் கண்டிப்பாக கிடைக்கும் என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான்.
அதன் அடிப்படையில் அரச மரத்தடியில் இருக்கும் விநாயகரை நாம் பௌர்ணமி நாளன்று வழிபடுவதன் மூலம் அவர் மன மகிழ்ச்சி அடைந்து நம்முடைய கடன் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார். மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி நாளன்று காலை 8 மணிக்குள் இந்த பரிகாரத்தை நாம் செய்து முடித்து விட வேண்டும். அரச மரத்தடியில் இருக்கும் விநாயகரை தான் நாம் வணங்க வேண்டும்.
விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு அவருக்கு இரண்டு நெய் தீபம் ஏற்றி வைத்து, வாசனை மலர்களை சூட்ட வேண்டும். அவருக்கு மிகவும் பிடித்தமான அருகம்புல் மாலையை சூட்ட வேண்டும். பிறகு விநாயகப் பெருமானையும் அரச மரத்தையும் 36 முறை வலம் வர வேண்டும். அவ்வாறு வலம் வரும்பொழுது “ஓம் நமசிவாய” என்ற பஞ்சாட்சர மந்திரத்தை நாம் கூற வேண்டும். பிறகு கற்பூரம் ஏற்றி வைத்து, அவரிடம் மனதார நம்முடைய கடன் பிரச்சினைகள் அனைத்தையும் கூற வேண்டும்.
இவ்வாறு நாம் அரச மரத்தடி விநாயகரை வழிபடுவதன் மூலம் நம்முடைய கடன் பிரச்சனைகள் அனைத்தும் விலகுவதற்கு அவர் சிறந்த வழியை காட்டுவார். இந்த வழிபாட்டின் மூலம் சிவபெருமானின் அருளையும், விநாயகரின் அருளையும், அரச மரத்தின் அருளையும் பரிபூரணமாக பெறுவதோடு மட்டுமல்லாமல் இவர்கள் மூவரும் சேர்ந்து நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை அனைத்து கடன்களில் இருந்தும் வெளியில் வருவோம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து செய்து வர அனைத்து நன்மைகளும் நம்மை தேடி வரும்.