- Advertisement -

கடன் தீர அரிசி மாவு விளக்கு பரிகாரம்

- Advertisement -

வாழ்க்கையில் எனக்கு ஒரு ரூபாய் கூட கடன் இருக்கக் கூடாது. வரக்கூடிய வருமானமும், குடும்ப செலவும் சரியாக இருக்க வேண்டும். கூடவே கொஞ்சம் சேமிப்பும் பெருக வேண்டும். திடீரென்று வீண் விரைய செலவு வந்து சேமித்து வைத்த காசு பணத்தை எல்லாம் கொண்டு போய் மருத்துவமனையில் கொட்டும் சூழ்நிலை ஒருநாளும் என்னுடைய குடும்பத்திற்கு வரக்கூடாது.

சுப செலவுகள் ஏற்பட வேண்டும். வீட்டில் இருப்பவர்கள் சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப பணம் வீட்டில் புழங்க வேண்டும். இந்த ஆசை உங்களுக்கு இருந்தால், இந்த பரிகாரமும் உங்களுக்கு மட்டும் தான்.

- Advertisement -

சனி மகா பிரதோஷ வழிபாடு

இன்று மாலை அப்படி என்ன விசேஷம். நாம் எல்லோருக்கும் தெரியும் இன்று சனி மகா பிரதோஷம். சனிக்கிழமை வந்திருக்கக்கூடிய இந்த பிரதோஷ நாளில், நீங்கள் கோவிலுக்கு சென்று உங்கள் வழிபாட்டை மேற்கொண்டாலும் சரி, கவலைப்படாதீங்க வீடு திரும்பியதும் இந்த விளக்கை வீட்டில் ஏற்றலாம். நாங்கள் வீட்டில் தான் பிரதோஷ நேரத்தில் இருப்போம். நாங்கள் 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை இருக்கக்கூடிய பிரதோஷ நேரத்தில் வீட்டிலேயே இந்த விளக்கை ஏற்றலாமா என்று கேட்டால் நிச்சயம் அதுவும் செய்யலாம். இன்று மாலை கடன் பிரச்சனை தீர பூஜை அறையில் ஏற்ற வேண்டிய விளக்கு.

ஒரு தாம்பூல தட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சரிசி மாவை பரப்பி விடுங்கள். (வீட்டில் இருக்கும் பச்சரிசியை கழுவி காய வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தால் சுத்தமான பச்சரிசி மாவு கிடைக்கும்.) இன்று சிவன் கோவிலில் அபிஷேகத்திற்கு பச்சரிசி மாவை வாங்கி கொடுத்தால், கடன் சுமை குறையும் இதையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்வோம்.

- Advertisement -

பச்சரிசி மாவை பரப்பிவிட்டு அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். கொஞ்சம் வில்வ இலை உங்களுக்கு தேவை. அந்த பச்சரிசி மாவின் மேல் விளக்கை சுற்றி அந்த வில்வ இலைகளை அலங்கரித்து விடுங்கள்.

சிவபெருமானை நினைத்து விளக்கு ஏற்றி பூஜை அறையில் வைத்து விட்டு கடன் தொல்லையிலிருந்து என்னை விடுவித்துவிடு சிவபெருமானே என்று சரகநாதியோடு வேண்டிக் கொண்டால் உங்களை விட பாக்கியசாலி இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை. இந்த விளக்கை ஏற்றி இன்று யார் வேண்டுதல் வைக்கிறீர்களோ அவர்களுக்கு கடன் தொல்லையானது படிப்படியாக குறைய தொடங்கும்.

- Advertisement -

வருமானம் ஆனது படிப்படியாக உயர தொடங்கும். எவ்வளவு பெரிய சொத்து பிரச்சனை, டாக்குமெண்ட் பிரச்சினை, தொழில் பிரச்சனையாக இருந்தாலும், அதை சரி செய்யக்கூடிய சக்தி இன்று இந்த வழிபாட்டிற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. சரணாகதியோடு இன்று சிவபெருமானின் காலில் விழுந்து விடுங்கள். சனிக்கிழமை வழிபாட்டி முடித்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: அதிசக்தி வாய்ந்த சிவ மந்திரம்

ஞாயிற்று கிழமை காலை எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு இந்த அரிசி மாவை அப்படியே கொண்டு போய் கொஞ்சம் சர்க்கரை கலந்து மரத்தடியில் தூவி விடுங்கள். இப்படி ஒரு வாய்ப்பு மீண்டும் நமக்கு கிடைக்குமா என்பது தெரியாது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -