- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅதிசக்தி வாய்ந்த சிவ மந்திரம்

அதிசக்தி வாய்ந்த சிவ மந்திரம்

- Advertisement -

மற்ற நாட்களில் வரும் பிரதோஷ நாளில் எல்லாம் சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும், பரவாயில்லை. இன்றைய தினம் வந்திருக்கக் கூடிய சனி மகாபிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபாடு செய்யுங்கள். ஐந்து வருடம், பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபாடு செய்த பலன் ஒட்டுமொத்தமாக உங்களை வந்து சேரும்.

நீங்கள் எவ்வளவு பரபரப்பாக பிசியாக இருப்பவர்களாக இருந்தாலும், கொஞ்சம் நேரம் ஒதுக்கி, இன்று மாலை சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானை தரிசனம் செய்து விடுங்கள். சிவன் கோவிலில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லுபவர்களுக்கு காலத்தால் வரும் அத்தனை கஷ்டங்களும் தொலைந்து போகும். கடன் சுமை குறையும். சந்தோஷம் பெருகும்.

- Advertisement -

கோவிலுக்கு எங்களால் செல்ல முடியவில்லை, எவ்வளவு முயற்சி செய்து விட்டோம். கோயிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலையும் சில பேருக்கு இருக்கும். அப்படி இருந்தால் வீட்டில் இருந்தபடியே இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரிக்கலாம். சிவபெருமானின் அருள் ஆசி பரிபூரணமாக அனைவருக்கும் கிடைக்க வேண்டுதல் வைத்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடருவோம்.

அதிசக்தி வாய்ந்த சிவ மந்திரம்

இன்று மாலை உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் ஆலயங்களில் 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடக்கும். கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். காலை வைக்கக்கூட கோவிலில் இடம் இருக்காது. இருப்பினும் நீங்கள் கோவிலுக்கு சென்றால் கூட்டத்தோடு கூட்டமாக நெரிசலில் நசுங்கி சிவபெருமானை தரிசனம் செய்வதை தவிர்த்து விட்டு, கோவிலில் காலியாக இருக்கும் இடத்தில் சம்மணம் போட்டு அமர்ந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

முதுகு தண்டுவடம் நேராக இருக்கட்டும். கண்களை மூடிக்கொள்ளலாம். கண்களில் சிவலிங்கம் மட்டும் தான் தெரிய வேண்டும். மனதிற்குள் சிவபெருமானை தவிர வேறு எந்த எண்ணமும் இருக்கக் கூடாது. ‘ஓம் நமோ பகவதே ருத்ரே’ என்ற நாமத்தை சொல்லுங்கள் எண்ணிக்கை எல்லாம் வேண்டாம். எண்ணிக்கையில் உங்கள் கவனம் சிதற கூடாது. 5 நிமிடமோ 10 நிமிடமோ உங்களால் எவ்வளவு நேரம் ஒதுக்க முடியுமோ ஒதுக்கி சிவன் கோவிலில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொன்னால் நிச்சயம் உங்கள் கஷ்டங்கள் விலகும்.

கோவிலில் கொஞ்சம் கூட்டம் குறைந்த பிறகு நந்தி பகவானையும் சிவபெருமானையும் தரிசனம் செய்யுங்கள். கோவிலை ஐந்து முறை பலம் வந்து நமஸ்காரம் செய்து கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தை வாங்கி கொண்டு வீடு திரும்பலாம். கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்பவர்கள் வீட்டிலேயே விளக்கு ஏற்றி வைத்துவிட்டு பூஜை அறையில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள் ‘ஓம் நமோ பகவதே ருத்ரே’ அத்திசக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை எந்த நாளில் உச்சரித்தாலும் தவறில்லை.

இதையும் படிக்கலாமே: துன்பம் தீர பிரதோஷ நாளில் செய்ய வேண்டியது

இன்று பிரதோஷ காலகட்டத்தில் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும் என்று உங்களுக்கு தெரியப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்ததே எங்களுக்கும் புண்ணியம். அந்த சிவபெருமானே வந்து இந்த மந்திரத்தை உங்கள் செவிகளில் சொன்னதாக நினைத்துக் கொள்ளுங்கள். சிவபெருமானை மனப்பூர்வமாக நம்பியவர்கள் என்றும் கைவிடப்பட்டதில்லை என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்