
நம்முடைய வீட்டில் பூஜை அறை எந்த அளவிற்கு முக்கியமான இடமாக திகழ்கிறதோ அதே அளவிற்கு சமையலறையும் முக்கியமான இடமாக திகழ்கிறது. நம்முடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்க வேண்டும் என்றால் பூஜை அறைக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் தருகிறோமோ அதே அளவு சமையல் அறைக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். சமையலறை எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு தெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைப்பதோடு நம்முடைய ஆரோக்கியமும் மேம்படும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சமையலறையில் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நம்முடைய சமையல் அறையை நாம் எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பாத்திரங்களை அவ்வப்பொழுது சுத்தம் செய்து வைத்து விட வேண்டும். அதை அப்படியே சிங்கில் போட்டு வைப்பதன் மூலம் மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைப்பது தடைப்பட்டுவிடும் என்று கூறப்படுகிறது. எந்த வீட்டில் பூஜை அறையும் சமையலறையும் சுத்தமாக இருக்கிறதோ அந்த இடத்தில் மகாலட்சுமியின் அருள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சமையல் அறையில் நாம் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்யும் பொழுது நமக்கு கடன் பிரச்சினைகள் முற்றிலும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த பரிகாரத்தை இரவில் அனைத்து வேலையும் முடிந்த பிறகு சமையலறையை சுத்தம் செய்த பிறகு செய்ய வேண்டும். சமையலறையில் செய்வதுதான் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. சமையலறை மேடையில் ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். அந்த அகல் விளக்கில் 10 கிராம்பு மொட்டு உடையாது கிராம்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 10 கற்பூரத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். மெழுகு சேர்க்காத கற்பூரமாக வாங்கிக் கொள்ளுங்கள். சிறிய கற்பூரமாக இருந்தால் பத்தும் பெரிய கற்பூரமாக இருந்தால் மூன்றில் இருந்து ஐந்து வரை கூட நாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
இப்பொழுது கற்பூரத்தை ஏற்றுங்கள். கற்பூரம் எரிய ஆரம்பித்ததும் அதில் 10 மிளகை போட வேண்டும். அடுத்ததாக சிறிதளவு வெண்கடுகையும் அதில் சேர்க்க வேண்டும். அந்த கற்பூரம் எரிந்து முடிக்கும் பொழுது இவை அனைத்தும் எரிந்து விடும். இப்படி எரியும் பொழுது நாம் “ஓம் மகாலட்சுமி தாயே போற்றி” என்று மனதார மகாலட்சுமி தாயாரை நினைத்து நம்முடைய கடன்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று வழிபாடு செய்து கொள்ள வேண்டும். இப்படி செய்து முடித்த பிறகு நாம் சென்று படுக்கலாம்.
ஒவ்வொரு வீட்டிலும் இரவு நேரத்தில் அந்த வீட்டிற்குரிய குலதெய்வமும் மகாலட்சுமி தாயார் வலம் வருவார்கள் என்று அர்த்தம். இந்த தீபத்தை நாம் ஏற்று வைக்கும் பொழுது இதில் இருக்கக் கூடிய கிராம்பு வாசனையும் கற்பூரத்தின் வாசனையும் மிளகு வெண்கடுகு போன்றவற்றின் வாசனையும் நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை விரட்டி அடிப்பதோடு மகாலட்சுமி தாயாரின் அருளையும் குலதெய்வத்தின் அருளையும் பெற உதவுகிறது. இதனால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். சகல ஐஸ்வர்யமும் பெருகும்.
இதையும் படிக்கலாமே செல்வம் செழிக்க கருட பஞ்சமி வழிபாடு
மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை முழு மனதுடன் மகாலட்சுமி தாயாரையும் குலதெய்வத்தையும் நினைத்துக் கொண்டு செய்பவர்களுக்கு கடன் பிரச்சினை முற்றிலும் நீங்குவதோடு செல்வ செழிப்பு அதிகரிக்கும்.