- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

கடன் தீர, நோய் நீங்க சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

- Advertisement -

சங்கடஹர சதுர்த்தியை பற்றி தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். அதிலும் குறிப்பாக இந்த ஆவணி மாதத்தில் வரக்கூடிய மகா சங்கடஹர சதுர்த்தி பற்றி ஒவ்வொருவருக்குமே தெரிந்திருக்கும். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதத்தை ஆரம்பிப்பது என்பது மிகவும் சிறப்பு. மற்ற சங்கடகர சதுர்த்திகளில் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட இந்த ஒரு மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயக பெருமானை வழிபட்டால் அவர்களுக்கு பல அற்புதமான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் கடன்கள் தீரவும், நோய்கள் விலகவும் விநாயகப் பெருமானை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எந்த ஒரு காரியத்தை நாம் செய்வதாக இருந்தாலும் அந்த காரியத்தில் எந்தவித தடைகளும் ஏற்படக்கூடாது என்பதற்காக விநாயகப் பெருமானை வழிபாடு செய்வோம். நம்முடைய முன்னோர்கள் காலத்தில் புதிதாக ஏதாவது ஒரு விசேஷகரமான நாட்களில் தின்பண்டங்கள் செய்கிறார்கள் என்னும் பட்சத்தில் அந்த தின்பண்டங்களை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பாக மஞ்சளில் விநாயகரை பிடித்து வைத்துவிட்டு தான் அடுப்பையே பற்ற வைப்பார்கள். அதேபோல் தின்பண்டங்களை செய்த பிறகு முதலில் பூஜை அறையில் இருக்கக்கூடிய விநாயகர் படத்திற்கு முன்பாக தான் அந்த தின்பண்டங்களை ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் வைத்து வழிபாடு செய்து விட்டு மற்றவர்களுக்கு தருவார்கள்.

- Advertisement -

இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் விநாயகர் தின்பண்டங்களை விரும்பி சாப்பிடுவார் என்பதால் தான். நமக்கு ஏதாவது ஒரு காரியம் நடக்க வேண்டும் என்றால் அந்த காரியம் வெற்றி அடைவதற்கு விநாயகப் பெருமானிடம் அவருக்கு பிடித்தமான தின்பண்டங்களை வைத்து வழிபடும் பொழுது விநாயகர் பெருமான் அந்த வேண்டுதலை நிறைவேற்றுவார் என்ற கூற்றும் நிலவி வருகிறது. அந்த முறையில் விநாயகப் பெருமானுக்கு மகா சங்கரா சதுர்த்தி என்று வைக்க வேண்டிய நெய்வேத்தியங்களை பற்றியும் செய்ய வேண்டிய அபிஷேகங்களை பற்றியும் பார்ப்போம்.

அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் என்பது நடைபெறும். இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் அந்த தெய்வத்தை தேடி வரக்கூடிய ஒவ்வொரு பக்தர்களும் தங்களிடம் இருக்கக்கூடிய கஷ்டங்களை தெய்வத்திடம் முறையிட்டு செல்வார்கள். அப்படி முறையிடும் பொழுது தெய்வங்களுக்கு உகர நிலை ஏற்படும். அந்த உக்கர நிலையை நிவர்த்தி செய்து சாந்தியடைய வைப்பதற்காகவும், தெய்வத்தை குளிர்விப்பதற்காகவும் தான் அபிஷேகங்கள் செய்யப்படுகிறது.

- Advertisement -

நம்முடைய கடன் பிரச்சினைகள் தீர வேண்டும் என்பதற்காக விநாயகப் பெருமானை வழிபட வேண்டும் என்றால் அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு விநாயகர் கோவிலுக்கு சென்று மகா சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகருக்கு கஸ்தூரி மஞ்சள் மற்றும் சந்தனத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். இயன்றவர்கள் சந்தன காப்பு செய்யலாம். இப்படி செய்துவிட்டு உங்கள் கைப்பட பிடித்த லட்டு, கொழுக்கட்டை போன்றவற்றை 108 என்ற எண்ணிக்கையில் செய்து அதை விநாயகப் பெருமானுக்கு நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்து விட்டு அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தர வேண்டும். இப்படி தருவதன் மூலம் விநாயகப் பெருமானின் அருளால் கடன் பிரச்சினை என்பது முற்றிலும் நீங்கும்.

இதே போல் நோய்கள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் நாளைய தினம் விநாயகப் பெருமானுக்கு சுத்தமான மலைத்தேனை வாங்கி வந்து அபிஷேகம் செய்ய வேண்டும். அப்படி அபிஷேகம் செய்த பிறகு அந்த தேனை சேகரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் வீதம் அருந்தி வரவேண்டும். இப்படி செய்வதன் மூலம் நோய்கள் படிப்படியாக குறைவதை நம்மால் கண்கூடாக உணர முடியும்.

இதையும் படிக்கலாமே மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்

இந்த வழிபாட்டு முறைகளை மகா சங்கடஹர சதுர்த்தி நாளன்றுதான் செய்ய வேண்டும் என்று இல்லை. ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளன்று இந்த வழிமுறைகளை நாம் பின்பற்றினோம் என்றால் கண்டிப்பான முறையில் விநாயகப் பெருமானின் அருளால் கடன் பிரச்சினை விரைவிலேயே தீரும், நோய்கள் படிப்படியாக குறையும்.

- Advertisement -