- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமஹா சங்கடஹர சதுர்த்தி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்

மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்

- Advertisement -

நாளைய தினம் மஹா சங்கடஹர சதுர்த்தியானது வியாழக்கிழமையோடு சேர்ந்து வரவிருக்கிறது‌. ராகு கேது தோஷத்தால் கஷ்டப்படுபவர்கள், கடன் சுமையால் கஷ்டப்படுபவர்கள், ஜாதகத்தில் குருவால் வரக்கூடிய பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், நாளைய தினம் கட்டாயம் விநாயகர் வழிபாட்டை செய்ய வேண்டும்.

அதிலும் குறிப்பாக உங்களுக்கு கடன் சுமை இருந்தால் அது சரியாக வேண்டும் என்றால், நாளைய தினம் பிள்ளையார்பட்டி விநாயகரை மனதில் நினைத்து வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. எல்லோராலும் பிள்ளையார் பட்டிக்குச் சென்று அந்த விநாயகரை தரிசனம் செய்து வழிபாடு செய்ய முடியாது. வீட்டில் இருந்தபடியே அந்த விநாயகரை மனதார நினைத்து பின் சொல்லக்கூடிய முறையில் வழிபாடு செய்து பாருங்கள். வாழ்நாள் முழுவதும் கடன் இல்லாமல் வாழ்வதற்கு உண்டான நல்ல வழியை அந்த கடவுள் நிச்சயம் காண்பித்துக் கொடுப்பார்.

- Advertisement -

மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்

முதலில் கடன் தீருவதற்கான பரிகாரத்தை பார்த்து விடுவோம். ராகு கேதுவால் ஜாதக கட்டத்தில் தோஷங்கள் பிரச்சனைகள் இருந்தால் நிச்சயம் நம்முடைய வாழ்க்கை கசப்பாகத்தான் செல்லும். அதோடு மட்டுமல்லாமல் கடனை கொடுக்கக் கூடியது கேது பகவான் தான். இவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் நாளை நீங்கள் பிள்ளையார்பட்டிவிநாயகரை மனதார நினைத்துக் கொண்டு இரண்டு பொருட்களை வாங்க வேண்டும். உளுந்து, கொள்ளு.

உளுந்து ராகுவுக்கு உறியது, கொள்ளு கேதுவுக்கு உறியது. இந்த இரண்டு பொருளை வாங்கி சின்ன சின்ன கிண்ணத்தில் கொட்டி பூஜை அறையில் பிள்ளையாருக்கு முன்பாக வைத்து வழிபாடு செய்தீர்கள் என்றால், ராகு கேது பகவானால் உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்கள் துன்பங்கள் கடன் சுமை அனைத்தும் நிவர்த்தி ஆகும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

வீட்டில் விளக்கு ஏற்றி விநாயகருக்கு அருகம்புல் போட்டு நீங்கள் செய்யக்கூடிய சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டில் இந்த இரண்டு பொருளை மறக்காமல் சேர்த்துக் கொள்ளுங்கள். வழிபாடு செய்யும்போது ‘ஓம் பிள்ளையார்பட்டி விநாயகரே போற்றி போற்றி’ என்ற மந்திரத்தை சொல்லலாம். இது முதல் விஷயம். கடன் பிரச்சினையில் தவிப்பவர்கள் இதை பின்பற்றுங்கள்.

இது மட்டுமல்லாமல் நாளைய தினம் வேறு எந்தெந்த பொருட்களை வாங்கினால் சிறப்பு. நாளை வியாழக்கிழமை சேர்ந்து இந்த மகா சங்கடஹர சதுர்த்தி வந்திருப்பதால் வெள்ளை கொண்டை கடலை வாங்கலாம். குரு பகவானுக்கு உரிய மஞ்சள் நிற பொருட்கள் எதுவாக இருந்தாலும் வாங்கலாம்.

- Advertisement -

கிழங்கு மஞ்சள், மஞ்சள் தூள், மஞ்சள் நிற பூக்கள் இப்படி உங்கள் தேவைக்கு எது வேண்டுமோ அதை நாளைய தினம் வாங்குவது சுபிட்சத்தை தரும். இதோடு மட்டுமல்லாமல் வீட்டில் நல்ல பிள்ளையார் படம் வாங்க வேண்டும் அல்லது அழகான யானை பொம்மை வாங்க வேண்டும் என்றாலும் நாளைய தினம் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

விநாயகர் வழிபாட்டை பொருத்தவரை ஆடம்பரத்திற்கு இடமே கிடையாது. மிக மிக எளிமையாக நீங்கள் எதை கொண்டு போய் வைத்து விநாயகரை வழிபாடு செய்தாலும் அதை அவர் மன நிறைவோடு ஏற்றுக்கொள்வார். எல்லா கடவுளுக்கும் இந்த விஷயம் பொருந்தும் என்றாலும், இதில் முதல் இடத்தை பிரிப்பது பிள்ளையா தான். அவருக்கு மூன்று தோப்புக்கரணம் போதும்.

இதையும் படிக்கலாமே: மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்.

உங்களுடைய வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றி தருவதற்கு. நம்பிக்கையோடு, தும்பிக்கை நாதனை வழிபாடு செய்பவர்களுக்கு தோல்வியே இல்லை என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்