
கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லை தீர்ந்து விரைவில் வாழ்வில் வெற்றி பல பரிகாரங்களை பற்றி நம் முயற்சி செய்திருப்போம். ஆனால் என்ன அனைத்து பரிகாரங்களையும் எனக்குத் தெரிந்த அளவிற்கு செய்து விட்டேன் கொஞ்ச நாள் அதில் பலன் கிடைக்கிறது மறுபடியும் பழைய நிலைக்கு மாறி விடுகிறோம் என்று வருத்தப்படுவார்கள். இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் பெறலாம். ஆன்மீகம் குறித்து இந்த பதிவில் அந்த பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த பரிகாரத்திற்கு தேவைப்படும் முக்கியமான ஒரு பொருள் பாசிப்பருப்பு. நம் அனைவருக்கும் பெரிய சுமையாகவும் பெரிய கவலையாகவும் இருக்கும் விஷயம் கடன் தொல்லை தான். இதிலிருந்து விடுபடுவதே போதும் என்று தான் முதலில் நினைப்போம். அத்தகைய கடன் தொல்லையிலிருந்து விடுபட எளிதாக ஒரு சில பரிகாரங்கள்.
முதலாவதாக, பாசிப்பருப்பு மற்றும் வெல்லம் முடிந்த அளவிற்கு வாங்கி இரண்டையும் ஒன்றாக கலந்து முந்தைய நாள் தண்ணீரில் ஊற வைத்து அடுத்த நாள் பசுவிற்கு அதனை கொடுத்து மகிழ்ச்சியுடன் தேவையான வேண்டுதலை வேண்டவும். இதனை கோபூஜை என்பர். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் செல்வ வளம் பெருகி கடன் அடைப்பதற்கான வழி வீடு தேடி வரும்.
இரண்டாவதாக, கோவில் சென்று, புதன்கிழமை, அன்று நல்ல நேரம் பார்த்து, பாசிப்பருப்பை தானமாக கொடுப்பதினால் செல்வ வளம் பெருகி கடன் தொல்லை நீங்கும். அதாகப்பட்டது தானம் கொடுத்தால் தனம் வரும் என்பர் நம் முன்னோர். அதற்கேற்றவாறு நாமும் பாசிப்பருப்பை தானமாக கொடுத்து தன வளங்கள் பெற்று செழிப்போம். இதனை அவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்று எதுவும் இல்லை. முடிந்த அளவிற்கு பாசிப்பருப்பை புதன்கிழமையன்று நம் கடன் தீரும் வரை கொடுத்து வந்தால் வாழ்வில் நல்லது நடக்கும்.
மூன்றாவதாக, பாசிப்பருப்பு பிரசாதம். பாசிப்பருப்பை சுண்டல் போன்று செய்து அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று கடவுளிடம் வைத்து பூஜை செய்து அதனை நெய்வேத்தியமாக, வரும் பக்தர்கள் அனைவருக்கும் தானமாக கொடுப்பதினால் கடன் தீருவதற்கான காசு உங்களைத் தேடி வரும் இதனை முக்கியமாக பிரதோஷ நாளன்று செய்வது மிகவும் நன்மையானது.
நான்காவதாக, மிகவும் முக்கியமான ஒரு வழிபாடு குலதெய்வ வழிபாடு. சாதாரணமாகவே நாம் எடுத்த காரியம் நிறைவேற வேண்டுமென்றால் குலதெய்வத்தின் அருள் மிகவும் முக்கியமானது. அதில் இப்பொழுது கடன் தொல்லை நீங்க குலதெய்வத்தை எவ்வாறு வழிபட வேண்டும். பௌர்ணமி அன்று குலதெய்வத்திற்இ நெய்வேத்தியமாக பாசிப்பருப்பிலான உணவை பிரசாதமாக வைத்து மனதில் கடன் தொல்லை தீர வேண்டிக் கொள்வது மிகவும் சக்தி வாய்ந்தது.
இதைத் தொடர்ந்த 12 பௌர்ணமி கடை பிடித்தால் கடன் தொல்லை தீரும் என்று ஐதீகம். பிரசாதமாக படைத்த அந்த பாசிப்பருப்பிலான உணவை அனைவருக்கும் கொடுக்கும் முன் காகத்திற்கு சிறிதளவு வைத்து விட்டு பிறகு வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கொடுப்பது நல்லது. இந்த நான்கு வழிபாடுமே கடன் தொல்லை தீர்ந்து வாழ்வில் செல்வ செழிப்புடன் இருக்கதான்.
இதையும் படிக்கலாமே:ஆடி மாதத்தில் குலதெய்வ கோவிலுக்கு கொடுக்க வேண்டிய பொருள்
இந்த நான்கு வழிபாட்டில் உங்களால் எது முடியுமோ அதை கடைப்பிடியுங்கள். முழு மனதுடன் கடைபிடித்தால் நிச்சயம் கடன் தொல்லையிலிருந்து மீளலாம் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகார முறைகளை பின்பற்றி பலன் அடையலாம் என்ற கருத்துடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.