- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடி மாதத்தில் குலதெய்வ கோவிலுக்கு கொடுக்க வேண்டிய பொருள்

ஆடி மாதத்தில் குலதெய்வ கோவிலுக்கு கொடுக்க வேண்டிய பொருள்

- Advertisement -

ஒருவருக்கு பிரச்சினைக்கும் மேல் பிரச்சினை வந்து கொண்டே இருக்கும் பொழுது அவர்களால் வாழ்வதற்கே விருப்பம் இல்லாத ஒரு சூழ்நிலை உண்டாகிவிடும். அப்படி பலரும் பல விதங்களில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரு பிரச்சனை வருகிறது என்றால் அந்தப் பிரச்சினையை சரி செய்து முடித்த பிறகு மற்றொரு பிரச்சினை வந்தால் அது காலப்போக்கில் பழகிவிடும். ஆனால் ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்கு முன்பாகவே வேறு ஒரு ரூபத்தில் வேறு ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது என்னும் பட்சத்தில் திரும்பும் திசையெங்கும் பிரச்சினைகளாகவே இருக்கிறது என்னும் பட்சத்தில் அந்த பிரச்சினையிலிருந்து வெளியே வருவதற்கும் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கும் குலதெய்வ கோவிலில் எந்த பொருளை தானமாக தரவேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆடி மாத குலதெய்வ வழிபாடு

இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தெய்வங்களிலும் மிகவும் சிறப்பான உடனடி பலனை தரக்கூடிய தெய்வம் எது என்று கேட்டால் அது நம்முடைய குலதெய்வம் தான். நம்முடைய குலத்தை காக்கக்கூடிய தெய்வமாக திகழக்கூடிய இந்த தெய்வம் தான் நம்முடைய பிரச்சனைகளையும் தீர்த்து நம்மையும் காப்பாற்றும் என்பதை முழு மனதோடு நாம் நம்ப வேண்டும். குலதெய்வத்தின் அருளை நாம் பெற்றால் தான் மற்ற தெய்வங்களின் அருளாசியையும் நம்மால் பெற முடியும் என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அப்படிப்பட்ட குலதெய்வ வழிபாட்டை ஆடி மாதத்தில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. ஆடி மாதம் எப்படி அம்மனுக்கு உகந்த மாதமோ அதே போல் தான் குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த மாதமாக திகழ்கிறது. ஆடி மாதத்தில் நம் குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டோம் என்றால் அதன் பலன் நமக்கு இன்னும் அதிகமாகவே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் ஆடி மாதத்தில் குலதெய்வ கோவிலுக்கு நாம் செல்ல வேண்டும்.

அப்படி செல்லும் பொழுது குலதெய்வ கோவிலில் நம்மால் இயன்ற அளவிற்கு அன்னதானம் செய்ய வேண்டும். அன்னதானம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை என்னும் பட்சத்தில் நம்முடைய கைகளினால் அன்னதானத்திற்காக ஏதாவது ஒரு பொருளை வாங்கித் தர வேண்டும். இதில் முக்கியமான குறிப்பு என்னவென்றால் பணமாக தரக்கூடாது என்பதுதான். அரிசியோ, பருப்போ, காய்கறிகளோ அல்லது சமையலுக்கு தேவையான மற்ற பொருட்களோ ஏதாவது ஒன்றை நம்முடைய கைப்பட பொருளாக வாங்கி கோவிலில் இருக்கக்கூடிய அன்னதான கூடத்தில் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

அப்படி அங்கு இல்லாத பட்சத்தில் நாமே அன்னதானத்தை தயார் செய்து நம்முடைய கைகளால் அங்கு வரும் பக்தர்களுக்கு தானமாக தரவேண்டும். இப்படி நாம் தானமாக தரும்பொழுது அதை உண்டு பசி யாரும் பக்தர்களால் குலதெய்வம் மனமகிழ்ந்து நம்முடைய பிரச்சினைகளை தீர்த்து நமக்கு நிம்மதியை ஏற்படுத்தித் தருவார்.

இதையும் படிக்கலாமே:பௌர்ணமி தீபம் ஏற்றும் முறை

ஆடி மாதத்தில் செய்யக்கூடிய தானம் என்பது மிகவும் சிறப்புக்குரியதாகவே திகழ்கிறது. அதிலும் குறிப்பாக குலதெய்வ கோவிலில் நாம் தானம் செய்யும் பொழுது அதன் பலன் பல மடங்கு அதிகரிக்கும். அதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் நீங்கும். அதனால் பிரச்சனைகள் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்