- Advertisement -

கடன் தீர்க்கும் ஞாயிற்றுக்கிழமை பரிகாரம்

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய தீமைகளுக்கு காரணமாக திகழ்வது நம்மை சுற்றி இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் தான். இந்த எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி விட்டால் நம்மை தேடி நேர்மறை ஆற்றல்கள் வந்துவிடும். நேர்மறை ஆற்றல்கள் நம்மிடம் வந்துவிட்டால் நாம் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்துமே வெற்றிகரமாக நடைபெறும். மேலும் பணவரவிற்கு எந்தவித குறையும் இருக்காது. அதன் மூலம் கடன் பிரச்சினையும் தீரும். இப்படி நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை விலக்கி நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதற்கு கிராம்பை வைத்து ஞாயிற்றுக்கிழமை அன்று செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவுகளை நாம் பார்க்க போகிறோம்.

கடன் தீர்க்கும் ஞாயிற்றுக்கிழமை பரிகாரம்

ஒருவருக்கு பணம் சேர வேண்டும் என்றால் அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். கடினமாக உழைத்தால் மட்டும் பணம் சேர்ந்து விடுமா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. யார் ஒருவரிடம் நேர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருக்கிறதோ, எந்த இடத்தில் நேர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் தான் பணம் சேரும். அப்படி நேர்மறை ஆற்றல்கள் அதிகரிப்பதற்காக தான் நாம் பலவிதமான வழிபாடுகளையும் பூஜை முறைகளையும் பரிகாரங்களையும் செய்கிறோம். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை அன்று நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதற்கும் எதிர்மறை ஆற்றல் விலகவும் பணம் சேரவும் கடன் பிரச்சனை தீரவும் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று செய்வது என்பது மிகவும் சிறப்பு. முடிந்தவர்கள் தினமும் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். அதேபோல் அமாவாசை, பௌர்ணமி போன்ற சந்திர ஆதிக்கம் அதிகமாக இருக்கக்கூடிய நாட்களிலும் இந்த பரிகாரத்தை நாம் செய்யலாம். மேலும் செவ்வாய், வெள்ளி போன்ற சிறப்பு மிகுந்த நாட்களிலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தங்களுடைய வசதிக்கேற்ப ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்து அந்த நாளில் தொடர்ச்சியாக இந்த பரிகாரத்தை செய்து வருவதன் மூலம் தங்களிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கும். நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அதன் மூலம் பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்குவதோடு கடன் போன்ற பிரச்சனைகளும் தீரும்.

எந்த நாளில் இந்த பரிகாரத்தை செய்யப் போகிறீர்களோ அந்த நாளில் ராகு காலம் எமகண்ட நேரத்தை தவிர்த்து ஏதாவது ஒரு நேரத்தில் இதை செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்த பிறகு அசைவம் சாப்பிடலாம். ஆனால் அசைவம் சாப்பிட்ட பிறகு இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நமக்கு பச்சை கற்பூரமும், கிராம்பும் வேண்டும். ஒரு சிறிய அகல் விளக்கில் இரண்டு துண்டு பச்சை கற்பூரத்தை போட்டு அதில் ஐந்து கிராம்பை போட்டு எரித்து விடுங்கள்.

- Advertisement -

இதை நம்முடைய வீட்டின் மையப் பகுதியிலும் செய்யலாம், சமையல் அறையிலும் செய்யலாம் அல்லது எந்த இடத்தில் பணத்தை சேர்த்து வைக்கிறோமோ அந்த இடத்திலும் செய்யலாம். இப்படி அந்த பச்சை கற்பூரமும் கிராம்பும் முழுமையாக எரிந்த பிறகு அதிலிருந்து வரக்கூடிய புகையை வீடு முழுவதும் காட்ட வேண்டும். வீடு முழுவதும் காட்ட இயலாவிட்டாலும் எந்த இடத்தில் எல்லாம் பணத்தை நாம் சேர்த்து வைத்திருக்கிறோமோ அந்த இடத்தில் காட்ட வேண்டும்.

இப்படி காட்டுவதன் மூலம் அந்த இடத்தில் இருக்க கூடிய எதிர்மறை ஆற்றல் முற்றிலும் நீங்கும். பச்சை கற்பூரமும், கிராம்பும் மகாலட்சுமிக்கு உகந்த பொருட்களாக திகழக்கூடியது. இதனுடைய வாசத்திற்கு மகாலட்சுமி அடிமை ஆவாள் என்றும் கூறப்படுகிறது. எதிர்மறை ஆற்றலை நீக்கி அதிக அளவில் நேர்மறை ஆற்றலை ஈர்க்கக் கூடியதாகவும் இவை இரண்டும் திகழ்கிறது. அதனால் முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல் அனைத்தும் நீங்கி மகாலட்சுமியின் அருளால் செல்வ செழிப்பு அதிகரிக்கும். பணவரவு ஏற்பட்டு கடன் பிரச்சனை தீரும்.

இதையும் படிக்கலாமே:தடைகளை தகர்த்தெறியும் விநாயகர் வழிபாடு

எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும் பரிகாரமாக இருந்தாலும் முழு மனதோடு எந்தவித சந்தேகமும் இல்லாமல் செய்தால்தான் அதனுடைய பலனை நம்மால் பெற முடியும். அந்த வகையில் இந்த பரிகாரத்தை முழுமனதோடு செய்து கடன் என்ற எதிர்மறை ஆற்றல் முற்றிலும் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -