- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதடைகளை தகர்த்தெறியும் விநாயகர் வழிபாடு

தடைகளை தகர்த்தெறியும் விநாயகர் வழிபாடு

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு செயலை செய்வோம். அந்த செயல் நல்லபடியாக முடிந்து விட்டால் அதனால் நமக்கு நல்ல பலன்கள் உண்டாகும். ஒருவேளை நாம் செய்யக்கூடிய அந்த செயலில் ஏதாவது தடைகள் ஏற்பட்டால் அந்த தடைகளால் நாம் திட்டமிட்ட அனைத்துமே பாழாய் போய்விடும். மேலும் நாம் நம்முடைய எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக ஏதாவது முயற்சிகள் செய்யும் பட்சத்தில் அந்த முயற்சிகளும் தடைப்பட்டு போய்விட்டாலும் மனவருத்தம் உண்டாகும். இப்படி நம்முடைய வெற்றிகளை தடுக்கக்கூடிய தடைகளை நீக்குவதற்கு விநாயகப் பெருமானை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தடைகளை தகர்த்தெறியும் விநாயகர் வழிபாடு

முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்றும் அவரை நினைத்து நாம் செய்யக்கூடிய எந்த ஒரு செயலும் வெற்றியே அடையும் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை நாம் சில சூட்சும முறைப்படி வழிபாடு செய்தோம் என்றால் நாள்பட்ட தடைபட்ட செயல்கள் அனைத்தும் தடையின்றி வெற்றிகரமாக நடைபெறும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும் இந்த முறைப்படி பலரும் விநாயகர் பெருமானை வழிபாடு செய்து அவர்கள் வேண்டியவரத்தை பெற்றிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அந்த வழிபாட்டு முறையை இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை விநாயகப் பெருமானுக்கு உகந்த கிழமைகளான திங்கட்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை போன்ற கிழமைகளில் செய்யலாம் அல்லது பௌர்ணமி, அமாவாசை போன்ற தினங்களில் செய்யலாம் அல்லது விநாயகப் பெருமானுக்கு உரிய சதுர்த்தி திதி வரக்கூடிய நாட்களில் செய்யலாம். இதற்கு நமக்கு சில குறிப்பிட்ட இலைகளும் பூக்களும் தேவை. அவை தான் விநாயகப் பெருமானுக்கு உகந்த இலைகள் ஆகவும் பூக்களாகவும் திகழ்கின்றன.

பொதுவாக விநாயகர் சதுர்த்தி நாளன்றுதான் பலரும் விநாயகர் பெருமானுக்கு 21 என்ற எண்ணிக்கையில் இலைகளை சேகரித்து அர்ச்சனை செய்வார்கள். அதே போல் 21 என்று எண்ணிக்கையில் மலர்களையும் சேகரித்து அர்ச்சனை செய்வார்கள். அப்படி வருடத்திற்கு ஒருமுறை செய்வதற்கு பதிலாக இப்படி நம்முடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக 10 விதமான இலை மற்றும் பூக்களை சேகரித்து விநாயகப் பெருமானை நாம் வழிபாடு செய்தோம் என்றால் விநாயகப் பெருமான் மனம் மகிழ்ந்து நாம் வேண்டியவரத்தை நமக்கு அருள்வாய்.

- Advertisement -

இதற்கு அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகப் பெருமானுக்கு முன்பாக ஒரு தட்டை வைத்து அந்த தட்டிற்கு மேல் அரச இலை, மாதுளை இலை, வெற்றிலை, துளசி இலை, எருக்கு இலை, எருக்கு பூ, அருகம்புல், முல்லைப் பூ இலை போன்றவற்றை பரப்பி அதற்கு நடுவே ஒரு அகல் விளக்கில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு விநாயகப் பெருமானிடம் நம்முடைய வேண்டுதலை முழுமனதோடு வைத்து அவரை மூன்று முறை வலம் வந்து தலையில் கொட்டிக்கொண்டு வழிபாடு செய்ய வேண்டும்.

இப்படி தொடர்ச்சியாக தங்களால் இயன்ற எண்ணிக்கையில் விநாயகப் பெருமானை வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ என்று கணக்கில் வைத்துக்கொண்டு விநாயகப் பெருமானை தொடர்ச்சியாக வழிபாடு செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் விநாயகப் பெருமான் விரைவிலேயே நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுவார் நமக்கு இருக்கக்கூடிய தடைகளை நீக்குவார்.

இதையும் படிக்கலாமே: கஷ்டம் வரும்போது செய்ய வேண்டிய முருகர் வழிபாடு

அதிசக்தி வாய்ந்த இந்த விநாயகர் வழிபாட்டை முழு மனதோடு தொடர்ச்சியாக யார் ஒருவர் செய்கிறார்களோ அவர்கள் நினைத்த காரியத்தில் எந்தவித தடைகளும் இல்லாமல் விரைவிலேயே நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்