- Advertisement -

கடன் தீர்க்கும் தோரண கணபதி வழிபாடு

- Advertisement -

பொதுவாக சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகர் பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளன்று நாம் விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வழியை விநாயகப் பெருமான் காட்டுவார். அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தோரண கணபதி வழிபாடு

விநாயகப் பெருமான் பல வடிவங்களில் காட்சித் தந்திருக்கிறார் என்றும் அதில் கடன் பிரச்சினை தீர்வதற்கு உதவக்கூடிய விநாயகராக தோரண கணபதி திகழ்கிறார் என்றும் நம்மில் பலருக்கும் தெரியும். தோரண கணபதி இருக்கக்கூடிய ஆலயங்கள் என்பது மிகவும் அரிதாக காணப்படக்கூடிய ஒன்று. அதனால் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதை விட வீட்டிலேயே தோரண கணபதியாக நினைத்து நாம் வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய கடன் பிரச்சனை தீரும்

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளன்று மாலை நேரத்திலோ அல்லது பிரம்ம முகூர்த்த நேரத்திலோ இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். இந்த வழிபாட்டை செய்வதற்கு மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்து “ஓம் தோரண கணபதி ஆவாகயாமி” என்னும் மந்திரத்தை மூன்று முறை கூறி அந்த மஞ்சள் பிள்ளையாருக்கு மலர்களை போட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அந்த மஞ்சள் பிள்ளையாரில் தோரண கணபதியை நாம் ஆவாகனம் செய்கிறோம் என்று பொருள்படும்.

பிறகு செம்பருத்தி பூ அல்லது செம்பருத்தி இலை அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய மலர்கள் எதுவாக இருந்தாலும் 108 என்ற எண்ணிக்கையில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தோரண கணபதிக்கு முன்பாக ஆறு நெய் தீபங்களை ஏற்றி வைத்து “ஓம் தோரண கணபதியே நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி நாம் எடுத்து வைத்திருந்த மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஒருவேளை சிவப்பு நிற மலர்களை கிடைக்கவில்லை என்னும் பட்சத்தில் பச்சரிசியில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு குங்குமத்தை போட்டு நன்றாக கலந்து அட்சதையாக தயார் செய்து அந்த அட்சதையை ஒன்றிரண்டாக போட்டும் அர்ச்சனை செய்யலாம்.

- Advertisement -

விநாயகப் பெருமானுக்கு நெய்வேத்தியமாக அச்சு வெல்லத்தை வைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி இந்த வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். தொடர்ச்சியாக ஆறு ஞாயிற்றுக்கிழமை இந்த முறையில் தோரண கணபதியை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய கடன் பிரச்சனைகள் தீர்வதற்குரிய வழி நமக்கு கிடைக்கும். நாம் கடன் பிரச்சினை தீருவதற்காக எடுக்கும் முயற்சிகளும் வெற்றி அடையும்.

இதையும் படிக்கலாமே:வேண்டிய வேண்டுதலை நிறைவேற்றும் சங்கடஹர சதுர்த்தி தீபம்

இந்த முறையில் ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளன்று தோரண கணபதியை வீட்டிலேயே வழிபாடு செய்பவர்களுக்கு தோரண கணபதியின் அருளால் கடன் பிரச்சனை தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -