- Advertisement -

செவ்வாய் ஓரையில் இதை மட்டும் ஒரு டப்பாவில் போட்டு வையுங்கள் போதும். உங்களுக்குத் தொல்லை கொடுக்கும் கடன் பிரச்சனை விரைவில் தீர்ந்துவிடும்

- Advertisement -

வருகின்ற வருமானம் போதுமானதாக இல்லாத சமயங்களில் தான் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. திருமணம், வளைகாப்பு, பண்டிகை போன்ற நல்ல காரியங்களுக்காக வாங்கப்படும் கடன் சுபக் கடன் என்றும், விபத்து, உடல்நலக் குறைவு இவற்றிற்காக வாங்கப்படும் கடன் அசுப கடன் என்றும் கூறப்படுகிறது. எப்படி நெருப்பிலும், பகையிலும் மிச்சம் வைக்க கூடாதென்று பெரியவர்கள் சொல்வார்களோ அதுபோல வாங்கிய கடனிலும் எப்பொழுதும் மிச்சம் வைக்க கூடாது. இவை மூன்றுமே பெருகிக்கொண்டே சென்று பெரிய அழிவினை உண்டாக்கிவிடும். எனவே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வாங்கிய கடனை அடைத்துவிட வேண்டும். அவ்வாறு முழுவதுமாக அடைக்க முடியாத ஒரு சில கடன்களை எளிய பரிகாரங்கள் செய்வதன் மூலம் விரைவாக அடைத்து விடலாம். இதற்காக நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதனை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கடன்:
ஜோதிட சாஸ்திரத்தில் ருணம் என்றால் கடன் என்று சொல்லப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் தசாபுத்திகளின் தாக்கம் காரணமாகவே கடன் வாங்கவேண்டிய நிலைமை உண்டாகிறது. எவ்வாறு வாங்கிய கடனை விரைவில் அடைக்க முடியும் என்பதற்கான சில வழிமுறைகளும் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

கடன் தீர்க்கும் வழிகள்:
வாங்கிய கடனை மொத்தமாக தான் திருப்பித் தர வேண்டடும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. உங்களால் முடிந்தவரை சிறிய சிறிய தொகையாகவும் திருப்பிக் கொடுத்து கடனை அடைத்துவிடலாம். எவ்வாறு சுப காரியங்கள் செய்வதற்கு முன்னர் நாள், கிழமை இவற்றையெல்லாம் பார்த்து நல்ல நேரங்களில் செய்கின்றோமமோ அதுபோல வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கும் சில கால, நேரங்கள் இருக்கின்றன. அவ்வாறு ஜோதிடத்தில் குறிப்பிட்டுள்ள சில முக்கிய கால நேரத்தில் நாம் வாங்கிய கடனிலிருந்து சிறு தொகையை மட்டுமாவது கடன் வாங்கியவரிடம் திரும்பி கொடுத்தோம் என்றால் அந்த கடன் விரைவில் முழுவதுமாக அடைந்துவிடும்.

அஸ்வினி மற்றும் அனுஷம் நட்சத்திர நாட்களில் வாங்கிய கடனில் இருந்து சிறு பகுதியை திருப்பி கொடுத்தால் உங்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் கடன் பிரச்சனை விரைவில் முழுவதுமாக அடைந்து விடும்.

- Advertisement -

சனிக்கிழமை சதுர்த்தி, ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி மற்றும் குளிகை நேரங்களில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்தீர்கள் என்றால் மீண்டும் நீங்கள் கடன் வாங்கும் நிலைமை என்பதே உங்களுக்கு ஏற்படாது.

செவ்வாய் ஓரை:
இவற்றில் எல்லாம் மிகவும் முக்கியமான ஒன்று செவ்வாய் ஓரை செவ்வாய் ஓரையில் நாம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கும் பொழுது நிச்சயம் உங்கள் கடன் விரைவில் அடைந்து மனதிற்கு நிம்மதி கொடுக்கும்.

செவ்வாய் ஓரையில் காலை நேரத்தில் உங்களால் கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை என்றால் வீட்டில் ஒரு பச்சை நிற டப்பாவை எடுத்து கொண்டு நீங்கள் கடன் வாங்கியவரின் பெயரைச் சொல்லி உங்களால் இயன்ற தொகையை செவ்வாய் ஓரை நேரத்தில் தவறாமல் அந்த டப்பாவில் போட்டு வைத்துவிட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு செவ்வாய் ஓரையிலும் தவறாமல் செய்து வந்தோம் என்றால் உங்கள் கடனுக்கான முழு தொகையும் விரைவில் சேர்ந்து விடும். அதன்பின் உங்களுக்கு தொல்லை கொடுக்கும் அந்த கடனை முழுவதுமாக அடைத்து விடலாம்.

- Advertisement -