
காலங்களுக்கு அதிபதியாக திகழக்கூடியவர் கால பைரவர் என்றும் கர்ம வினைகளை கணக்கீடு செய்யக்கூடிய சனீஸ்வர பகவானுக்கு குருவாக காலபைரவர் திகழ்கிறார் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். காலபைரவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு எண்ணில் அடங்காத நல்ல பலன்கள் கிடைக்கும். எந்த பிரச்சனை தீர வேண்டும் என்று முழு மனதோடு காலபைரவரை நாம் வழிபாடு செய்கிறோமோ அந்த பிரச்சனை தீர்வதற்குரிய வழி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு காலபைரவரை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக திகழ்வதுதான் கடன் பிரச்சனை. கடன் பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் யாரிடம் இருந்தாவது பணத்தை வாங்கிவிட்டு அதை திரும்பத் தர முடியாமல் வட்டி கட்டிக்கொண்டு இருக்கக்கூடிய ஒவ்வொரு நபரும் விரைவிலேயே அந்த கடனை தீர்த்து வட்டி கட்டுவதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். கடன் பிரச்சினை மட்டுமல்ல நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனை என்று நாம் எதை நினைக்கிறோமோ அந்த பிரச்சினை தீர வேண்டும் என்று இந்த வழிபாட்டை நாம் செய்யலாம்.
இந்த வழிபாட்டை அஷ்டமி தினத்தில் தான் செய்ய வேண்டும். இன்றைய தினம் திங்கட்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய அஷ்டமி இதை சோமாஷ்டமி என்று கூறுவது உண்டு. திங்கட்கிழமை என்பது சிவபெருமானுக்குரிய கிழமை. சிவபெருமானுக்குரிய கிழமையில் சிவபெருமானின் அம்சமான கால பைரவருக்குரிய திதியான அஷ்டமி திதி வருவது என்பது இந்த வழிபாட்டிற்கு நல்ல பலனை தரும். சூரிய உதயம் ஆகும்பொழுது எந்த திதி இருக்கிறதோ அந்த திதி தான் அன்றைய நாள் முழுவதும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் இன்றைய தினம் முழுவதும் அஷ்டமி திதி இருப்பதாக நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டை நாம் வீட்டிலேயே செய்யலாம். அவ்வாறு செய்வதற்கு நமக்கு காலபைரவரின் சிலையோ படமோ தேவை என்ற எந்த நிபந்தனையும் கிடையாது.
இதற்கு நமக்கு புதிதாக வாங்கிய எட்டு அகல் விளக்குகள் வேண்டும். இந்த அகல் விளக்குகளில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். கால பைரவருக்கு நெய்வேத்தியமாக அவள் வெல்லம் இரண்டையும் கலந்து வைக்க வேண்டும். அடுத்ததாக காலபைரவரின் அஷ்டகம் இருக்கிறது. அந்த அஷ்டகத்தை எட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்வாறு பாராயணம் செய்து முடித்த பிறகு காலபைரவரை முழுமனதோடு வழிபாடு செய்து எந்த பிரச்சினை தீர வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த பிரச்சினையை கூற வேண்டும்.
இந்த வழிபாட்டை இரவு 8 மணிக்கு மேல் தான் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையில் தொடர்ச்சியாக 8 அஷ்டமிகள் நாம் ஒரே பிரச்சினை தீர வேண்டும் என்று கூறி பைரவருக்கு எட்டு தீபங்கள் ஏற்றி வைத்து அவருடைய அஷ்டகத்தை படிப்பதன் மூலம் அந்த பிரச்சனை தீர்வதற்குரிய வழியை காலபைரவர் காட்டுவார்.
இதையும் படிக்கலாமே:முருகனுக்கு மாவிளக்கு பரிகாரம்
வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும், இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் காலபைரவரை முழுமனதோடு நம்பி இந்த முறையில் அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்ய அவர்களுடைய பிரச்சினைகள் படிப்படியாக குறையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.