
வாராஹியை வழிபாடு செய்பவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி குவியும். மன தைரியம் அதிகரிக்கும். நினைத்த நேரத்தில் கூப்பிட்டு குரலுக்கு ஓடி வரக்கூடிய தாய் இந்த வாராஹி. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. நம்முடைய உடலில் எலும்புக்கு சொந்தக்காரியாக இந்த வாராகியை சொல்கிறார்கள். உங்களுக்கு எலும்பு சம்பந்தப்பட்ட ஏதாவது பிரச்சனை இருந்தாலும், நீங்கள் வாராகி வழிபாடு செய்யலாம்.
அந்த பிரச்சனை உடனடியாக தீரும். இது ஒரு புது தகவல். உங்களுக்கு இது தெரியும் என்றால் பரவாயில்லை. தெரியாதவர்கள் புதுசாக இந்த பஞ்சமி திதி அன்று இதை தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சிதான். சரி இன்றைய தினம் கடன் சுமை குறைய வாராகியின் எந்த நாமத்தை சொல்லி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி ஆன்மீக சார்ந்த தகவலை தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
வாராகி ஒரு சிம்ம வாகினி. சிம்மத்தின் மீது வருபவள். சிம்மத்தை தன்னுடைய வாகனமாகக் கொண்டவள். சிங்கம், வராகிக்கு வாகனமாக இருக்கும் சிங்கத்திற்கு பெயர்தான் வஜ்ரகோஷம். வஜ்ரகோஷம் என்ற பெயரை சொன்னாலே நம்முடைய மனதில் தைரியம் வந்துவிடும். எவ்வளவு பெரிய காரியமாக இருந்தாலும் சரி, அதை துணிச்சலாக எதிர்கொண்டு செய்வோம்.
அப்படித்தான் கடனை எதிர்கொள்ள ஒரு தன்னம்பிக்கையும் தைரியமும் நமக்குத் தேவை. அப்போது தானே கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்து திருப்பி கொடுக்க முடியும். இன்று மாலை 6:00 மணிக்கு மேல் இரவு 12:00 மணிக்குள் உங்களுக்கு எந்த நேரம் சௌகரியமாக இருக்கிறதோ, அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இன்றைய தினம் முழுவதும் பஞ்சமி திதி இருக்குது. நாளை காலை 11 மணி வரை பஞ்சமி திதி தான் அதனால் கவலையே பட வேண்டாம். பொறுமையாக இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள்.
உங்களுடைய வீட்டில் வாராஹி படம் இல்லை என்றால் கவலையே பட வேண்டாம் பூஜை அறையில் ஒரு விளக்கு மட்டும் ஏற்றுங்கள். வாராகியின் திருவுருவப்படம் இருந்தால் உங்கள் பாக்கியம். அந்த படத்திற்கு அலங்காரம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து ஒரு நெய்வேதியம் வைத்து பிறகு இந்த வழிபாட்டை மேற்கொள்ளவும்.
குளிர்ந்த சந்தனத்தை பன்னீரில் குழைத்து, அதை உங்களுடைய வலது கை ஆள்காட்டி விரலால் தொட்டு, அந்த சந்தனத்தை எடுத்து வெற்றிலையின் மேல் ‘வஜ்ர கோஷம்’ என்று எழுதி, அப்படியே திறந்தபடியே வாராகி அன்னையின் முன்பாக வைத்து விடுங்கள். இப்போது நீங்கள் பூஜை அறையில் அமர்ந்து கொள்ளவும். எரிந்து கொண்டிருக்கும் விளக்கை பார்க்கலாம், வாராகித் தாய் இருந்தால் அவளை பார்க்கலாம்.
இரண்டு கைகளையும் ஏந்தி உங்களுக்கு என்ன கடன் சுமை இருக்கிறதோ, அது குறைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வஜ்ரகோஷம் என்ற நாமத்தை 108 முறை சொல்லுங்கள். தைரியமும் வராஹித்தாயும் தானாக உங்கள் உடம்புக்குள் நுழைந்து விடும். பிறகு தீப தூப ஆராதனை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். மூன்று நாட்கள் அந்த வெற்றிலை வாடும்வரை பூஜை அறையிலேயே இருக்கட்டும்.
வாடிய பிறகு எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடலாம். அவ்வளவுதான், வழிபாடு முடிந்தது. இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொண்டால் கடனை திருப்பித் தருவதற்கு உண்டான எல்லா வழிகளையும் அந்த தாய் காண்பித்துக் கொடுப்பாள். கடன் கொடுத்வரை பார்த்து நீங்க பயப்படவே வேண்டாம் தைரியமாக எதிர்த்து நிற்பீர்கள்.
நம்முடைய கஷ்டத்திற்காக கடன் வாங்கி இருக்கோம். நம் கஷ்டம் தீர்க்க கடன் கொடுத்தவர்களிடம் சண்டை போடக்கூடாது. இருந்தாலும் பிரச்சனை தலைக்கு மேல் போய்விட்டது. அவர்களை எதிர் கொள்ள முடியவில்லை எனும்போது நமக்கு கொஞ்சம் துணிவு தேவை. அப்போதுதான் நியாயமாக நாம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியும் அல்லவா.
இதையும் படிக்கலாமே: கொடுத்த கடனை திரும்ப பெற வீட்டில் ஏற்ற வேண்டிய தீபம்
எந்த சூழ்நிலையிலும் நமக்கு உதவி செய்தவர்களை உதாசீனப்படுத்த கூடாது. அதையும் வாராகித்தாய் ஒரு கண் கொண்டு பார்த்துக் கொண்டே இருப்பாள். கைநீட்டி கடன் வாங்கி விட்டோம் கடன் கொடுத்தவன் நம்மை திட்டி கடன் கேட்பதால், அதை தவறு என்று சொல்லிவிட முடியாது. இந்த சூழ்நிலையில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள வழிபாடு கை வைக்கும். கூடவே நீங்கள் எடுக்கக் கூடிய முயற்சிகள் தான் முழு கடனை கொடுக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.