
நம்மில் பலருக்கும் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான பிரச்சனை என்றால் அது கடன் பிரச்சனைதான். கடன் பிரச்சினை தீர்வதற்காக பலவிதமான முயற்சிகளை நாம் மேற்கொள்வோம். அதேசமயம் அந்த முயற்சிகள் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக பல தெய்வங்களை வழிபாடு செய்யும் வழக்கமும் இருக்கும். அதே சமயம் பல பரிகாரங்களை செய்தும் பார்ப்போம். இருப்பினும் நமக்கு கடன் பிரச்சினை தீரவில்லை என்று நினைப்பவர்கள் இன்று இரவுக்குள் இந்த பரிகாரத்தை செய்ய விரைவிலேயே கடன் பிரச்சினை தீரும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் பிரச்சனை தீர்வதற்கு நமக்கு சில குறிப்பிட்ட தெய்வங்கள் விரைவிலேயே அருள் புரியும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தெய்வங்கள் ஒரு தெய்வமாக திகழ்பவர் தான் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரை நாம் தொடர்ச்சியாக வழிபாடு செய்யும்பொழுது எப்பேர்ப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் அந்த சூழ்நிலையை சமாளிப்பதற்குரிய மன தைரியம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை நினைத்து கடன் பிரச்சினை தீர்வதற்காக வெற்றிலையை வைத்து செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம்.
இந்த பரிகாரத்தை இன்று இரவு 12 மணிக்குள் செய்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக 7 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இன்று சுவாதி நட்சத்திரத்துடன் கூடிய சனிக்கிழமை என்பதால் கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வழிபாட்டை செய்யும் பொழுது அதற்கு அதிக அளவில் பலன் கிடைக்கும். இதற்கு நமக்கு ஒரு வெற்றிலையும் ஒரு ரூபாய் நாணயமும் இருந்தால் போதும். வேறு எதுவுமே செய்ய வேண்டியது கிடையாது. கிழியாத நல்ல வெற்றிலையாக எடுத்து அதை தண்ணீரால் சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது அதில் ஒரு ஸ்கெட்ச் அல்லது மார்க்கரை வைத்து உங்களுடைய கடன் பிரச்சினை தீர்வதற்கு எவ்வளவு தொகை தேவைப்படுமோ அதை எழுத வேண்டும். எடுத்துக்காட்டாக 5 லட்சம் 10 லட்சம் என்று எழுத வேண்டும். பிறகு அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அதன் காம்பை மட்டும் நீக்கிவிட்டு நாணயம் கீழே விழுகாத அளவிற்கு நன்றாக மடித்து ஒரு நூலை வைத்து கட்டி விடுங்கள். கட்டிய இந்த வெற்றிலையை வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயரின் படத்திற்கு முன்பு அல்லது பெருமாளின் படத்திற்கு முன்பு வைத்து விட வேண்டும். இதே போல் தொடர்ச்சியாக ஏழு நாட்கள் செய்ய வேண்டும்.
அப்பொழுது ஏழு வெற்றிலை மூட்டைகள் இருக்கும். எட்டாவது நாள் அதாவது அடுத்த வாரம் சனிக்கிழமை அன்று இந்த வெற்றிலை மூட்டைகளில் இருக்கக்கூடிய இந்த வெற்றிலையில் இருக்கக்கூடிய நாணயத்தை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நாணயங்களை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் சன்னதிக்கு சென்று ஆஞ்சநேயரை முழுமனதோடு வழிபாடு செய்து விட்டு அந்த நாணயங்களை ஆஞ்சநேயரின் உண்டியலில் போட்டு விட வேண்டும். வெற்றிலைகளை கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இப்படி நாம் செய்வதன் மூலம் விரைவிலேயே நம்முடைய கடன் பிரச்சினை தீருவதற்குரிய ஒரு வழியை ஆஞ்சநேயர் காட்டுவார்.
இதையும் படிக்கலாமே: சுடலை மாடசுவாமி வழிபாடு
முழு நம்பிக்கையோடு ஆஞ்சநேயரை மனதார நினைத்து இந்த வெற்றிலை பரிகாரத்தை செய்பவர்களுக்கு அவர்களுடைய கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வழி உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.