- Advertisement -

கடன் சுமை தீர்க்கும் கந்தர் அனுபூதி

- Advertisement -

ஒருவர் வாழ்க்கையில் பணக்கஷ்டம் வருவதற்கும், கடன் சுமை உண்டாவதற்கும், நிறைய காரணங்கள் இருக்கும். ஆனால் அதற்கு முக்கியமான ஒரு காரணம் செவ்வாய் பகவான். சில பேருக்கு செவ்வாய் திசை நடக்கும் போது, தன்னிடம் இருந்த செல்வங்களை  எல்லாம் இழந்து இருப்பார்கள். கொடிகட்டி பறந்து இருப்பார்கள் வியாபாரத்தில்.

ஆனால் செவ்வாய் திசை நடக்கும் அந்த 7 வருடத்தில் கையில் இருக்கும் அத்தனை பணத்தையும், கஷ்டப்பட்டு சேர்த்த அத்தனை பணத்தையும் கோட்டை விட்டு கடனாளியாக நிற்பார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலை சில பேருக்கு இருக்கும். சில பேருக்கு ஏதோ நேரம் காலம் சரியில்லாத காரணத்தால், கையில் இருக்கும் பணத்தை எல்லாம் இழக்க கூடிய சூழ்நிலையும், கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகி இருக்கும்.

- Advertisement -

உங்களுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, செவ்வாய் பகவானை நினைத்து, அந்த முருகப்பெருமானை வேண்டி, செவ்வாய்க்கிழமை தோறும் இந்த மந்திரத்தை சொன்னால், அந்த கடன் பிரச்சனையில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகளை அந்த முருகப்பெருமான் ஏற்படுத்திக் கொடுப்பார். அது என்ன மந்திரம் அதை தினமும் எப்படி படிப்பது. ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

கந்தர் அனுபூதியில் இருந்து எடுக்கப்பட்ட பாடல் தான் இது. எம்பெருமான் முருகனை நம்பிக்கையோடு நினைத்து மனமுருகி இந்த பாடலை படித்து வந்தால் ஜாதக கட்டத்தில் செவ்வாயால் வரும் கஷ்டங்கள் உங்களுக்கு குறைக்கப்படும்.

- Advertisement -

கடன் தீர்க்கும் கந்தர் அனுபூதி பாடல் வரிகள்.

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.

எல்லோராலும் படிக்கும்படி இருக்கக்கூடிய தமிழில் கொடுக்கப்பட்டிருக்கும் பாடல் வரிகள் இவை. சுலபமாக இதை நீங்கள் படித்து விடலாம். கடன் சுமையில் சிக்கியிருந்தால், தினமும் காலையில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, முருகா நீ தான் துணை. நீ தான் என் கடன் சுமையை குறைக்க வேண்டும். என் கடனை உன் பாதத்தில் இறக்கி வைத்து விட்டேன் என்று, முழுமையாக முருகனை சரணாகதி அடைந்து இந்த மந்திரத்தை சொல்லலாம்.

- Advertisement -

தினமும் இந்த மந்திரத்தை சொல்ல முடியாதவர்கள் செவ்வாய்க்கிழமை கட்டாயம் சொல்லுங்கள். கோவிலுக்கு சென்று முருகப்பெருமான் முன்பு அமர்ந்து, முருகன் வேல் முன்பு அமர்ந்து சொன்னாலும் தவறு கிடையாது. இந்த மந்திரத்தை சொல்லச் சொல்ல கடன் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

கடனை அடைப்பதற்கு உண்டான வாய்ப்புகளை கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து உங்களுக்கு சொல்லுவான். நம்பிக்கை உள்ள முருகர் பக்தர்களுக்கு இந்த பதிவு. சில பேர் எல்லாம் வாழ்ந்து கெட்டவர்களாக இருப்பார்கள். பிறவியிலிருந்தே ஏழையாக இருந்தாலும் பிரச்சனை இல்லை. ஆனால் நன்றாக வாழ்ந்து, கெட்டு பணமில்லாமல் வாழ்பவர்களுடைய நிலைமை இந்த பூலோகத்தில் ரொம்ப ரொம்ப கடினமானது.

இதையும் படிக்கலாமே: கடிகாரம் அதிர்ஷ்ட பலன்கள்

நீங்கள் வாழ்க்கையில் வாழ்ந்து கெட்டவர்கள், இழுந்த செல்வத்தை மீண்டும் மீட்டு தர வேண்டும் இறைவா என்று வணங்கியும் இந்த பாடலை படிக்கலாம். இந்தப் பாடலை ஒரு நாளைக்கு 6 முறை பாடுவது சிறப்பான பலனை தரும் என்பது குறிப்பிடத்தக்கது. முருகப்பெருமான் உங்களுக்கு நல்லதை மட்டுமே செய்வார் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -