“நேரம் பொன் போன்றது” என்னும் பழமொழியை மட்டும் மனதில் வைத்து செயல்பட்டால், வெற்றி என்றும் யாருக்கும் எட்டாக்கனியாக இருப்பதில்லை. நேரம் உண்மையிலேயே நமக்கானதாக மாறுவதற்கு முதலில் நாம் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நேரம் காட்டும் இந்த கடிகாரம் மற்றும் கைக்கடிகாரம் நமக்கு தரக் கூடிய அதிர்ஷ்ட பலன்கள் என்னென்ன? என்னும் சுவாரஸ்யமான ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
கடிகாரம் இல்லாத வீடுகளே கிடையாது. கடிகாரம் நம்மை சுற்றி ஏதோ ஒரு இடத்தில் டிக் டிக் என்று நம் மனதில் அலாரத்தை அடித்து எச்சரித்துக் கொண்டே இருப்பதால் என்னவோ, அதையும் கடவுளாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. நாம் தவறு செய்யும் பொழுதெல்லாம் ஏதோ ஒரு சக்தி நம்மை எச்சரிக்கும். இப்படி நமக்கு எச்சரிக்கை கொடுப்பது தான் நாம் செய்த புண்ணியம். இந்த எச்சரிக்கை அடிக்காவிட்டால் நம் வாழ்க்கை திசை மாறிப் போய்விடும்.
ஒரே இடத்தில் ரெண்டு கடிகாரங்கள், ஒரே மாதிரியான நேரத்தை காண்பிப்பது கிடையாது. சற்று முன் பின் தான் கடிகார முள்ளானது நிற்கும். அது போல மனிதர்களும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியானவர்கள், அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். நம் வழிக்கு கொண்டு வர நினைத்தால் நம்மை விட முட்டாள் வேறு யாரும் இல்லை. மனிதனுடைய அதிர்ஷ்டம் என்னும் சக்தியை தூண்டி விடக் கூடியது இந்த கடிகாரம்.
வீட்டில் கடிகாரத்தை கிழக்கு திசையில் மாட்டினால், அந்த வீட்டிற்கு அதிர்ஷ்டம் இருக்கும். சுபகாரியங்களுக்கு கடிகாரத்தை பரிசு கொடுத்தால் அல்லது வாங்கிக் கொண்டால் பரஸ்பர உறவு நீடிக்கும். கடிகாரம் ஒரு இன்ச் கூட சாய்ந்து இருக்கக் கூடாது, இது எதிர்மறை சக்தியை பெருக்கும். கடிகாரத்தை சரியாக நேராக நிமிர்த்தி வைக்க வேண்டும். உடைந்த கடிகாரங்களை வீட்டில் வைக்கக் கூடாது. வடக்கில் கடிகாரம் வைத்தால் உழைப்பில் முன்னேறலாம். தொழில் செய்யும் இடங்களில், வடக்கில் கடிகாரத்தை மாட்டி வையுங்கள்.
கைக்கடிகாரம் இல்லாமல் முன்பெல்லாம் வெளியில் செல்ல மாட்டோம் ஆனால் இப்பொழுது கையில் மொபைல் ஃபோன் இருப்பதால் வாட்ச் கட்டுவதற்கு பெரும்பாலும் யாரும் விரும்புவது கிடையாது, ஆனால் மணிக்கட்டு பகுதியில் இந்த வாட்ச் இருப்பதால் உடம்பில் சுறுசுறுப்பும், அதிர்ஷ்ட ரேகைகளும் நன்கு வேலை செய்யும். ஆணாக இருந்தால் இடது கையிலும், பெண்ணாக இருந்தால் வலது கையிலும் கடிகாரத்தை அணிய வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
பிள்ளை பேறு பெற பரிகாரம்
பெண்கள் பெரும்பாலும் இடது கையில் தான் கடிகாரத்தை அணிவார்கள். ஆனால் நீங்கள் வலது கையில் மாற்றி கடிகாரத்தை அணிந்து பாருங்கள், உங்களுக்குள் புது உற்சாகமும், தன்னம்பிக்கையும் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும். எந்த நேரத்திலும் எதையும் உங்களால் சாதிக்க முடியும் என்னும் தைரியம் பிறக்கும். பெண்ணிற்கு வலது கை மணிக்கட்டு நரம்புகள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். எனவே அவள் வலது கையிலும், ஆண் ஆனவன் இடது கையில் அதிர்ஷ்ட ரேகைகள் பெற்றுள்ளான், எனவே அவன் வலது கையிலும் வாட்ச் அணிந்து வந்தால், வாழ்க்கையில் புதிய புதிய விஷயங்களை கற்று உணர்வீர்கள். அதிர்ஷ்ட ரேகைகள் நன்கு வேலை செய்து, உங்களுக்கான அதிர்ஷ்டத்தை ஈர்த்துக் கொண்டு வந்து தரும்.