- Advertisement -

கடனை தீர்க்கும் தை அமாவாசை பரிகாரம்

- Advertisement -

கடன் என்ற மூன்றெழுத்து சொல்லால் நம்முடைய வாழ்க்கையே மாறிவிடும் என்று கூறலாம். கடன் வாங்கினாலும் பிரச்சனை உண்டாகும். கடனாக பணத்தை கொடுத்தாலும் பிரச்சனைகள் உண்டாகும். இதை பலரும் தங்களுடைய வாழ்க்கையில் அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பார்கள். ஒருவரிடம் இருந்து கைநீட்டி பணத்தை வாங்கி விட்டோம் என்றால் அந்த கடனை திருப்பி செலுத்தும் வரை நமக்கு அது ஒரு பெரிய சுமையாகவே இருக்கும். அதனால் நம்முடைய மானத்தை நிம்மதியையும் இழக்க வேண்டிய சூழ்நிலை கூட உண்டாகும்.

இதே போல் தான் யாருக்காவது நாம் பணத்தை கொடுத்து விட்டோம் அல்லது கடனாக கொடுத்து விட்டோம் என்றால் அவர்களிடம் இருந்து கொடுத்த பணத்தை திரும்ப வாங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். வட்டிக்கு கொடுத்தாலும் சரி அல்லது சும்மா சாதாரணமாக வட்டியில்லா கடனாக கொடுத்தாலும் சரி கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வேண்டும் என்று போராடக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். இவை அனைத்தையும் தீர்ப்பதற்கு தை அமாவாசை என்பது நல்ல சிறப்பு மிகுந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் நாம் ஒரு மண்பானையை வைத்து இந்த முறையில் பரிகாரம் செய்ய கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கும் கடனாக வாங்கிய பணத்தையும் திரும்ப அடைக்க முடியும். அந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தை அமாவாசை பரிகாரம்

அமாவாசை என்றதுமே அனைவருக்கும் நம்முடைய முன்னோர்களை வழிபாடு செய்வதற்குரிய நாள் என்று தான் தெரியும். பலரும் அன்றைய தினத்தில் முன்னோர்களை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். மிகவும் குறிப்பிடத்தக்க அமாவாசைகளில் ஒன்றாக திகழ்வதுதான் தை அமாவாசை. இந்த தை அமாவாசை நாள் அன்று நாம் செய்யக்கூடிய வழிபாடும் பரிகாரமும் பல மடங்கு நமக்கு பலனை தரும் என்றே கூற வேண்டும். அப்படி சிறப்பு மிகுந்த தை அமாவாசை என்பது ஜனவரி 29ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. அன்றைய தினத்தில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் நம் வாழ்க்கையில் பணம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்துமே தீர்த்து வைக்கும். அந்த பரிகாரத்தை இப்பொழுது பார்ப்போம்.

இதற்கு நமக்கு ஒரு சிறிய அளவிலான மண்பானை வேண்டும். முதல் நாளே கடைக்கு சென்று மண்பானையை வாங்கிக் கொள்ளுங்கள். அவ்வாறு வாங்கும் பொழுது அதை மட்டும் வாங்காமல் அதனுடன் வேறு ஏதாவது ஒரு மண் சம்பந்தப்பட்ட பொருளையும் சேர்த்து வாங்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் அந்த மண்பானையில் ஒரு டிக் மார்க்கை போட்டு வாங்க வேண்டும். அப்பொழுதுதான் அது சுப காரியங்களுக்கு உகந்ததாக கருதப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மண்பானையை வீட்டிற்கு வாங்கி வந்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அமாவாசை தினத்தன்று காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து இந்த மண்பானையில் சிறிது மஞ்சள் தூள், சிறிது குங்குமம், ஒரு ரூபாய் நாணயம் இவை மூன்றையும் போட்டு மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர வேண்டும், கொடுத்த பணம் திரும்ப வர வேண்டும், நாம் பிறருக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும் கொடுக்க வேண்டும் என்று முழு மனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு அருகில் அரசமரம் இருக்கும் இடத்திற்கு இந்த பானையை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். இதோடு இந்த பானை நிறைய தண்ணீர் ஊற்றுவதற்கு தேவையான அளவு தண்ணீரையும் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். ஆலமரத்தின் அடியில் நாம் எடுத்துச் சென்ற பானையை புதைக்கும் அளவிற்கு பள்ளத்தை நோண்டி, பானை நிறைய தண்ணீரை ஊற்றி அந்த பள்ளத்திற்குள் வைத்து மண்ணை போட்டு அந்தப் பானையை மூடி விட வேண்டும்.

- Advertisement -

பிறகு உங்களுடைய இரண்டு கைகளால் பானை புதைக்கப்பட்ட இடத்தில் முழு மனதோடு உங்களுடைய பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு தொட்டு வணங்க வேண்டும். இப்படி ஒரு முறை மட்டும் இந்த பரிகாரத்தை முழுமனதோடு செய்தாலே நம்முடைய வாழ்க்கையில் கடன் தொடர்பாக இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும். அது தீர்வதற்குரிய வாய்ப்பை மகாலட்சுமி தாயார் அருள்வார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் தேய தேய்பிறை பிரதோஷ வழிபாடு

ஒரே ஒருமுறை முழுமனதோடு இந்த பானை பரிகாரத்தை யார் ஒருவர் தை அமாவாசை நாளன்று செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் கடன் என்ற பேச்சுக்கு இடமில்லாமல் போய்விடும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -