- Advertisement -
ராசி பலன் | Indraya rasi palan

இன்றைய ராசிபலன் – 02 செப்டம்பர் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கும் நாள். நீண்ட நாள் நீங்க பட்ட கஷ்டத்திற்கு ஒரு நல்ல பலன் கிடைக்கும். முருகன் வழிபாடு செய்வது மனதிற்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். நிதிநிலைமை சீராகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனதை ஒருநிலை படுத்த வேண்டும். தேவையில்லாத சந்தேகங்கள் குழப்பங்கள் மனதில் உண்டாகும். மனது சலனம் உங்களுடைய வேலையை கெடுக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே முழு கவனத்தோடு செயல்படுங்கள். இறை நம்பிக்கையோடு வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுறுசுறுப்பு இருக்கும். உற்சாகமாக செயல்படுவீர்கள். விருந்தாளிகளின் வருகையால், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வேலை பளு அதிகரித்தாலும், சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மன நிம்மதி கிடைக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும்.  இதையெல்லாம் இழந்துவிட்டோமோ என்று சிந்தித்துக் கொண்டிருந்த உங்கள் மனதிற்கு நல்ல ஆறுதல் கிடைக்கும் நாள் இன்று.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் குழப்பம் நிறைந்த நாளாக தான் இருக்கும். யோசித்துக் கொண்டே இருப்பதில் நேரம் போவது தெரியாது. வேலையிலும் வியாபாரத்திலும் கோட்டை விட வாய்ப்பு உள்ளது. கவனத்தோடு இருங்கள். நேரத்தை வீணடிக்க வேண்டாம். அதிகநேரம் கைபேசி பயன்படுத்த வேண்டாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஆர்வம் அதிகரிக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக்கொள்வீர்கள். மாணவர்கள் இளைஞர்களுக்கு இன்று நல்லது நடக்கும். தேவையில்லாத டென்ஷன் குறையும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வீண் விரைய செலவுகள் குறையும். சேமிப்பு அதிகரிக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று புது முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். வியாபாரத்திற்கு தேவையான வங்கி கடன்கள் முயற்சிக்கலாம். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நல்ல வழி கிடைக்கும். விவசாயிகளுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். சின்ன சின்ன எதிரி தொல்லை வரும். குடும்ப உறவுகளுக்குள் வாக்குவாதம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். நிதானமாக பேசுங்கள். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வேலை வியாபாரத்தில் உயர் அதிகாரிகள் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பெருமையான நாளாக இருக்கும். தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய கௌரவமான சூழ்நிலை உண்டாகும். எந்த இடத்தில் எல்லாம் உங்களுக்கு அவமானம் ஏற்பட்டதோ, அந்த இடத்தில் எல்லாம் உங்களுக்கான நல்ல பெயர் தேடி வரும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று சாதனை படைக்க கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு வெளிப்படும். சோம்பேறித்தனம் விலகும். இறை நம்பிக்கை அதிகரிக்கும் நாள் இன்று.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்படக்கூடாது, செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். தேவை இல்லாத பஞ்சாயத்தில் தலையிட வேண்டாம். உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். கூடுமானவரை இன்று பேசுவதை குறைத்து கொண்டாலே முக்கால்வாசி பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவு இருக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட விரிசல் சரியாகும். நீண்ட தூர பயணங்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் செலவுகள் அதிகரிக்கச் செய்யும். ஆனால் செலவுக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். கூடுமானவரை சொன்ன வாக்கை காப்பாற்றும் பழக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள். எதிர்காலத்திற்கு நல்லது.

- Advertisement -