- Advertisement -
வாழ்க்கை வரலாறு

காமராஜர் கட்டுரை | Kamarajar katturai in Tamil

காமராஜர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை – Kamarajar speech in Tamil

ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்திய நாடு விடுதலை பெற்ற பிறகு தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற முதலமைச்சர்களில் திரு. “காமராஜர்” பல்வேறு வகையில் தனி சிறப்புகளை கொண்ட ஒரு மனிதராகவே பெரும்பாலான மக்களால் பார்க்கப்படுகிறார். தமிழகத்தில் காமராஜர் செய்த 9 ஆண்டு கால ஆட்சி தான் “தமிழகத்தின் பொற்காலம்” என எல்லோராலும் போற்றப்படுகின்றது. அந்த வகையில் நான் விரும்பும் தலைவர் என்ற வகையில் பெருந்தலைவர் காமராஜர் குறித்த ஒரு சிறப்பான கட்டுரையை (Kamarajar katturai in Tamil) இங்கு பார்ப்போம் வாருங்கள்.

காமராஜர் கட்டுரை – Kamarajar katturai in Tamil :

தோற்றம்
கல்வி
விடுதலை போராட்டம்
கட்சி
தமிழக முதலமைச்சர்
திட்டங்கள்
கிங்மேக்கர்
இறப்பு

நான் விரும்பும் தலைவர் காமராசர் தோற்றம் – காமராஜர் கட்டுரை

Kamarajar katturai in Tamil: 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி தமிழ்நாட்டின் விருதுநகரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார் காமராசர்(Kamaraj). பெற்றோர் இவருக்கு முதலில் காமாட்சி என பெயர் வைத்தனர். அந்தப் பெயரை பின்பு “காமராஜர்” என மாற்றினர்.

- Advertisement -

கல்வி கற்க முடியாத காரணம் – Kamaraj Speech in Tamil

காமராஜர் தனது ஆரம்பகால பள்ளிப்படிப்பை விருதுநகரில் சத்திரிய பாடசாலையில் படித்தார். 6 ஆம் வகுப்பு படிக்கும் போது யாரும் எதிர்பாராதவிதமாக, அவரது தந்தை இறந்து போனார். தன் வறுமைநிலை காரணமாகவும், குடும்பப் பொறுப்பை சுமக்க வேண்டிய காரணமாகவும் காமராஜர் தனது மேற்படிப்பை தொடர முடியாமல் போனது. பள்ளிக் கல்வியை தொடர முடியாத காமராசர், தனது மாமா சொந்தமாக வைத்திருந்த துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்து பணிபுரிய தொடங்கினர்.

இந்திய விடுதலை போராட்டம் – Kamarajar katturai in Tamil language

Kamarajar Tamil Katturai: காமராஜர் பிறந்த பொழுது இந்திய நாடு ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலம் என்பதால் தனது இளம் வயது முதலே இந்திய விடுதலை போராட்டங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். இதனால் தன்னுடைய 16 வது வயதில், அதாவது 1919 ஆம் ஆண்டு அப்பொழுது இந்திய விடுதலைக்கு போராடிக் கொண்டிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.

- Advertisement -

உணவில் சேர்க்கும் உப்புக்கு ஆங்கிலேயர்கள் வரி விதித்ததால் 1930 ஆம் ஆண்டு ராஜாஜி என அழைக்கப்படும் திரு. இராஜகோபாலாச்சாரி அவர்களின் தலைமையில் தமிழ்நாட்டின் வேதாரண்யம் பகுதிக்கு உப்பு காய்ச்ச செல்லும் பேரணியில் பங்கேற்ற காமராஜர், ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு 1931 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் கையெழுத்தான காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் காமராஜர் உட்பட அனைத்து சுதந்திரப்போராட்ட கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதையும் படிக்கலாமே: பாரதியார் வாழ்க்கை வரலாறு

காந்தியின் ஒத்துழையாமை இயக்கம், கேரளத்தில் வைக்கம் சத்தியாகிரகம், மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் நடைபெற்ற கொடி சத்தியாகிரகம் உள்ளிட்ட ஏராளமான சுதந்திர போராட்ட நிகழ்வுகளில் காமராசர் பங்கேற்றார். மேலும் சென்னையில் வாள் சத்தியாக்கிரகம் மற்றும் நீல் சிலை சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார்.

- Advertisement -

கட்சி பொறுப்பில் காமராஜர் – Kamarajar Katturai In Tamil Language

Kamarajar patri katturai in Tamil: ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக பல போராட்டங்களில் பங்கேற்ற காமராஜர் தன் வாழ்நாளில் மொத்தம் 6 முறை கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தார். இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக செயலாற்றினார் 1936 -ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவரான திரு. சத்தியமூர்த்தி அவர்கள் தனது கட்சியின் செயலாளராக திரு. காமராஜரை நியமித்தார். திரு. சி. சத்தியமூர்த்தி அவர்களை தனது அரசியல் குருவாக காமராசர் மதித்துப் போற்றினார்.

தமிழக முதலமைச்சர் காமராஜர் – Kamarajar katturai in Tamil

1953 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த திரு ராஜகோபாலாச்சாரி அவர்கள் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்திற்கு தமிழகமெங்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதன் காரணமாக ராஜகோபாலாச்சாரி பதவி விலகினார். எனினும் முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்த சி. சுப்பிரமணியம் அவர்களை முன்மொழிந்தார்.

இறுதியில் சி. சுப்பிரமணியம் மற்றும் அவரின் ஆதரவாளரும், பிற்கால தமிழக முதலமைச்சருமான திரு. பக்தவச்சலம் அவர்களை காட்டிலும், காமராஜர் பெருவாரியான காங்கிரஸ் கட்சியினரின் ஆதரவு பெற்று 1954 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி. சுப்பிரமணியம் மற்றும் திரு பக்தவச்சலம் அவர்களையும் தனது அமைச்சரவையில் அமைச்சர்களாக நியமித்தார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றதும் காமராஜர் முதல் வேலையாக திரு. ராஜகோபாலாச்சாரி அவர்கள் கொண்டுவந்த குலக்கல்வித் திட்ட முறையை ஒழித்து, பல்வேறு காரணங்கள் கூறி மூடப்பட்டிருந்த 6,000 திற்கும் மேற்பட்ட பள்ளிகளை மீண்டும் திறந்தார்.

கல்வி கண் திறந்த காமராஜர் – Kamarajar speech in Tamil

கல்வியின் நாயகன் காமராஜர் கட்டுரை: தன் சிறு வயதில் வறுமை காரணமாக கல்வி கற்க முடியாமல் போனதை எண்ணி எப்போதும் வருந்திய காமராஜர், தனக்கு ஏற்பட்ட இந்த நிலை வேறு எந்த குழந்தைக்கும் ஏற்படக் கூடாது எனக் கருதி தமிழகத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி மொத்தம் 17,000திற்கும் மேற்பட்ட பள்ளிகளை திறந்தார்.

அத்தோடு மட்டுமில்லாமல் அன்றைய காலத்தில் வறுமையின் காரணமாக சரியாக உணவு சாப்பிட முடியாமல் அவதிப்பட்ட பள்ளி குழந்தைகள் சாப்பிட, “மதிய உணவு திட்டம்” எனும் அற்புதமான திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தியாவில் இதுவரை தொடங்கப்பட்ட திட்டங்களில் சிறந்தது இது தான் என போற்றப்படுகிறது.

ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தில் கல்வி கற்றோரின் எண்ணிக்கை 7 சதவீதமாக இருந்தது. காமராஜர் பள்ளி கல்வி துறையில் எடுத்த புரட்சிகரமான நடவடிக்கையால் கல்வி கற்றோரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. இதன் காரணமாக காமராஜர் “கல்வி கண் திறந்த காமராஜர்” என சிறப்பு பட்டதோடு அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

காமராஜரின் தொழில்துறை சிறப்பு திட்டம் – Kamarajar history in Tamil katturai

Kamarajar katturai in Tamil language: இந்தியாவில் தொழில் துறை மிக சிறப்பாக இருந்தால் மட்டுமே நாடு வளம் பெறும் என தொலைநோக்கு சிந்தனை கொண்ட காமராஜர், பல தொழில் துறைகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தார் என்கிற புகழ் பெற்றார் அந்த வகையில்

  • சென்னை மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
  • பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை
  • திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ்
  • கல்பாக்கம் அணுமின் நிலையம்
  • ஊட்டி பிலிம் தொழிற்சாலை
  • கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை
  • நெய்வேலி நிலக்கரி நிறுவனம்

போன்ற பல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க வழிவகை செய்தார். காமராஜர் அவர்கள் இத்தகைய தொழிற்சாலைகளை தமிழகத்தில் அமைத்து அன்றைய காலத்தில் தமிழகத்தில் இருந்த வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை குறைக்க முயற்சி செய்தார்.

காமராஜரின் நீர்ப்பாசன திட்டங்கள் – Kamarajar katturai in Tamil

காமராஜரின் புகழை பறைசாற்றும் மற்றொரு திட்டமாக அவரின் நீர் மேலாண்மை மற்றும் நீர் பாசன திட்டங்கள் இருந்தன அந்த வகையில்

  • மேட்டூர் கால்வாய் திட்டம்
  • பவானி அணை நீர்த்தேக்கத் திட்டம்
  • காவிரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்

காமராஜர் கட்டிய அணைகள் (Kamarajar important points in Tamil) – காமராஜர் கட்டுரை

  • மணி முத்தாறு
  • சாத்தனூர்
  • அமராவதி
  • வைகை
  • கிருஷ்ணகிரி
  • புள்ளம்பாடி
  • நெய்யாறு
  • ஆரணி

போன்ற பல அணைகளை கட்டி தமிழகத்தில் நதி நீரை நம்பி செய்யப்பட்ட, வேளாண் தொழில் சிறக்க வழி வகை செய்தார். இதுவரை தமிழகத்தில் அதிகம் அணை கட்டிய தலைவர் என்கிற பெருமையையும் காமராஜர் பெறுகிறார்.

இளைஞர்களுக்கு வாய்ப்பு – காமராஜர் கட்டுரை

1954 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்ற காமராஜர் 1963ஆம் ஆண்டு வரை ஒன்பது ஆண்டுகாலம் தமிழகத்தை மிக சிறப்பான முறையில் ஆட்சி செய்தார். எனினும் காங்கிரஸ் கட்சியிலும், அரசியல் ரீதியான நிர்வாகப் பொறுப்புகளிலும் இளைஞர்களுக்கு வழி ஏற்படுத்தும் விதமாக தன் முதலமைச்சர் பதவி காலம் முடிவதற்கு முன்பாகவே, காமராசர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் தன்னைப் போலவே நாடு முழுவதும் இருக்கின்ற காங்கிரஸ் கட்சி தலைவர்கள் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று பல முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். காமராஜரின் இந்த திட்டத்தை ஆங்கிலத்தில் அவரின் பெயரின் முதல் எழுத்தான K
கொண்டு K – PLAN என அழைக்கப்பட்டது.

காமராஜருக்கு இருந்த இத்தகைய செல்வாக்கை கண்டு வியந்த அப்போதைய காங்கிரஸ் கட்சித் தலைவரும், இந்திய பிரதமருமான ஜவகர்லால் நேரு, காமராஜரை 1963-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமித்தார். காமராஜர் அவர்கள் இறக்கும் வரை அக்கட்சியின் தலைவராக இருந்தார்.

கிங்மேக்கர் காமராஜர் – காமராஜர் கட்டுரை

1964 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் நேரு இறந்த பிறகு காமராஜர் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு நாடெங்கும் ஏற்பட்டிருந்த நிலையில், தான் அந்த பதவியை ஏற்காமல் காங்கிரஸ் கட்சியில் இருந்த சுதந்திர போராட்ட வீரரான திரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்களை பிரதமராக முன்மொழிந்தார்.

1966 ம் ஆண்டு தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட, தாஷ்கண்ட் நகருக்கு சென்ற லால்பகதூர் சாஸ்திரி மர்மமான முறையில் இறந்த பொழுது, அடுத்த பாரத பிரதமர் யார்? என்ற கேள்வி எழுந்தது. அப்போது மறைந்த முன்னாள் பிரதமர் ஜவர்கலால் நேரு அவர்களின் மகளான திருமதி. இந்திரா காந்தியை பிரதமராக காமராஜர் முன்மொழிந்தார்.

தான் பிரதமராக 2 முறை வாய்ப்புகள் வந்த பொழுதும், அப்பதவியை ஏற்காமல் மற்றவருக்கு பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்ததால் காமராஜரை “கிங்மேக்கர்” என அவரின் மீது அன்பு கொண்ட தொண்டர்கள் அழைத்தனர்.

காமராஜர் இறப்பு – காமராஜர் கட்டுரை

தன் வாழ்நாளில் மக்களுக்கான பல மகத்தான திட்டங்களை செயல்படுத்திய காமராஜர் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி தனது 72வது வயதில் காலமானார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். அப்போதைய தமிழக அரசால் காமராஜரின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. ஏராளமான அவரது தொண்டர்களும், லட்சக்கணக்கான மக்களும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

மனிதருள் மாணிக்கம் காமராஜர் – Kamarajar katturai in Tamil

காமராஜர் எப்போதும் எளிமையை விரும்பிய ஒரு மனிதராக இருந்தார். அவர் தான் எப்போதும் கதர் ஆடைகளை அணிவதை வழக்கமாக கொண்டிருந்தார். திருமணம் செய்து கொண்டால் மக்கள் சேவை பாதிக்கப்படும் என திருமணம் தவிர்த்து தியாக வாழ்க்கை வாழ்ந்தார். தான் அரசியல் தலைவராக இருந்தாலும் தனக்கும், தனது குடும்பத்திற்கும் எத்தகைய சிறப்பு சலுகைகளையும் அரசு அதிகாரிகள் தனக்கு தெரியாமல் கூட செய்யக் கூடாது என்பதில் மிக கண்டிப்புடன் இருந்தார். முதல்வரான தனக்கு வழங்கப்படுகின்ற அதிக பட்சமான காவல்துறை பாதுகாப்பு என்பது தன் சார்பில் அரசுக்கு செய்யும் வீண் செலவு என கருதி அதை தவிர்த்தார்.

  • 130 ரூபாய்
  • ஒரு ஜோடி செருப்பு
  • நான்கு சட்டைகள்
  • நான்கு வேஷ்டிகள்
  • சில புத்தகங்கள்
இதையும் படிக்கலாமே: காமராஜர் வாழ்க்கை வரலாறு

இதுவே திரு காமராஜர் அவர்கள் தனது ஒன்பது ஆண்டு கால முதல்வராக இருந்த பொழுது சம்பாதித்த சொத்துக்கள் எனவும், இது அவரின் நேர்மைக்கும், ஊழல் கரை படியாத கரங்களுக்கும் ஒரு சான்று என அவரை எளிமை மற்றும் நேர்மையின் உருவமாக வணங்கும் மக்கள் கருதுகின்றனர்.

- Advertisement -