
ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கான முயற்சிகளை செய்து அந்த முயற்சிகளின் பலனால் பல முன்னேற்றங்களை பெற்றார் என்றால் உடனே அவருக்கு கண் திருஷ்டி என்பது ஏற்பட்டுவிடும். அவரை சுற்றி இருப்பவர்களும் அவருடன் இருப்பவர்களும் அவரை பார்ப்பவர்களும் அவனுக்கு என்ன என்று கூறினாலேயே அதனால் கண் திருஷ்டி என்பது வந்துவிடும். இப்படி கண் திருஷ்டி வந்த பிறகு அவர்களால் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாமல், எவ்வளவு முயற்சி செய்தாலும் அதில் தடைகள் என்பது வந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட தடைகளை விலக்கவும் கண்திருஷ்டி நீங்கவும் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கண் திருஷ்டி என்பது அனைவருக்குமே ஏற்படும். நல்ல நிலையில் இருப்பவர்கள் ஆக இருந்தாலும் சரி கஷ்டப்படுகின்ற சூழ்நிலையில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி கண்டிப்பாக முறையில் கண் திருஷ்டி என்பது உண்டாகும். ஒரு நல்ல உடையை உடுத்தினால், புதிய நகைகளை அணிந்தால், மகிழ்ச்சியுடன் இருந்தால், வேலை கிடைத்தால், வேலையில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைத்தால், புதிதாக தொழில் ஆரம்பித்தால், தொழில் நல்லவிதமாக சென்றால், நன்றாக படித்தால், படித்து நல்ல விதத்தில் தேர்ச்சி பெற்றால், எது நடந்தாலும் அதை பார்த்து அப்படியா என்று கூறுவதற்கு ஆள்கள் இருப்பார்கள்.
கண் திருஷ்டி என்பது வந்து விட்டால் நம்மால் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் சோம்பேறித்தனம் வந்துவிடும், உடல் நல பாதிப்பு ஏற்படும், தேவையில்லாத மனவேதனைக்கு ஆளாகி அழுகும் சூழ்நிலைகூட உண்டாகும், எப்பொழுதுமே உடலில் ஒருவித சோர்வு ஏற்படும். இப்படி பல பாதிப்புகளை நம்மால் உணர முடியும். இந்த பாதிப்புகள் ஏற்பட்டாலே நமக்கு கண் திருஷ்டி ஏற்பட்டுவிட்டது என்று பொருள்படும்.
இதனால் தான் அன்றைய காலத்தில் சிறு குழந்தைகளுக்கு உணவளிக்கும் பொழுது யாராவது அதை பார்த்து விட்டார்கள் என்றால் அந்த குழந்தைக்கு கடைசியாக அந்த உணவை சுற்றி போட்டு விடுவார்கள். பெற்ற தாயின் கண் கூட குழந்தையை பாதிக்கும் என்று கூட கூறுவார்கள். அந்த அளவிற்கு கண் திருஷ்டி மிகவும் மோசமான ஒன்றாக திகழ்கிறது. அந்த கண் திருஷ்டியை நீக்குவதற்குரிய ஒரு எளிமையான பரிகாரத்தை பார்ப்போம்.
இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக ஒரு சிறிய வெள்ளை நிற பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பேப்பரில் ஒரு கற்பூரம் ஒரு கிராம்பு இதை வைத்து மடித்து நம்முடைய தலையணைக்கு கீழ்வைத்து படுத்து உறங்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து முகம் கை கால்களை கழுவி விட்டு நம்முடைய இடது கையில் மடித்து வைத்திருக்கும் அந்த கற்பூரம் கிராம்பை எடுத்து நம்முடைய தலையை வலது புறமாக ஒரு முறையும், இடது புறமாக ஆறுமுறையும் நாமே சுற்றிக்கொள்ள வேண்டும்.
பிறகு இதை ஒரு அகல் விளக்கில் வைத்து எரித்து விட வேண்டும். இப்படி செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற கிழமைகளில் நாம் செய்யும் பொழுது நமக்கு ஏற்பட்ட கண் திருஷ்டி பாதிப்புகள் அனைத்தும் நீங்கும்.
இதையும் படிக்கலாமே:எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி மகாலட்சுமி வீட்டிற்குள் வர செய்ய வேண்டிய பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு எப்பேர்பட்ட கண் திருஷ்டியாக இருந்தாலும் தீய சக்தியாக இருந்தாலும் அவை அனைத்தும் விலகி அவர்களின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை பெறுவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.