- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎதிர்மறை ஆற்றல்கள் நீங்கி மகாலட்சுமி வீட்டிற்குள் வர செய்ய வேண்டிய பரிகாரம்

எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி மகாலட்சுமி வீட்டிற்குள் வர செய்ய வேண்டிய பரிகாரம்

- Advertisement -

ஒருவருடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் இருந்தால் அந்த வீட்டில் மகாலட்சுமி குடியிருக்க மாட்டாள் என்று கூறப்படுகிறது. மேலும் எதிர்மறை ஆற்றல்கள் ஒரு வீட்டில் இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையற்ற பிரச்சினைகளும், உடல் உபாதைகளும், மன வருத்தங்களும், கஷ்டங்களும், கவலைகளுமே நீடிக்கும் என்றும் அவை அனைத்தும் நீங்குவதற்கு வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை விலக்க வேண்டும் என்றும் அதே சமயம் மகாலட்சுமி தாயாரின் அருளை பெற்றால் தான் வீட்டில் நன்மைகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த எதிர்மறை ஆற்றலை நீக்கி மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மகாலட்சுமி வீட்டிற்குள் வர பரிகாரம்

ஒரு வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாது. அந்த வீட்டிற்குள் யார் வந்தாலும் அவர்களுக்கும் அந்த எதிர்மறை ஆற்றலால் பாதிப்புகள் ஏற்படும். மேலும் வீட்டின் இருப்பவர்களால் எந்தவித நல்ல முன்னேற்றமான நிலைக்கும் போக முடியாது என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றல்களை நீக்குவதற்கு உதவக்கூடிய தெய்வங்கள் மூன்று பேர் இருக்கிறார்கள்.

- Advertisement -

வீரபத்திரர், காலபைரவர், நரசிம்மர் இவர்கள் மூவரையும் நாம் வழிபடும் பொழுது நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. இந்த மூன்று தெய்வங்களில் ஏதாவது ஒரு தெய்வம் வீற்றிருக்கும் ஆலயத்திற்கு சென்று அவர்களுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை வாங்கி வரவேண்டும். அதற்கு முன்பாக வீட்டை சுத்தம் செய்து வெள்ளை அடித்து தேவையற்ற பொருட்கள் அனைத்தையும் போட்டுவிட்டு தேவையான பொருட்களை மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த தீர்த்தத்தை எடுத்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இப்படி தெளிப்பதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும். இதோடு சேர்த்து சுதர்சன ஹோமம் செய்வது என்பது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. எப்பேர்பட்ட எதிர்மறை ஆற்றலாக இருந்தாலும், தீய சக்தியாக இருந்தாலும், ஏவல், பில்லி, சூனியம் போன்ற எப்பேர்பட்ட விஷயமாக இருந்தாலும் இந்த வழிமுறையை செய்தால் அவை அனைத்தும் வீட்டை விட்டு வெளியேறிவிடும்.

- Advertisement -

இதே சமயம் நம் வீட்டிற்குள் மகாலட்சுமி தாயாரை அழைத்து வரவேண்டும் என்னும் பட்சத்தில் ரத்த சந்தனம் என்று நாட்டு மருந்து கடைகளில் விற்கும். அந்த சந்தனத்தை வாங்கி பன்னீர் ஊற்றி குழைத்து அதை நம்முடைய இஷ்ட தெய்வத்தின் ஆலயத்திற்கு சென்று அந்த தெய்வத்தின் மார்பிலோ அல்லது பாதத்திலோ வைத்து வீட்டிற்கு வாங்கி வர வேண்டும். வாங்கி வந்த ரத்த சந்தனத்தை தண்ணீர் ஊற்றி கரைத்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.

இப்படி தெளிப்பதன் மூலம் மகாலட்சுமி தாயார் நம் வீட்டிற்குள் வருவார் என்று கூறப்படுகிறது. ஆலயத்தில் சந்தனத்தை வைத்து தர மாட்டார்கள் என்னும் பட்சத்தில் நம் வீட்டில் இருக்கக்கூடிய தெய்வ படத்தின் மார்பில் கூட நாம் இந்த சந்தனத்தை வைத்து வழிபாடு செய்துவிட்டு வீடு முழுவதும் கரைத்து தெளிக்கலாம்.

இதையும் படிக்கலாமே:பணவரவைத் தரும் ஆடி சஷ்டி வழிபாடு

அதிசக்தி வாய்ந்த இந்த மூன்று தெய்வங்களை வழிபடுவதோடு ரத்த சந்தனத்தையும் வீட்டில் தெளித்து வர வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி மகாலட்சுமி வீட்டிற்குள் வந்து லட்சுமி கடாட்சத்தோடு இருக்கலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்