- Advertisement -

தவறான பாதையில் செல்லும் கணவரை சரி செய்ய பரிகாரம்.

- Advertisement -

நிறைய மனைவிமார்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை தன்னுடைய கணவன்மார்கள் சொல்பேச்சு கேட்பதில்லை. தவறான பாதையில் பயணம் செய்கிறார்கள். கெட்ட பழக்கங்கள் அதிகமாக இருக்கிறது. மனைவியோடு ஒற்றுமை இல்லாமல் குடும்பத்தில் சதாகாலமும் சண்டை போட்டுக் கொண்டிருப்பது, இது போன்ற நிறைய பிரச்சனைகள் உள்ளது. இதெல்லாம் தவறு என்பது அவர்களுக்கே தெரியும்.

இந்த கெட்ட பழக்கம் நமக்கு இருந்தால் நம்முடைய ஆரோக்கியம் கெட்டுப் போய்விடும், குடும்பத்தில் பிரச்சனை வரும் என்பதும் புரியும். ஆனாலும் அந்த தவறான பழக்க வழக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் சிக்கி இருப்பார்கள். இதற்கு மனைவிமார்கள் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டு இருக்கலாம். இதற்கு மருத்துவர் ரீதியாக கூட நீங்கள் சில முயற்சிகளை மேற்கொண்டு இருப்பீர்கள். அதெல்லாம் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அந்த மருத்துவத்தை தொடருங்கள். கூடவே ஜோதிடம் சொல்லக்கூடிய இந்த ஒரு பரிகாரத்தையும் செய்து பாருங்கள். நிச்சயம் 26 நாட்களில் உங்களுடைய கணவரிடம் இருக்கக்கூடிய கெட்ட பழக்கம் குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அது என்ன பரிகாரம் என்பதை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோமா.

கணவரை நல்வழிப்படுத்தும் பரிகாரம்

ஒரு அகலமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும். கணவர் காலையில் கண்விழித்த உடனேயே, அந்த நல்லெண்ணையில் உங்களுடைய கணவரின் முகத்தை பார்க்க செய்ய வேண்டும். அந்த நல்லெண்ணெயானது உங்கள் கணவரிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றலை எல்லாம் ஈர்த்துக் கொள்ளும்.

- Advertisement -

எதிர்மறை ஆற்றல் அவர் உடம்பை விட்டு விலகும் போது கெட்ட எண்ணங்களும், கெட்ட பழக்க வழக்கங்களும் அவரை விட்டு விலகும் என்பதுதான் இந்த பரிகாரத்தில் நம்பிக்கையாக இருக்கிறது. இதே எண்ணெயை 26 நாளும் பயன்படுத்தலாம். 26 நாட்கள் தொடர்ந்து காலை கண்விழித்ததும் நல்லெண்ணெயில் கணவர் தன்னுடைய முகத்தை பார்க்க வேண்டும். இவ்வளவு தான் பரிகாரம். குலதெய்வத்தை மனதில் நினைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

26 நாள் முடிந்தவுடன் அந்த எண்ணெயை எதற்கும் பயன்படுத்தக் கூடாது. கொண்டு போய் கால் படாத இடத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக கொட்டி விட்டு வரவும். இவ்வளவு தான். இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் கணவருடைய நடவடிக்கையில் வித்தியாசங்கள் தெரியும்.

- Advertisement -

என்னுடைய கணவருக்கு கெட்ட பழக்கம் கிடையாது. ஆனால் கணவன் மனைவிக்குள் ஒரு அன்னியோன்யம் இல்லை, தாம்பத்தியம் இல்லை என்ன செய்வது. மனைவி தினமும் மஞ்சள் தேய்த்து குளித்தால் அவளிடம் இருக்கும் வசீகரம் அதிகரிக்கும். கணவன் மனைவி வசியம் ஏற்படும். குளித்து முடித்துவிட்டு நெற்றியில் தினமும் மஞ்சள் சந்தன பொட்டு இட்டுக் கொண்டால் கணவன் மனைவி வசியம் ஏற்படும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

மனைவி தன்னுடைய நெற்றியில் சந்தனத்தை இட்டுக் கொள்ளும் போது கணவரை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். மனைவிக்கு கணவர் மீது ஈர்ப்பு இல்லை எனும் பட்சத்தில், கணவரும் சந்தனத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். இப்படி நெற்றியில் சந்தனம் வைக்கும் போது மனைவியின் பெயரை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்தாலே போதும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: தலைமை பொறுப்பை பெற முருகன் வழிபாடு

இதை மட்டும் செய்துவிட்டு பலனை எதிர்பார்க்காதீங்க. கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழ்வதற்கு என்னெல்லாம் வழி இருக்கிறதோ அதை எல்லாம் பின்பற்றவும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுங்கள். ஒருவருக்கு கஷ்டம் வந்தால் இன்னொருவர் உதவி செய்யுங்கள். இப்படி நீ இல்லை என்றால் நான் இல்லை என்ற ஒரு முடிவுக்கு வந்து, இந்த பரிகாரத்தை செய்யும் போது அதனுடைய பலன் உங்களுக்கு எளிதில் கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரங்களை எல்லாம் பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -